கால்நடை ஊட்டச்சத்தியல் துறை 2012-ஆம் வருடம் இளநிலை மற்றும் முதுநிலை கால்நடை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு கால்நடை ஊட்டச்சத்தியல் பற்றிய கல்வியை பயிற்றுவிப்பதற்காக உருவாக்கப்பட்டது.
இளநிலை கால்நடை மருத்துவம் (B.V.Sc.&A.H) பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்தியல் தொடர்பான நான்கு பாடப்பிரிவுகளை பயிற்றுவிக்கிறது.
இந்த துறை 2019-20 ஆம் வருடம் முதல் முதுநிலை கால்நடை மருத்துவம் (M.V.Sc) பயிலும் மாணவர்களுக்கும் பாடங்களை பயிற்றுவிக்கிறது.
பல்வேறு கால்நடைகளின் தீவன மேலாண்மை பற்றிய தொழில்நுட்பங்கள், குறைந்த செலவில் அடர்தீவனம் மற்றும் தாது உப்புக் கலவை தயாரித்தல், பசுந்தீவனங்களை ஊறுகாய் புல்லாக சேமித்து வைத்தல் போன்ற தகவல்கள் விவசாயிகளுக்கு கட்டுரைகள் மூலமாகவும், வானொலி மற்றும் தொலைகாட்சி வாயிலாகவும், பயிற்சிகள் நடத்துவதன் மூலமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது. விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கும் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
கால்நடை தீவன பகுப்பாய்வு மற்றும் தர நிர்ணய ஆய்வகம் (AFAQAL) மத்திய அரசு அளித்த நிதியான ரூபாய். 115.00 இலட்சம் செலவில்உருவாக்கப்பட்டு கால்நடை தீவனங்கள் மற்றும் பசுந்தீவனங்களில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் (NADP) ரூபாய். 184.00 இலட்சம் செலவில் தீவன பதப்படுத்தும் ஆலை நிறுவப்பட்டுள்ளது. பல்வேறு கால்நடைகளுக்கு தேவையான அடர் தீவனங்கள் மற்றும் தாது உப்புக் கலவை இங்கு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலை மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்க்கு செயல் விளக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த தீவன ஆலையில் விவசாய கழிவுப் பொருட்களை பயன்படுத்தி முழுத் தீவனம் தயாரிக்கும் இயந்திரமும் செயல்பாட்டில் உள்ளது.
பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடைஊட்டச்சத்தியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
ஒரத்தநாடு - 614 625.
தஞ்சாவூர்.
தொலைபேசி எண்: +91 4372-234012
மின்னஞ்சல்: annvcriond@tanuvas.org.in