கால்நடை நுண்ணுயிரியல் துறை 2012 ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, இளங்கலை கால்நடை மருத்துவ பட்டப்படிப்பிற்கான பாடங்களை அளித்துவருகிறது. இதைத்தவிர, கால்நடை நுண்ணுயிரியல் துறையானது ஆராய்ச்சி, நோய் புலனாய்வு, கால்நடை சிகிச்சை வளாகத்திலிருந்து பெறப்படுகின்ற மாதிகள் ஆய்வு, நுண்ணுயிர்க்கிருமிகளின் எதிருயிரி எதிர்ப்புத்தன்மை மற்றும் மூலக்கூறு ஆராய்ச்சி அடிப்படையில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோய்களை கண்டறிதல் போன்றவைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
நடைமுறை திட்டங்கள் | நிதியுதவி செய்யும் நிறுவனம் |
---|---|
கால்நடை பல்கலைக்கழக நோய் கண்டறியும் ஆய்வகம் தஞ்சாவூரில் அமைத்தல் | மாநில அரசு |
மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் அமைத்தல் | மாநில புத்தாக்க நிதி |
வளரும் நாடுகளில் கால்நடைகளில் டியூபெர்குளோசிஸ் கட்டுப்படுத்துதல் | பென்சில்வேனியா பல்கலைக்கழகம் |
இணை பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை நுண்ணுயிரியல் துறை ,
கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ,
ஒரத்தநாடு - 614 625
மின்னஞ்சல்: vmcvcriond@tanuvas.org.in