mvc

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு

கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பத் துறை


கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பத் துறை 03.04.2013 முதல் இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் பாட திட்டத்தில் கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்ப பாடங்களை கற்பிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

குறிக்கோள்கள்

குறுகியகால நோக்கங்கள்

  • பட்டதாரி மாணவர்களுக்கு கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பத்தில் கல்வி வழங்குதல்
  • இறைச்சி மற்றும் பால் பொருட்களின் தரத்தினை மேம்படுத்துவதற்கான களம் சார்ந்த ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளுதல்
  • இறைச்சி மற்றும் பால் பொருட்களை பதப்படுத்துதலில் திறன் மேம்பாட்டு திட்டங்களை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தல்

நீண்டகால நோக்கங்கள்

  • கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை வழங்குதல்
  • மதிப்பு கூட்டப்பட்ட நிலைத்தன்மை மிக்க இறைச்சி மற்றும் பால் பொருட்களை உருவாக்குதல்
  • இறைச்சி மற்றும் பால் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு திட்டங்களின் செயலாக்கம்

சேவைகள்

இந்த துறை இளநிலை மற்றும் முதுகலைப் பட்டதாரி மாணவர்களுக்கு கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பத்தில் கல்வி அளிப்பதுடன் இறைச்சி மற்றும் பால் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொழில் நுட்பத்தில் மனித வளத்தினை மேம்படுத்த தனி நபர்கள் / விவசாயிகள் / வேலைவாயப்பற்ற இளைஞர்கள் / / தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.

சுகாதாரமான இறைச்சி உற்பத்திக்கான நவீன இறைச்சி கூடத்துடன் இறைச்சி பரிசோதனை ஆய்வகம், இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருட்களை மதிப்பு கூட்டுவதற்கான வசதிகள் உள்ளன. மேலும் இந்த துறையில் பால் பதப்படுத்துதல், பால் மற்றும் பால் பொருட்களை மதிப்பு கூட்டுதல் ஆகியவற்றில் தொழில் முனைவோர்களுக்கு திறன் மேம்பாடுகளை வழங்குவதற்காக மாதிரி பால் பதப்படுத்தும் நிலையத்துடன் கூடிய “ மண்டல பால் தொழில் முனைவோர் பயிற்சி வசதிகள்” உள்ளன.

கல்வி

இளநிலை கால்நடை மருத்துவம்

இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் மாணவர்களுக்கு கீழ்கண்ட பாட பிரிவுகள் கற்பிக்கப்படுகிறது.

  • பால் மற்றும் பால் பொருட்கள் தொழில்நுட்பம்
  • கம்பளி அறிவியல்
  • இறைசிக் கூட நடைமுறைகள் மற்றும் விலங்கின உபப் பொருட்கள் தொழில்நுட்பம்
  • இறைச்சி அறிவியல்

முதுநிலை கால்நடை மருத்துவம் – கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பம்

இந்த துறை 2019 முதல் எம்.வி. எஸ்சி (கால்நடை உற்பத்தி பொருட்கள் தொழில்நுட்பம்)ஐ செயல்படுத்தி வருகிறது.

ஆராய்ச்சி

திட்டத்தின் தலைப்பு நிதி முகமை நிதி செலவு (இலட்சம்) காலம் / தொடக்க தேதி
தனுவாஸ் – டிஆர்சிஎப் திட்டம் “சோயா பால் மற்றும் பழக்கூழ் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய மதிப்பு அதிகரிக்கப்பட்ட இனிப்புத் தயிர்” தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 0.60 2013 - 2014
தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் “மண்டல பால் தொழில் முனைவோர் பயிற்சி வசதி (RDEF)” தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் 171.50 2014 - 2015
வைட்டமின் - டி மற்றும் கரோட்டின் செறிவூட்டப்பட்ட யோகர்ட் தயாரிப்பு பல்கலைக்கழக துணை திட்டம் 0.10 2020 - 2021
கொல்லிமலை மக்கள் பன்றி இறைச்சியை பதப்படுத்தும் மதிப்பீடு செய்தல் பல்கலைக்கழக - துணை திட்டம் 0.25 2020 - 2021
ஒரத்தநாடு வட்டத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் இறைச்சி நுண்ணுயிர் தரம் குறித்த ஆய்வு பல்கலைக்கழக – துணை திட்டம் 0.15 2020 - 2021

தற்போதைய ஆராய்ச்சி திட்டங்கள்

திட்டத்தின் தலைப்பு நிதி முகமை நிதி செலவு (இலட்சம்) காலம் / தொடக்க தேதி
சுய நிதி திட்டம் “உடல்நலத்திற்கேற்ற இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருட்களை பொது விற்பனைக்காக தயாரித்தல்” (திட்ட குறியீடு: 18072) தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 0.50 சுழல் நிதி: 26.02.2016 சுய நிதி: 04.12.2019
சுய நிதி திட்டம் “பொது விற்பனைக்காக மதிப்பு கூட்டிய பால் பொருட்களை தயாரித்தல் ” (திட்ட குறியீடு: 18113) தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 0.75 சுழல் நிதி: 09.05.2017 சுய நிதி: 01.09.2021

விரிவாக்கம்

வழங்கப்படும் சேவைகள்

  • சுகாதாரமான முறையில் உணவுக்கான விலங்குகள் மற்றும் கோழிகளை இறைச்சிக்காக சுத்தப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல் மற்றும் இறைச்சியினை சந்தைப்படுத்துதல்
  • பாலினை மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல்
  • கால்நடைப் உற்பத்திப் பொருட்களின் செயலாக்கம் மற்றும் மதிப்பு கூட்டுதல் பற்றிய தொழில்நுட்ப ஆலோசனைகள்

வழங்கப்படும் பயிற்சித் திட்டங்கள்

  • சுத்தமான இறைச்சி உற்பத்தி
  • இறைச்சியினை மதிப்பு கூட்டுதல்
  • சுத்தமான பால் உற்பத்தி
  • பாலினை மதிப்பு கூட்டுதல்
  • இறைச்சிக் கூட உபப் பொருட்களை பயன்படுத்துதல்
  • பால் உபப் பொருட்களை பயன்படுத்துதல்

உள்கட்டமைப்பு வசதிகள்

  • கோழிகள், இறைச்சிக்கான சிறிய மற்றும் பெரிய கால்நடைகளை இறைச்சிக்காக சுத்தப்படுத்துவதற்கான மேல்நிலை நகரும் தண்டவாள அமைப்புடன் கூடிய இறைச்சிக் கூட வசதி
  • நவீன இறைச்சிப் பதப்படுத்தும் உபகரணங்களுடன் கூடிய இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் பரிசோதனை ஆய்வகம்
  • மாதிரி நவீன பால் பதப்படுத்தும் நிலையம் – 1000 லிட்டர்/ மணி
  • நவீன தரக் கட்டுப்பாட்டு உபகரணங்களுடன் கூடிய பால் தொழில்நுட்ப ஆய்வகம்

வல்லுநர்கள்

  • மு. அண்ணா ஆனந்த், இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்
  • கோ. இராஜராஜன், உதவிப் பேராசிரியர்
  • இரா. இளவரசன், உதவிப் பேராசிரியர்
  • பா. கார்த்திக், உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பத் துறை,

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

ஒரத்தநாடு - 614 625, தஞ்சாவூர் மாவட்டம் தமிழ் நாடு.

தொலைபேசி: 04372 – 234012 / 13 / 14

மின்னஞ்சல்: lptvcriond@tanuvas.org.in