நூலகம் கடந்த 2012 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கல்லூரியின் நூலகம் கல்லூரியின் ஆய்வு, கல்வி சேவைக்கான புத்தகங்களை தருவித்தல் மற்றும் அதுகுறித்த செய்திகளை உடனுக்குடன் அளிப்பதும் முக்கியபங்காக அமைந்துள்ளது. அலுவலக முதன்மை கட்டிடத்தில் இரண்டாவது தளத்தில் 8,037.30 சதுர அடி பரப்பளவில் நூல்கள் சுழற்சி பிரிவு, மின்தகவல்கள் பிரிவு, குறிப்பெடுக்கும் பிரிவு, வாசிக்கும் பிரிவு, நகல் எடுக்கும் பிரிவு, இதழ்கள் வாசிக்கும் பிரிவு, போட்டி தேர்வுகளுக்கான குறிப்பெடுக்கும் மையம் ஆகியவற்றுடன் செயல்பட்டு வருகிறது. நூலகம் மாணவர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான நூல்கள் மற்றும் சஞ்சீகைகளை பெற்று பேணிகாத்து வருகிறது. மின் இதழ்களையும் இணையங்கள் மூலம் உடனுக்குடன் பெறுவதற்கு நூலகத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. KOHA நூலக மேலாண்மை மென்பொருள் உதவியுடன் மாணவர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு தகவல் தேவைகளை அளிப்பதற்கு நூலகம் கணிணி மயமாக்கப்பட்டுள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை | காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை |
சனிக்கிழமை | காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை |
ஞாயிற்றுக்கிழமை | காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை |
நூல்கள் சேகரிப்பு பிரிவு | 4408 நூல்கள்/ தொகுதிகள் |
இதழ்களின் தொகுப்பு | 434 |
சஞ்சிகைகளின் தொகுப்பு | 658 |
மின் தகவல் இதழ்கள்(CeRA) | 2922+ |
கால்நடை செய்திகள் அடங்கிய குறுந்தட்டுகள் | 125 |
ஆய்வு ஏடுகள் | 2 |
மின் புத்தக அச்சுக்கள் | 68 |
செய்தித்தாள்கள் | 8 |
வ.எண் | ஆவண விவரங்கள் | எண்ணிக்கை |
---|---|---|
1. | செய்தித்தாள் சேகரிப்பு | 465 |
2. | வினாவங்கி | 167 |
3. | பேராசிரியர்களின் படைப்புகள் | 254 |
4. | ஆண்டு அறிக்கை | 7 |
ஒருங்கிணைந்த மின் தகவல் இதழ்களை 2922+CeRA மூலம் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மின்னஞ்சல்: libvcriond@tanuvas.org.in