கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல். கோழியின அறிவியல் துறை.

கோழியின அறிவியல் துறையானது நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இளங்கலை (பி.வி.எஸ்சி. ஏ.எச்.) கல்வியை தொடந்து வழங்கி வருகிறது. முதுகலை படிப்புகளான எம்.வி.எஸ்.சி.மற்றும் பிஎச்.டி.முறையே 1993 மற்றும் 1995 முதல் தொடங்கப்பட்டது.

முக்கிய நோக்கங்கள்

  • இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை கற்பித்தல்
  • எம்.வி.எஸ்.சி. மற்றும் பிஎச்.டி.ஆராய்ச்சிகளை நடத்துதல்
  • பண்ணை ஆலோசனை சேவைகள்
  • முற்போக்கான விவசாயிகளுக்கு பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துதல். துறையின் பன்முக செயல்பாடுகள்.
  • இளங்கலை மற்றும் முதுகலை கல்வி
  • கோழியின் அறிவியலில் மேம்பட்ட ஆசிரியப் பயிற்சி மையம் (ICAR திட்டம்)
  • நவீன கோழிப்பண்ணை வளாகத்தை பராமரித்தல்.
  • பல கோழி இனங்களின் ஒரு நாள் வயதுடைய குஞ்சுகளை வழங்கவதற்காக குஞ்சு பொரிப்பகத்தை பராமரித்தல்.
  • முதுகலை ஆய்வுகளை நடத்துதல்
  • மற்ற கல்லூரி /பல்கலைக்கழக முதுகலை மாணவர்களுக்கு ஆராய்ச்சிகளை நடத்துதல்.
  • தேவை அடிப்படையிலான மற்றும் தொழில் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வது.
  • வணிக கோழி உற்பத்தி மேலாண்மை படிப்பில் முதுகலை டிப்ளமோ நடத்துதல்
  • 5 திறன் மேம்பாட்டு படிப்புகளை நடத்துதல்

வழங்கப்படும் படிப்புகள்

பி.வி.எஸ்சி. ஏ.எச்.

  • கால்நடை உற்பத்தி மேலாண்மை

எம்.வி.எஸ்.சி.., மற்றும் பிஎச்.டி..,

  • PSC 602 – கோழி ஊட்டச்சத்து மற்றும் தீவண மேலாண்மை (2+1)
  • PSC 603 – வணிக ரீதியான முட்டை கோழி உற்பத்தி (2+1)
  • PSC 604 – வணிக ரீதியான கறிகோழி உற்பத்தி (2+1)
  • PSC 605 – தாய் கோழிகள், ஆரோக்கியம் மற்றும் குஞ்சு பொரிப்பக மேலாண்மை (3+1)
  • PSC 606 – கோழியைத் தவிர மற்ற கோழிகளின் மேலாண்மை (2+1)
  • PSC 607 – கோழிப் பொருட்கள் தொழில் நுட்பம் மற்றும் சந்தைப்படுத்துதல் (2+1)
  • PSC 608 – கோழிப் பொருளாதரம், திட்டங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் (2+1)
  • PSC 609 – கோழி உற்பத்தி உடற்செயலியல் (2+1)
  • LPM 608 – கோழிப்பண்னை மற்றும் குஞ்சு பொரிப்ப மேலாண்மை (2+1)

பிஎச்.டி.

  • PSC 801 – பயன்பாட்டு கோழி உணவியல் (2101)
  • PSC 802 – வணிக ரீதியான கோழி உற்பத்தி (2101)
  • PSC 803 – கோழிப் பொருட்கள் தொழில்நுட்பத்தில் வளர்ச்சிகள் (2101)
  • PSC 804 – கோழி மற்றும் பண்ணை ஆரோக்கியத்தின் வளர்ந்து வரும் நோய்கள் (2101)
  • PSC 805 – மேம்பட்ட கோழி வளர்ப்பு முறைகள் (2101)
  • PSC 806 – கோழி பொருளாதாரம்ää சந்மைப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு (2101)
  • LPM 805 – கோழி உற்பத்தி நிர்வாகத்தில் முன்னேற்றங்கள் (2101)

CAFTAS திட்டம் மற்றும் முதுநிலை வகுப்புகள் குளிரூட்டப்பட்ட விரிவுரை மண்டபம்

இளநிலை படிப்புக்கான பகுப்பாய்வு கூடம், மைக்கோடாக்சின் பகுப்பாய்வு, முட்டை உள் தர அளவீடு, முட்டை ஓட வலிமையை அளவிடுதல் போன்றவற்றை மதிப்பிடுவதற்கான அதிநவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வகம்.

ஒரே நேரத்தில் 3000 கறிகோழிகளை வளர்ப்பதற்கு முற்றிலும் தானியங்கி சுற்றுச் சுழலினால் கட்டுப்படுத்தப்பட்ட கறிகோழி பண்ணை.

தடையில்லா மினசார அமைப்பு மற்றும் டிஜிட்டல் முறையில் கட்டுப்படுத்தப்பட்ட முழு தானியங்கி குஞ்சு பொரிப்பகம்.

கூண்டு மற்றும் தானியங்கி குடிநீர் அமைப்புடன் கூடிய நவீன ஐப்பானிய காடை குஞ்சு மற்றும் வளர்பருவபண்ணை

கூண்டு மற்றும் அரை தானியங்கி உணவு அமைப்புடன் கூடிய நவீன உயர்த்தப்பட்ட தாய் காடை பண்ணை.

தானியங்கி உணவு, நீர்ப்பாசனம்ää காலநிலை கட்டுப்பாடு மற்றும் விளக்கு அமைப்புடன் கூடிய நவீன உயரமான கூண்டு அடுக்கு பண்ணை.

தானியங்கி உணவு மற்றும் நீர்ப்பாசன அமைப்புடன் கூடிய நவீன வான்கோழி குஞ்சு மற்றும் வளர்பருவ பண்ணை.

தானியங்கி உணவு மற்றும் நீர்ப்பாசன அமைப்புடன் கூடிய நவீன தாய் வான்கோழி பண்ணை.

ஆழ்கூள மற்றும் கூண்டு வளாப்பு முறை ஆகிய இரண்டின் கீழும் கறிக்கோழிகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நவீன கறிகோழி பண்ணைகள்.

அரை தானியங்கி உணவு மற்றும் நீர்ப்பாசன அமைப்புடன் கூடிய நவீன கலப்பின தாய்கோழி பண்ணை

நீவன குஞ்சு மற்றும் வளர்பருவ கூண்டு, தானியங்கி முலைக்காம்பு குடிநீர் மற்றும் தானியங்கி உணவு அமைப்பு கொண்ட பண்ணை.

தானியங்கி நீர்ப்பாசன அமைப்புடன் கூடிய ஈழு பண்ணை

தானியங்கி நீர்ப்பாசன அமைப்புடன் கூடிய நெருப்பு கோழி பண்ணை

வாத்து பண்ணை.

ICAR முழுநிதியுதவி திட்டமான “பறவை அறிவியல்களில் மேம்பட்ட ஆசிரியர் பயிற்சி மையம்” இத்துறையில் செயல்படுகிறது.

ஐப்பானிய காடைகளின் “ஊட்டச்சத்து தேவைகளின் தரப்டுத்தல், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல்” பற்றிய சுழல் நிதி திட்டம்.

“ 2010 ஜனவரி 8 முதல் 10 வரை சர்வதேச கோழி கண்காட்சி மற்றும் மாநாடு – 2010 நடத்தப்பட்பட்டது.

அசீல் கோழிகளுக்கான சுழல் நிதி திட்டம்.

நாமக்கல் காடை – 1 இறைச்சி வகை ஜப்பானிய காடை, 4 –வே கிராசிங் மூலம் உருவானது.

நாமக்கல் தங்கக் காடை : ஒரு முட்டை வகை ஜப்பானிய காடை, 5 வழி கிராசிங் மூலம் உருவானது.

நாமக்கல் கோழி – 1 முட்டை உற்பத்தி நோக்கத்திற்கான பல வண்ண இறகு கொண்ட புறக்கடை கோழிவகை, 4 வழி கிராசிங் மூலம் உருவானது.

வல்லுநர்கள்

  • முனைவர். மோ.மூர்த்தி, பேராசிரியர் மற்றும் தலைவர்
  • முனைவர். கா.இராஜேந்திரன், உதவிப் பேராசிரியர்
  • முனைவர். த.வசந்தகுமார், உதவிப் பேராசிரியர்