கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல். கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை

வரலாறு

கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறையானது 1985 மற்றும் 1993 ஆண்டு இளநிலை பட்டதாரி மற்றும் முதுநிலை மாணவர்களுக்காக துவங்கப்பட்டது. இது மட்டுமின்றி இத்துறையில் கால்நடை உற்பத்தி மேலாண்மையில் முனைவர் பட்டப்படிப்பும் நடைபெற்று வருகிறது. இத்துறையில் கால்நடைகளை கையாளுதல், தீவன மேலாண்மை, கொட்டகை அமைத்தல், இனவிருத்தி மேலாண்மை, நோய் மேலாண்மை போன்ற தொழில்நுட்பங்கள் கற்றுத்தரப்படுகின்றது.

குறிக்கோள்

  • இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை கல்வி அளித்தல்
  • பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி திட்டங்களை வகுத்தல்

சேவைகள்

  • கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறையில் கால்நடை உற்பத்தி தொடர்பான தொழிநுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும்.
  • வேளாண் வானிலை சம்பந்தமான தகவல்கள் பண்ணையாளர்க்ளுக்கு வாரம் இரு முறை வழங்கப்பட்டு வருகிறது,
  • கால்நடை கழிவு மேலாண்மை சம்பந்தமான தொழிநுட்ப ஆலோசனைகள் இங்கு வழங்கப்படுகிறது.
  • தரமான சேலம் கருப்பு ஆட்டுக்குட்டிகள் கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறையில் கிடைக்கும் (உயிர் எடை – ரூ, 350/-)

கல்வி

முதுநிலை பட்டப்படிப்பு

இத்துறையில் கீழ்கண்ட முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு பாடங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

  • எல்பிஎம் 601 மாடுகள் மற்றும் எருமைகள் உற்பத்தி மற்றும் மேலாண்மை (2+1)
  • எல்பிஎம் 602 செம்மறி மற்றும் வெள்ளாடுகள் உற்பத்தி மற்றும் மேலாண்மை (2+1)
  • எல்பிஎம் 603 பன்றிகள் உற்பத்தி மற்றும் மேலாண்மை (1 + 1)
  • எல்பிஎம் 604 ஆய்வக விலங்குகள் உற்பத்தி மற்றும் மேலாண்மை (1+ 1)
  • எல்பிஎம் 605 கொட்டகை மேலாண்மை (1+1)
  • எல்பிஎம் 606 சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் கழிவுகள் மேலாண்மை (2+ 0)
  • எல்பிஎம் 607 காலநிலையியல் மற்றும் விலங்குகள் உற்பத்தி (1+ 0)
  • எல்பிஎம் 608 கோழிபண்ணை மற்றும் குஞ்சு பொறிப்பக மேலாண்மை (2+ 1)
  • எல்பிஎம் 609 பண்ணை விலங்குகளின் நடத்தை (1+ 0)
  • எல்பிஎம் 610 ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையம் (2+ 1)
  • எல்பிஎம் 611 குதிரைகள் உற்பத்தி மற்றும் மேலாண்மை (1+1)
  • எல்பிஎம் 612 வனவிலங்குகள் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு (2+ 0)
  • எல்பிஎம் 613 கால்நடை தொழில் மேலாண்மை (1+1)
  • எல்பிஎம் 691 முதுநிலை கருத்தரங்கு (1+0)
  • எல்பிஎம் 699 முதுநிலை ஆராய்ச்சி (20)

முனைவர் பட்டப்படிப்பு

  • எல்பிஎம் 801 மாடுகள் மற்றும் எருமைகள் உற்பத்தி மற்றும் மேலாண்மையில் முன்னேற்றங்கள் (3+ 0)
  • எல்பிஎம் 802 செம்மறி மற்றும் வெள்ளாடுகள் உற்பத்தி மற்றும் மேலாண்மையில் முன்னேற்றங்கள் (2+ 1)
  • எல்பிஎம் 803 பன்றிகள் உற்பத்தி மற்றும் மேலாண்மையில் முன்னேற்றங்கள் (1+1)
  • எல்பிஎம் 804 ஆய்வக விலங்குகள் உற்பத்தி மற்றும் மேலாண்மையில் முன்னேற்றங்கள் (1+1)
  • எல்பிஎம் 805 கோழி உற்பத்தி மேலாண்மையில் முன்னேற்றங்கள் (2+1)
  • எல்பிஎம் 806 சுற்றுச்சூழல் மேலாண்மையில் முன்னேற்றங்கள் (1+1)
  • எல்பிஎம் 807 குதிரைகள் உற்பத்தி மற்றும் மேலாண்மையில் முன்னேற்றங்கள் (1+0)
  • எல்பிஎம் 891 முதுநிலை கருத்தரங்கு (1+0)
  • எல்பிஎம் 892 முதுநிலை கருத்தரங்கு (1+0)
  • எல்பிஎம் 899 முதுநிலை ஆராய்ச்சி (4 + 5)

சாதனைகள்

  • முனைவர். ஜான் ஆப்ரகாம் முதுநிலை ஆராய்ச்சி பட்டப்படிப்பு ஆராய்ச்சிக்காக சிறந்த முனைவர் பட்டப்படிப்பு மாணவருக்கான தனுவாஸ் தங்கப் பதக்கம் கால்நடை மற்றும் விலங்கு அறிவியலுக்காக பி.எச்.டி தேர்வில் செயல்திறனுக்கான 2012 – ல் வழங்கப்பட்டது.
  • முனைவர். ஜான் ஆப்ரகாம் முதுநிலை ஆராய்ச்சி பட்டப்படிப்பு ஆராய்ச்சிக்காக சிறந்த வெளிச்செல்லும் முனைவர் பட்டப்படிப்பு மாணவருக்கான டாக்டர். பி. ரிச்சர்ட் மாசில்லாமனி என்டோவ்மென்ட் விருது - கால்நடை மற்றும் மீன்வளம்.
  • முனைவர். ஜான் ஆப்ரகாம் முதுநிலை ஆராய்ச்சி பட்டப்படிப்பு ஆராய்ச்சிக்காக டானுவாஸ் முன்னாள் மாணவர் சங்கம் சிறந்த முனைவருக்கான - க்கான தங்கப் பதக்கம் கால்நடை மற்றும் விலங்கு அறிவியலுக்காக, கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நாமக்கல் - 2012
  • முனைவர். ஜான் ஆப்ரகாம் முதுநிலை ஆராய்ச்சி பட்டப்படிப்பு ஆராய்ச்சிக்காக சிறந்த முனைவர் பட்டப்படிப்பு மாணவருக்கான எஸ்.கே.எம் விலங்கு தீவனங்கள் மற்றும் உணவுகள் விருது கோழியின படிப்புக்காக – 2012
  • மருத்துவர் என்.ஆர். சரவணன் சிறந்த முதுநிலை பட்டப்படிப்பு ஆராய்ச்சிக்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறவியல் பல்கலைக்கழக விருது இறைச்சி கோழிப்பண்ணை கழிவில் இருந்து உயிரியல் முறையில் மண்புழு உரம் தயாரித்தல் என்ற ஆய்விற்காக 2020 – ல் பெற்றார்

காப்புரிமை – 01

காப்புரிமை பதிவு செய்யப்பட்ட பொருட்கள் காப்புரிமை செய்யப்பட்ட பொருட்களின் விவரங்கள் ஆராய்ச்சியாளர்களின் விவரம் காப்புரிமை செய்யப்பட்ட பொருட்களின் நிலை காப்புரிமை எண்
இறந்த கோழிகளின் கொழுப்பு எண்ணையை பயன்படுத்தி பயோ டீசல் உற்பத்தி செய்தல் இறந்த கோழிகளின் கொழுப்பு எண்ணையை பயன்படுத்தி பயோ டீசல் உற்பத்தி செய்தல் முனைவர். ஜான் ஆப்ரகாம் 219/சி.எச்.இ/ /2014 371344 கொடுக்கப்பட்ட நாள்: 07.07.2021.

தொழில்நுட்பம் வெளியிடு

இறைச்சிக் கோழி கழிவுகளை மட்கு உரமாக்கும் தொழில்நுட்பம் ஆசிரியர் : முனைவர் க. சிவக்குமார் , பேராசிரியர் மற்றும் தலைவர்

வல்லுநர்கள்

  • முனைவர் க. சிவக்குமார் , பேராசிரியர் மற்றும் தலைவர்
  • முனைவர். ந.பாரதி உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு:

கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

நாமக்கல், தொலைப்பேசி எண் : 04286 – 266491 - 502

மின்னஞ்சல் : lpm-vcri-nkl@tanuvas.org.in