கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல். விரிவாக்கக் கல்வித்துறை

தோற்றம்

விரிவாக்கத் துறை 14.06.1985 இல் கல்லூரி தொடங்கியதிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்தத் துறை மே 2015 இல் கால்நடை விரிவாக்க கல்வித் துறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கால்நடை விரிவாக்க கல்வித் துறையின் மூலம் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. கால்நடை விரிவாக்க கல்வியில் இளங்கலை முதுகலை மற்றும் முனைவர் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றது. முனைவர் மற்றும் எம்.வி.எஸ்.சி. பட்டப்படிப்புகள் முறையே 1995 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டன.

இந்த துறை யின் மூலம் பல்வேறு விரிவாக்கப் பணிகளும் செய்யப்பட்டு வருகிறது. கால்நடை விரிவாக்க கல்வித் துறை கல்லூரி மற்றும் பண்ணையாளர்களுக்கு இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது. மேலும், பண்ணையாளர்களின் சந்தேகங்களுக்கு நேரடியாகவோ, தொலைபேசி மூலமோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமோ பதில் அளிக்கப்படுகிறது. தொழில் முனைவோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கால்நடை மற்றும் கோழி பண்ணை வளாகத்திற்கு பல்வேறு தொழில்நுட்பங்களை அறியும் வகையில் வழி காட்டப்படுகிறது. பண்ணையாளர்கள், பண்ணை மகளிர், திட்ட பயனாளிகள், தொழில்முனைவோர், விரிவாக்க பணியாளர்கள், வேலையில்லாத கால்நடை மருத்துவர்கள் மற்றும் சிவில் சர்வீசஸ் ஆர்வலர்கள் ஆகியோருக்கு அறிவு மற்றும் திறன் பயிற்சிகள் நடத்தப்படுகின்றது. தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டம் மற்றும் மாவட்ட கால்நடை குழு இத் துறையால் ஒருங்கிணைக்கப்படுகிறது

மேலும், பல்கலைக்கழக (TANUVAS) செய்திமடல், ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பு பிரிவாக இத்துறை செயல்படுகிறது. இது தவிர பத்திரிக்கையாளர் சந்திப்பு, மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள், பண்ணை வானொலி பள்ளி, வானொலி மற்றும் தொலைக்காட்சி பேச்சு, கருத்தரங்கு, பணியரங்கு, சமீபத்திய கால்நடை வளர்ப்பு கண்டுபிடிப்புகள்/ தொழில்நுட்பங்களை பரப்புவதற்கான தொடர்பு மன்றம் ஆகிய பணிகளையும் இத்துறையால் மேற்கொள்ளப்படுகிறது. முக்கியமான நிகழ்வுகள் புகைப்படம் மற்றும் காணொளி மூலம் ஆவணப்படுத்தப்பட்டு காப்பகப்படுத்தப்படுகின்றன.

குறிக்கோள்கள்

  • இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு விரிவாக்க கல்வி கற்பித்தல்
  • கால்நடை பண்ணையாளர்களின் தேவை அடிப்படையிலான ஆராய்ச்சியை மேற்கொள்ளுதல்
  • கால்நடை சம்பந்தமான அறிவியல் தொழில்நுட்பங்களை பல்வேறு விரிவாக்க முறைகள் மூலம் பண்ணையாளர்களுக்கு கொண்டு செல்லுதல்

கல்வி

இளங்கலை படிப்பு

2016 ஆம்ஆண்டில் கால்நடை மருத்துவ படிப்புக்கான குறைந்தபட்ச தரம் விதிமுறைகளின்படி இளங்கலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கால்நடை விரிவாக்ககல்வி (பாட நேரம்: 3+1) அளிக்கப்படுகிறது

முதுகலை படிப்பு

வ.எண். பாட.எண். தலைப்பு
1 AHE 601 கால்நடை விரிவாக்க கல்வியின் அடிப்படைகள்(2+1)
2 AHE 602 கால்நடை மேம்பாடிற்கான தொடர்பு (1+1)
3 AHE 603 ​​ கால்நடை தொழில்நுட்பங்களின் பரவல் மற்றும் கடைபிடித்தல் (2+1)
4 AHE 604 விரிவாக்ககல்வி நுட்பங்கள் மற்றும் செவி வழி காட்சி வழி கருவிகள்
5 AHE 605 கால்நடைவிரிவாக்கத்தில் திட்டமிடல் மற்றும் மதிப்பீடு (2+1)
6 AHE 606 கால்நடை விரிவாக்கத்தில் ஆராய்ச்சி முறை (2+1)
7 AHE 607 சமூக உளவியல் மற்றும் குழு இயக்கவியல் (2+1)
8 AHE 608 கால்நடை வளர்ப்பு மேம்பாட்டு திட்டங்கள் (1+0)
9 AHE 609 விரிவாக்கக் கருத்தாக்கத்தில் முன்னேற்றங்கள் (1+0)
10 AHE 610 கால்நடை துறையில் மனித வள மேலாண்மை (2+1)
11 AHE 611 பாலினம் மற்றும் கால்நடை வளர்ச்சி (1+0)
12 AHE 612 கால்நடை வளர்ச்சியில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம்

பி ஹெச் டி (முனைவர்) படிப்பு

வ.எண். பாட.எண். தலைப்பு
1 AHE 801 நிறுவன மேலாண்மை (3+0)
2 AHE 802 பண்ணை பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு (2+1)
3 AHE 803 சமூக ஆராய்ச்சியில் மேம்பட்ட ஆராய்ச்சி நுட்பங்கள் (3+1)
4 AHE 804 மனித வள மேம்பாட்டுக்கான பயிற்சி (2+1)
5 AHE 805 கால்நடைத் துறையில் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் (2+0)
6 AHE 806 கல்வி தொழில்நுட்பம் (2+1)
7 AHE 807 மாற்றத்தின் இயக்கவியல் (2+0)
8 AHE 808 நிறுவன தொடர்பு (2+1)

ஆராய்ச்சி

நிறைவுற்ற எம். வி. எஸ்சி. (M.V.Sc) ஆராய்ச்சி திட்டங்கள்

வ.எண் தலைப்பு ஆராய்ச்சியாளர் ஆண்டு
1 தொழில்நுட்பத்தை மாற்றுவதில் கோழி வளர்ப்பு விநியோகஸ்தர்களின் பங்கு எஸ். பி. கோமதி 2006
2 தூய்மையான பால் உற்பத்தி பற்றிய திறனை ஒலி ஒளி குறுந்தட்டு பாடங்களின் மூலம் பால் வியாபாரிகளிடையே கண்டறிதல் ஜெ. மல்லிகா 2008
3 ஒப்பந்த அடிப்படையிலான கறிக்கோழி வளர்ப்பில் உள்ள இடர்பாடுகள் லோ. அருண் 2008
4 தமிழ்நாட்டில் கால்நடை மாணவர்களின் வேலை இலக்குகள் பற்றிய ஒரு பகுப்பாய்வு இரா. கீதா 2009
5 கறவை மாடு வளர்ப்பு தொழில்நுட்பங்களை எடுத்துச்செல்வதில் தகவல் பரிமாற்றத்தின் செயல்பாடுகள் இரா. கோபி 2011
6 கிராமப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தில் நாமக்கல் கோழி-1ன் தாக்கம் பெ. பரத் குமார் 2012
7 தென்னிந்திய இளங்கலை கால்நடை மருத்துவ மாணவர்களின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாடுகள் சி.மணிவண்ணன் 2014
8 நாமக்கல் மாவட்டத்தில் கறவை மாடு வளர்ப்பில் ஒப்பந்த பண்ணையம் பற்றிய ஓர் ஆய்வு சோ. ர.கலைவாணி 2015
9 நாமக்கல் மாவட்டத்தில் வணிகரீதியான நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய ஆய்வு இரா. பேபி உஷா 2016
10 நாமக்கல் மாவட்டத்தில் சிறிய பால் பண்ணையாளர்கள் புதிய பசுந்தீவன தொழில்நுட்பங்களை பின்பற்றுவதன் தாக்கம் ஓ. ச. சங்குதா 2016
11 தமிழகத்தின் வடமேற்கு மண்டலத்தில் உள்ள தீவிரப்படுத்தப்பட்ட ஆட்டுப்பண்ணைகளி;ன் நடைமுறைகள் மற்றும் பண்ணைகள் பற்றிய சிறப்பு குறிப்புகள் சி.ராம்குமார் 2017
12 தமிழ்நாட்டில் இயங்கி வரும் கால்நடை விவசாயிக்கு தேவையான தகவல்களை அளிக்கும் தகவல் தொழில்நுட்பத்தின் மூலக்கூறுகளின் உள்ளடக்க பகுப்பாய்வு மு.தீபிகா 2019
13 தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தால் கால்நடை வளர்ப்போருக்கு ஏற்படும் பாதிப்பு க. ஓவியா 2021

நிறைவுற்ற பிஎச்டி(PhD) ஆராய்ச்சி திட்டங்கள்

வ.எண் தலைப்பு ஆராய்ச்சியாளர் ஆண்டு
1 கோழிப்பண்ணையாளர்களின் தொழில்நுட்பத் தேவைகளின் மதிப்பீடு பெரு.மதியழகன் 1998
2 தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவர்களின் மனித சக்தி திட்டமிடல் என்.கே.சுதீப் குமார் 1999
3 சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலில் பெண்கள்: அவர்களின் நிலை, பிரச்சனைகள் மற்றும் வாய்ப்புகள் என்.வி.சுஜத்குமார் 2000
4 டேனிடா- புதுக்கோட்டை கால்நடை மேம்பாட்டு திட்டம் இலக்கு விவசாயிகள் மீது ஏற்படுத்திய தாக்கம் பி. குமாரவேல் 2000
5 தமிழ்நாட்டில் தெற்கு கடலோர மாவட்டங்களில் மீனவர்களுக்கான பயிற்சி முறைகளின் செயல்திறன் கே.வீரபுத்திரன் 2000
6 மீனவர்களின் தொழில்நுட்ப கடைபிடிப்பு திறன் கே.ராவணீஸ்வரன் 2001
7 கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணை மகளிரின் தொழில்முனைவு திறன் நா.நர்மதா 2001
8 தமிழ்நாட்டில் கால்நடை வளர்ப்பு அமைப்புகள் அ.மணிவண்ணன் 2008
9 தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள வேளாண் அறிவியல் மையங்களின் செயல்பாட்டு பகுப்பாய்வு பிமல். பி. பஷீர் 2014
10 தமிழகத்தில் கலப்புப் பண்ணை விவசாயத்தில் சிறு விவசாயிகள் பால் உற்பத்தி தொழிலில் ஏற்படும் மாறுதல்கள் பற்றிய ஓர் ஆய்வு துரை. திருநாவுக்கரசு 2017
11 தட்ப வெப்பநிலை மாறுதல் குறித்து கால்நடை பண்ணையாளர்களின் மனப்பாங்கு மற்றும் அதன் தாக்கங்களை சமாளிக்க மேற்கொள்ளும் உத்திகள் வே. உமா 2017
12 பருவநிலை மாற்றத்தால் சேலம் கருப்பு இன ஆடு வளர்ப்பு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் அதற்கான மேம்பாட்டு உத்திகளும் சி.ராம்குமார் 2021

நிறைவுற்ற வெளி நிதியுதவி திட்டங்கள்

வ.எண் திட்டத்தின் தலைப்பு ஆண்டு நிதியளிப்பு நிறுவனம் முதன்மை ஆராய்ச்சியாளர்
1 கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பில் பல்வேறு உயிர் தொழில்நுட்பங்களை பின்பற்றுவதன் மூலம் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளித்தல்” 2004-06 உயிர் தொழில் நுட்பவியல் துறை, புதுதில்லி முனைவர்.பெரு.மதியழகன்
2 கால்நடை உற்பத்தி மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் 2009-12 இந்திய வேளாண் கழகம், புது தில்லி முனைவர். நா.நர்மதா
3 கறவை மாடு வளர்ப்பில் புதுமையான அறிவியல் தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள நலிந்த பிரிவினரின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துதல் 2015-18 அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, புது தில்லி முனைவர். நா.நர்மதா

நிறைவுற்ற துணைத் திட்டங்கள்

5 கால்நடை கதிர் இதழின் உள்ளடக்க பகுப்பாய்வு 2011
வ.எண் திட்டத்தின் தலைப்பு ஆண்டு
1 நடத்தப்பட்ட பயிற்சியின் தாக்கத்தைப் பற்றி பயிற்சியாளர்களிடம் ஒர் பகுப்பாய்வு 2002
2 கால்நடை பண்ணையாளர்கள் கடைபிடிக்கும் தூய்மையான பால் உற்பத்தி முறைகள் 2008
3 கால்நடை வளர்ப்பை மேற்கொள்வதில் சமூக-பொருளாதார மற்றும் உளவியல் சிக்கல்களின் மதிப்பீடு 2009
4 நாமக்கல் மாவட்டத்தில் ஆடு வளர்ப்பை மேற்கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் 2011
6 தமிழ்நாட்டில் தீவிர ஆட்டுப் பண்ணைகளின் நிலை 2014
7 நாமக்கல் கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதுகலை ஆய்வறிக்கையின் அறிவியல் அளவீடு பகுப்பாய்வு 2017
8 தீவன உற்பத்தி தொழில் நுட்பத்தில் அனுபவமிக்க கற்றல் திட்டத்தின் மூலம் மாணவர்களின் தொழில் முனைவோர் தாக்கத்தை கண்டறிதல் 2020

உள்கட்டமைப்பு

  • கல்வி அருங்காட்சியகம்
  • பண்ணை ஆலோசனை கூடம்
  • காணொளி தொகுப்பாக்க அறை
  • கருத்தரங்கு அரங்கம்

தயாரிக்கப்பட்ட காணொளி

வ.எண் தலைப்பு மொழி கால அளவு
1 ஊறுகாய் புல் தயாரித்தல் தமிழ் 9.00
2 நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள் பற்றிய குறும்படம் தமிழ் 22.00
3 அசோலா சாகுபடி தமிழ் 10.00
4 கோவிட் -19 பற்றிய விழிப்புணர்வு தமிழ் 5.30
5 பொட்டுலிசம் தமிழ் 5.00
6 அறிவியல் தொழில்நுட்பங்களைப் பிரபலப்படுத்துதல் தமிழ் 5.20

மனிதவள மேம்பாடு

  • கல்லூரி மற்றும் கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்துவதற்காக, தொழில்நுட்ப ஆலோசனை குழுக் கூட்டம் 2019 முதல் நடத்தப்பட்டு அதன் மூலம் தொழில்துறையின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சியாளர்கள் நிபுணத்துவம் திறம்பட பயன்படுத்தப்படுகிறது.
  • இந்திய வேளாண் கழகத்தின் குளிர்கால பள்ளியின் மூலம் "கால்நடை அடிப்படையிலான வாழ்வாதார விருப்பங்கள்: தற்போதைய நிலை, வளர்ந்து வரும் பிரச்சினைகள் மற்றும் விவசாய நெருக்கடியை எதிர்ப்பதில் எதிர்கால சூழ்நிலை" என்ற பயிற்சி கால்நடை பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களின் நலனுக்காக நடத்தப்பட்டது (2014).
  • இந்திய வேளாண் கழகம் மேம்பாட்டு மானியத்தின் கீழ் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், ஆசிரியர் பணியாளர்கள், அமைச்க ஊழியர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கான "ஆளுமை மேம்பாடு" பயிற்சி நடத்தப்பட்டது (2019).
  • 2019 முதல் மாவட்ட கால்நடை ஆலோசனைக்குழு மூலம் நாமக்கல் மாவட்ட கால்நடை உதவி மருத்துவர்களுக்கான , களப் பிரச்சனைகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு அதற்கு தீர்வு காணும் வகையில், தொழில்நுட்ப அமர்வு ஏற்பாடு செய்யப்படுகிறது
  • மாநில தீவன மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கால்நடை ஆய்வாளர்களுகான புதுப்பித்தல் பயிற்சி நடத்தப்பட்டது(2019).

மக்கள் தொடர்பு செயல்பாடுகள்

  • கால்நடை வளர்ப்பின் மூலம் கிராம மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த கிராம தத்தெடுப்பு திட்டம் மேற்கொள்ளப்படுகிறது
  • பண்ணையாளர்களின் - பிரச்சினைகளை கண்டறிந்து உடனடியாக தீர்வுகளை வழங்க விவசாயி- விஞ்ஞானிகளின் பரிமாற்று சந்திப்பு நடத்தப்படுகிறது
  • உள்ளூர் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிய கிராமங்களில் கிராமப்புற பங்கேற்பு மக்களின் பங்கேற்போடு கூட்டங்கள் நடத்தப்பட்டு கண்டறியப்படுகின்றன
  • தொலைக்காட்சி மற்றும் வானொலி பேச்சுக்கள் மூலம் அறிவியல் தொழில்நுட்பம் பரப்புதல்
  • அறிவியல் செயல்பாடுகளை பிரபலப்படுத்துவதற்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் வருகைகளை நடத்துதல்
  • விவசாயிகள் மற்றும் விரிவாக்க பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் பணிமனைகளை ஏற்பாடு செய்தல்
  • விவசாயிகளுக்கு பண்ணை ஆலோசனை சேவைகளை வழங்குதல்

கல்விப்புலம்

  • முனைவர். .ந. அகிலா , பேராசிரியர் மற்றும் தலைவர்
  • முனைவர். கொ. மொ. சக்திவேல், இணைப் பேராசிரியர்
  • முனைவர். வே உமா, உதவிப் பேராசிரியர்
  • மருத்துவர். பெ. பொன்னுசாமி, உதவிப் பேராசிரியர்
  • மருத்துவர். ச. கார்த்திகேயன், உதவிப் பேராசிரியர்