mvc

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி

கால்நடைப் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் துறை


குறிக்கோள்கள்

  • கால்நடை மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் தற்போதைய மற்றும் நீண்டகாலப் பயன்பாட்டிற்கான கல்வியைக் கற்பித்தல்
  • விலங்குவழிப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழித்தல் போன்ற நடைமுறைகளில் திறன்களை வளர்த்தல்
  • நுண்ணுயிர் எதிர்கொல்லி எதிர்ப்புத் திறனான தற்காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நடைமுறை ஆராய்ச்சி மூலம் தொழில்நுட்பக் கூட்டுமுயற்சி ஆராய்ச்சி மூலம் காரணிகளைக் கண்டறிதல்
  • மேம்படுத்தப்பட்ட கால்நடைப் பொதுச் சுகாதார மருத்துவச் சேவைகளைப் பயனுள்ள வகையில் வெளியீட்டுத் திட்டம் மூலம் செயல்படுத்துதல்

உள்கட்டமைப்பு

1) மூலக்கூறு முறையில் நோய் கண்டறியும் ஆய்வகம்

  • பல்படியாக்கத் தொடர்வினைக் கருவி
  • ஜெல் டாக்குமென்டேசன்
  • ஒளிரும் நுண்ணோக்கி
  • இருண்ட புல நுண்ணோக்கி
  • எலைசா நிறமாலை ஒளிமானி
  • நுண்மையவிலக்கு இயந்திரம்

2) நுண்ணுயிர் உயிர்த் தொழில்நுட்ப ஆய்வகம்

  • உயிர்ப் பாதுகாப்புப் பெட்டகம் (நுண்ணுயிர் மற்றும் நச்சுயிர் கிருமிகளுக்குத் தனியாக)
  • காற்று மாதிரியைச் சேகரிக்கும் இயந்திரம்
  • இரட்டை நீர்வடிகட்டும் இயந்திரம்
  • உறைநிலை உலரவைத்தல் கருவி
  • சூடான காற்றடுப்பு
  • வெப்ப அடைப்பான்
  • உயர் அழுத்தக் கொப்பரை

சாதனைகள்

  • பின்நோக்கிய விலங்குவழிப் பரவும் நோய்களின் நிலை
  • பொதுவாகப் பயன்படுத்தப்படும் நுண்மக்கொல்லியில் நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத்திறனைக் கண்டறிதல்
  • பாலில் கலப்படம் அறிதல்
  • குறைந்த செலவில் டி.என்.ஏ. பிரித்தெடுத்தலும் அதன் மூலக்கூறு ஆய்வும்
  • நாய்கடித்தபின் செலுத்தப்படும் வெறிநோய்த் தடுப்பூசியின் இயங்குவியல்
  • மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு வெறிநோய் கண்டறிவதற்கான ஆய்வகப் பயிற்சி
  • மூலக்கூறு ஆய்வு மூலம் இறைச்சியில் உள்ள கலப்படத்தைக் கண்டறிதல்

வல்லுநர்கள்

  • சு. சுரேஷ் கண்ணன், பேராசிரியர் மற்றும் தலைவர்
  • மா. அசோக்குமார், உதவிப் பேராசிரியர்
  • க. பொர்தீன், உதவிப் பேராசிரியர்
  • ப. அன்னாள் செல்வ மலர், பட்டதாரி உதவியாளர்

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்

கால்நடைப் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் துறை

சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி

சென்னை – 600 007.

தொலைபேசி : 044-25304000, விரிவு: 2004

மின்னஞ்சல் : hodvphmvc@tanuvas.org.in