mvc

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி

உள்ளிருப்பு கால்நடை சேவை பிரிவு


உள்ளிருப்பு கால்நடை சேவை பிரிவு 1989 ஆண்டில் ஒரு தனித் துறையாக நிறுவப்பட்டது. உள்ளிருப்பு கால்நடை சேவை பிரிவில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு 2000 ஆம் ஆண்டில் அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு என மறுபெயரிடப்பட்டது. இந்த பிரிவு புறநோயாளி சிகிச்சை நேரத்திற்குப் பிறகு அவசரகால கால்நடை தீவிர சிகிச்சை வழங்குகிறது.

அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தினசரி அடிப்படையில் கடுமையான நோய்வாய்ப்பட்ட சிறிய மற்றும் பெரிய விலங்குகளுக்கு அதிக எண்ணிக்கையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆபத்தான, காயமடைந்த விலங்குகளுக்கு மற்றும் உள்நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதுடன், நலக் குழுக்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்களால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு வரப்படும் செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகளுக்கு இந்த பிரிவு சிகிச்சை அளிக்கிறது. இந்த பிரிவில் மாநிலம் முழுவதிலும் இருந்து பரிந்துரைக்கப்பட்ட நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. பி.வி.எஸ்.சி இளங்கலை மாணவர்கள், பயிற்சி மாணவர்கள் மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இந்த பிரிவு பயன்படுத்தப்படுகிறது. சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10000 நோய்வாய்ப்பட்ட விலங்குகள் இந்த பிரிவுக்கு வருகிறது.

அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு - வேலை நேரம்

  • திங்கள்-வெள்ளி: 1.00 PM - 8.00 AM
  • சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்கள்: 11.30 PM - 08.00 AM

நோக்கங்கள்

  • அவசர மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வரப்படும் தீவிர நோய்வாய்ப்பட்ட செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்குதல்.
  • மருத்துவ ஆலோசனைகள், மகப்பேறு மற்றும் அறுவைசிகிச்சைகள், செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகளுக்கு 24 மணி நேரமும் வழங்கப்படும்.
  • வெறிநோய்க்கான கண்காணிப்பு பிரிவின் கீழ் ரேபிஸ் நோய் என்று சந்தேகிக்கப்படும் விலங்குகளுக்கு சேர்க்கை வழங்கப்படும்.
  • பெரிய மற்றும் சிறிய உள்நோயாளி விலங்குகளுக்கும் அவசர மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு வேலை நேரங்களில் சிகிச்சை வழங்கப்படும்.
  • பி.வி.எஸ்.சி., படிப்பின் பல்வேறு கால்நடை மருத்துவக் கல்லூரிகளின் பயிற்சி மாணவர்களுக்கு அவசர மற்றும் தீவிர சிகிச்சை கையாளும் முறைகளை கற்பித்தல்.
  • அவசர மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு வேலை நேரங்களில் கொண்டு வரப்படும் இறந்த விலங்குகளை, ​​நோயியல் துறையில் பிரேத பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்தல்.
  • தேவைப்படும் விவசாயிகள் மற்றும் செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு தடுப்பூசி அட்டவணை, குடற்புழு நீக்கம் மற்றும் மேலாண்மை குறித்து ஆலோசனை வழங்குதல்.
  • மருத்துவ, அறுவைசிகிச்சை மற்றும் மகப்பேறியல் தொடர்பான பல்வேறு அவசரநிலைகளின் நிகழ்வுகள் ஆராயப்படுகிறது.
  • ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கான பயிற்சித் திட்டத்தை நடத்துதல்.

வல்லுநர்கள்

  • முனைவர். ஏ. அருண்பிரசாத், பேராசிரியர்மற்றும்தலைவர்
  • முனைவர். எம். ரஞ்சித்குமார், உதவிப்பேராசிரியர்
  • முனைவர். பி. தமிழ்மகன், உதவிப்பேராசிரியர்
  • டாக்டர்.மு. பாரதிதாசன், உதவிப்பேராசிரியர்