mvc

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி

கோழியின அறிவியல் துறை


கோழியின அறிவியல் துறை சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 1970-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முன்னதாக, ஐம்பதுகளின் முற்பகுதியில், கோழி வளர்ப்பு பற்றிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகிய சேவைகள் இக்கல்லூரியின் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் வழங்கப்பட்டு வந்தது. பின்னர், அறுபதுகளின் முற்பகுதியில், விலங்கின சுகாதாரத் துறை இந்த சேவைகளை வழங்கியது. இந்த காலகட்டத்தில் பண்ணைமுறை கோழி வளர்ப்பு சென்னையிலும் அதைத் தொடர்ந்து மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் பிரபலம் அடையத் தொடங்கியது. புதிதாக முளைத்த இந்த தொழிலின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் 1970-ஆம் ஆண்டில் கோழியின அறிவியல் துறை தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது. இத்துறை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே கோழி உற்பத்தி மற்றும் அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பு வழங்கியதன் மூலம், நாட்டில் கோழியின அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பை வழங்கிய முன்னோடி கால்நடை மருத்துவக்கல்லூரி துறைகளில் ஒன்றாக இது விளங்கியது. பின்னர் 1977-ஆம் ஆண்டு கோழியின அறிவியலில் முனைவர் பட்டப்படிப்பு இத்துறையில் தொடங்கப்பட்டது. இன்று இத்துறை இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை தொடரும் மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பல்கலைக்கழகத்தின் கோழியின ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

பணிகள்

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் ஒரு அங்கமான இத்துறை, கோழிகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான கற்பித்தல், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்தியுள்ளது.

தொலைநோக்கு

மாநிலத்தில் கோழிப்பண்ணைத் தொழிலை அதிக லாபகரமாக்கும் பொருட்டு தொழில்நுட்பங்களை உருவாகுவதே இத்துறையின் நெடுங்கால தொலைநோக்கு பார்வையாகும்.

குறிக்கோள்கள்

  • இளங்கலை மற்றும் முதுகலை கால்நடை மருத்துவப் பட்டதாரிகளுக்கு கோழிப்பண்ணை அறிவியலில் நிகழ்கால முன்னேற்றங்களுடன்கூடிய தரமான கற்பித்தல் மற்றும் பயிற்சி ஆகியவற்றை கிடைக்க செய்தல்
  • விவசாயிகளுக்கு பயனளிக்கும் வண்ணம் தேவை சார்ந்த நவீன ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்
  • கால்நடை மருத்துவப் பட்டதாரிகளையும் விவசாயிகளையும் தொழில்முனைவோர்களாக மாற்றுதல்

I. கல்வி

இத்துறை மூலம் 1978-ஆம் ஆண்டு முதல் இளங்கலைப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய இந்திய கால்நடை மருத்துவ மன்றத்தின் (VCI) பாடத்திட்டத்தின் (MSVE, 2016) கீழ் கால்நடை உற்பத்தி மேலாண்மைப் பாடத்தின் பிரிவுகள் இத்துறையால் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

இத்துறையிலிருந்து இதுவரை 114 முதுகலை மற்றும் 46 முனைவர் பட்ட ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

II. ஆராய்ச்சி

  • கோழியின ஆராய்ச்சி நிலையத்துடன் (PRS) இணைந்து, இதுவரை 67 வெளிநிறுவன நிதியுதவி ஆராய்ச்சி திட்டங்களை இத்துறை செயல்படுத்தியுள்ளது.

அ. பூர்த்தியாக்கப்பட்ட முக்கிய ஆராய்ச்சித் திட்டங்கள்

  • இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவியுடன் இறைச்சிக்கான கோழி வளர்ப்பு பற்றிய அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டம்
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதியுதவியுடல் செயல் படுத்தப்பட்ட ’வாத்து இனவிருத்தி’ திட்டம்
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட ’கோழிப்பண்ணைகளில் ஒளியமைப்புத் தேவைகள்’ திட்டம்
  • இந்திய அரசின் உயிர்த்தொழிநுட்ப துறை நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட இறைச்சிக் கோழிகளுக்கான தொழில்நுட்ப பரிமாற்றம்
  • இந்திய அரசின் உயிர்த்தொழிநுட்ப துறை நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட முட்டைக் கோழிகளுக்கான தொழில்நுட்ப பரிமாற்றம்
  • உணவு மற்றும் வேளாண் நிறுவனம் (FAO) நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட 'இந்தியாவில் கோழி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில் தனியார் துறை கூட்டாண்மை’ திட்டம்
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் நிதியளிக்கப்பட்ட ’கால்நடை மற்றும் கோழித் தீவனங்களில் வேளாண்காடு வளர்ப்புப் பொருட்கள்’ திட்டம்
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தால் நிதியளிக்கப்பட்ட ’இறைச்சிக் கோழிகளுக்கான வீட்டமைப்பு மற்றும் மேலாண்மை’ திட்டம்
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட ’முட்டையிட்டு ஓய்ந்த முட்டைக் கோழிகளின் இறைச்சியை மிருதாக்கல்’ திட்டம்
  • தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் நடத்தப்பட்ட ’கிராமப்புற கோழி இடுபொருட்கள் மற்றும் திறன் மேம்பாட்டு மையம் நிறுவுதல்’ திட்டம்
  • தன்வந்திரி நானோ ஆயுஷாதி பிரைவேட் லிமிடெட் நிதி மூலம் செயல்படுத்தப்பட்ட நானோ-வெள்ளியின் (Ag NP-124) செயல்திறனைச் சரிபார்த்தல் திட்டம்
  • ஸ்பெயின் நாட்டின் பயோவெட் எஸ்.ஏ. நிறுவனத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட ‘அல்குவர்மோல்ட் நேச்சுரல்® இன் செயல்திறனைச் சரிபார்த்தல்' திட்டம்

ஆ. நிகழ்கால ஆராய்ச்சித் திட்டங்கள்

1. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ’இளங்கலை மாணவர்களுக்கான அனுபவ கற்றல், ‘தொகுதி: III - இறைச்சி மற்றும் முட்டைக் கோழி உற்பத்தி - சுற்றுச்சூழல் கட்டுப்பாடுத்தப்பட்ட கொட்டகையில் முட்டைக்கோழி உற்பத்தி மற்றும் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம்’ (நிதி ஒதுக்கீடு: ரூ. 50.00 இலட்சம்)

அ) இதுவரை 12 பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன

ஆ) இறைச்சிக் கோழி உற்பத்தியில் 116 மாணவர்களுக்கு அனுபவ கற்றல் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

படங்கள்: அனுபவ கற்றல் திட்டத்தில் மாணவர்களின் செயல்பாடுகள்

2. தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்ட நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாட்டின் பூர்வீக சிறுவிடை கோழிகளுக்கான ஆதார மையம் நிறுவுதல் (நிதி ஒதுக்கீடு: ரூ. 151.75 இலட்சம்)

இ. நிகழ்கால ஆராய்ச்சி முன்னேடுப்புகள்

  • பூர்வீக கோழியினங்களின் வெளித்தோற்ற மற்றும் மூலக்கூறு குணாதிசய வகைப்படுத்தல் மற்றும் மரபியல் மேம்பாடு
  • நாட்டுக் கோழி மற்றும் நாட்டு வாத்து இனங்களின் நோய் எதிர்ப்பு மற்றும் வெப்பமண்டல தகவமைப்பின் மரபியல் குணாதிசயங்களை ஆராய்தல்
  • கோழியின் உற்பத்தித்திறனை மேம்படுத்த முட்டைவழி ஊட்டச்சத்து அளித்தல்
  • கோழித் தீவனங்களில் நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடு

III. விரிவாக்கம்

கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை, 1910 தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகள் இந்தத் திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.

படங்கள்: திறன் மேம்பாட்டு பயிற்சியில் செயல்பாடுகள்

IV. நடத்தப்பட்ட கருத்தரங்கு/ பட்டறை/ பயிற்சிகள்/ மாநாடுகள்

  • 1983 - இந்திய கோழியின அறிவியல் சங்க மாநாடு (IPSACON)
  • 1996 - தேசிய கோழியின வளர்ப்பு கருத்தரங்கம்
  • 2000 - இந்திய கோழியின அறிவியல் சங்க மாநாடு (IPSACON)
  • 2004 - இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட ’அங்கக மற்றும் செயல்பாட்டு முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தி மற்றும் அறை வெப்பநிலையில் துரித கோழியின உணவுப் பொருட்களை பாதுகாத்தல்' என்ற தலைப்பிலான பயிற்சிப் பள்ளி
  • 2010 - ‘மாற்று விவசாய முறைகளில் வளர்ந்து வரும் வாய்ப்புகள்’ எனும் தலைப்பிலான தேசிய கருத்தரங்கு
  • 2010 - இந்திய கோழியின அறிவியல் சங்கத்தின் 27-வது ஆண்டு மாநாடு மற்றும் தேசிய கருத்தரங்கம் (IPSACON)
  • 2020 - ‘நெருப்புக்கோழி உள்ளடங்கிய பறக்கவியலாத பறவைகளை மையப்படுத்திய கோழிப்பண்ணைத் தொழிலின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால (கோவிட்-க்கு பிந்தைய) வாய்ப்புகள்’ பற்றிய சர்வதேச வலைதளக் கருத்தரங்கு

V. வசதிகள்

  • திறன் வகுப்பறை வசதியுடன் மற்றும் செயல்விளக்கம் மற்றும் நடைமுறை வகுப்புகளை நடத்துவதற்கான உபகரணங்கள் அடங்கிய இளங்கலை பட்டப்படிப்பு ஆய்வகம்

முதுகலை பட்டப்படிப்பு ஆராய்ச்சி ஆய்வக வசதிகள்

மரபியல் மற்றும் மரபணுத்தொகுதியியல் ஆய்வகம்

  • பிசிஆர் இயந்திரம்
  • குளிரூட்டப்பட்ட நுண் விறைவேகச் சுழற்சி இயந்திரம்
  • அகரோஸ் கூழ்ம மின்னணுப் பகுப்பு மற்றும் கூழ்ம ஆவண இயந்திரம்
  • தூயக் காற்றோட்ட இயந்திரம்
  • அழுத்த அனற்கலன், வெப்ப அடைபெட்டி, ஆழ் உறைப் பெட்டகம் மற்றும் இதர உபகரணங்கள்

ஊட்டச்சத்து மற்றும் உடலியல் ஆய்வகம்

  • புற-உதா கதிர் நோக்கி நிறமாலையொளிமானி
  • திவனப்பொருட்களின் ஊட்டச்சத்து பகுப்பாய்விற்கான உபகரணங்கள்

அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்ப ஆய்வகம்

  • கிண்ண வடிவிலான வெட்டு இயந்திரம்
  • கோழிகளைப் பகுதிகளாக்கும் இயந்திரம்
  • கோள வடிவ கலவை இயந்திரம்
  • இறைச்சி துருவல் இயந்திரம்
  • செங்குத்து ஆழ் உறைப் பெட்டகம்
  • தொத்திறைச்சி நிரப்பு இயந்திரம்

VI. வெளியீடுகள்

  • 320-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்
  • 500-க்கும் மேற்பட்ட பொதுக் கட்டுரைகள்
  • புத்தகங்கள் : 2
    • கோழி வளர்ப்பு (215 பக்கங்கள்)
    • தொழில் முனைவோருக்கான கோழி வளர்ப்பு (ISBN: 978-93-85418-47-1 (225 பக்கங்கள்)

வல்லுநர்கள்

  • முனைவர் ரி. ரிச்சர்ட் சர்ச்சில், பிஎச்டி, பேராசிரியர் மற்றும் தலைவர்
  • முனைவர் ஆ. அசோக், பிஎச்டி, பேராசிரியர்
  • முனைவர் ப. முத்துசாமி, பிஎச்டி, இணைப் பேராசிரியர்
  • முனைவர் நா. கார்த்திகேயன், பிஎச்டி, உதவிப் பேராசிரியர்