mvc

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி

கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறை


சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்கிய காலத்திலிருந்தே இந்த மருந்தியல் துறை இயங்குகிறது. நச்சியல் பிரிவு 1971 இல் இந்த துறையுடன் இணைக்கப்பட்டது. கால்நடை மருந்தியலில் முதுகலைப் பட்டப்படிப்பு 1959 இல் தொடங்கப்பட்டது. 1979 ம் ஆண்டில் முனைவர் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது.

குறிக்கோள்

  • இளங்கலை கால்நடை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி போதித்தல்.
  • களப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொள்ளுதல்.
  • மருந்தியல் மற்றும் நச்சியல் துறைகளில் மனிதவள மேம்பாட்டுக்கான பயிற்சிகளை அளித்தல்.

சேவைகள்

பிற கல்லூரி / பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கு ஆய்வுக்கான தொழில் நுட்ப வழிகாட்டல் மற்றும் ஆய்வுச்சாதனங்கள் பயன்படுத்துதல்.

கட்டணம் (பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டது )

கல்வி

  • இளங்கலை கால்நடை அறிவியல் பயில்வோருக்கு மருந்தியல் மற்றும் நச்சியல் பாடம் போதித்தல்
  • முதுகலை பட்டப்படிப்பு - மருந்தியல் மற்றும் நச்சியல்
  • முனைவர் பட்டப்படிப்பு - மருந்தியல் மற்றும் நச்சியல்

சாதனைகள்/ காப்புரிமைகள்/ தொழில்நுட்ப பரிமாற்றங்கள்

  • உயர் திறன் திரவ வண்ணப்பிரிகை மானி ஐப் (HPLC) பயன்படுத்தி திசுக்கள் மற்றும் உடல் திரவத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மதிப்பீட்டு முறைகள் தரப்படுத்தப்பட்டன.
  • நீரிழிவு, அழற்சி, மூட்டு வலி, வயிற்று புற்று, குடல் புற்று, கருப்பை நீர்க்கட்டி மற்றும் பல மனிதர்களை தாக்கும் நோய்களின் விலங்கு மாதிரிகள் தரப்படுத்தப்பட்டன.
  • நுண்ணுயிரிகளில் மருந்து எதிர்ப்பு அளவீடு, உயிரி முறைகள் மூலமும் மூலக்கூறு முறைகள் மூலமும் கண்காணிக்கப்பட்டன.
  • கோழிகளில் மருந்தியக்க முறைகள் மூலம் நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்து கொடுக்கும் அளவு நிர்ணயிக்கப்பட்டன.

வல்லுநர்கள்

  • முனைவர் எஸ்.ரமேஷ், பேராசிரியர் மற்றும் தலைவர்
  • முனைவர் எஸ்.பி.ப்ரீத்தா, உதவிப் பேராசிரியர்
  • முனைவர் எல்.கலைச்செல்வி, உதவிப் பேராசிரியர்
  • முனைவர் த.இராமசாமி, உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு:

கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறை,

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,

வேப்பேரி, சென்னை – 600 007.

044 25304000

மின்னஞ்சல் hodvptmvc@tanuvas.org.in