குறிக்கோள்கள்
- கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் தொடர்பாக, மாணவர்களுக்கு தரமான கல்வியைக் கற்பித்தல்
- செல்லப்பிராணி, பசு, எருமை, ஆடு மற்றும் பிற கால்நடைகளுக்கு ஏற்படும் இனப்பெருக்கக் குறைபாடுகளுக்கு நோய்க் குறியீட்டைக் கண்டறிதல் மற்றும் மருத்துவப் பரிசோதனை வழிமுறைகளை உருவாக்குதல்
- ஆணினக் கால்நடை இனப்பெருக்கத் துறையில் சிகிச்சை மற்றும் வளம் பேணும் இனப் பாதுகாப்பு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்
- பயிற்சி, கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் மூலம் துறைசார்ந்த அறிவுசார் அறிவியலைப் பரப்புதல்.
கல்வி
இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு, விரிவுரை மற்றும் செய்முறைப் பயிற்சிகளைக் கொண்ட பாடத்திட்டங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன:
- இளநிலைப் பட்டப் படிப்பு
- முதுநிலைப் பட்டப் படிப்பு
- முனைவர் பட்டப் படிப்பு
ஆராய்ச்சி
கன்று ஈனுதலுக்கு முன்பு, கன்று ஈனும்பொழுது, கன்று ஈன்ற பிறகு ஏற்படக்கூடிய மருத்துவப் பிரச்சனைகள், கட்டுப்படுத்தப்பட்ட இனப்பெருக்க உத்திகள், செயற்கை முறைக் கருவூட்டல் மற்றும் கருமாற்றல், மேம்படுத்தப்பட்ட இனப்பெருக்கத் தொழில்நுட்பம், மீயொலி உதவியுடன் கூடிய அண்டக்குமிழ் திரவம் உறிஞ்சுதல் மற்றும் கருவின் பாலினம் அறிதல் ஆகியவை குறித்த ஆராய்ச்சிகள் ஆகியவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
உள்கட்டமைப்பு
1) கருத்தரங்கு அறை
- முழுமையான குளிர்சாதன வசதி மற்றும் ஒளி, ஒலி சாதனங்களுடன் கூடிய இரு கருத்தரங்கு அறைகள் உள்ளன.
2) துறையிலுள்ள முக்கியமான சாதனங்கள்
- நுண்ணோக்கிகள்
- குளிர் அதிமைய விலக்குப் பிரிப்புக்கருவி
- காரா அளவீட்டுமானி
- வெப்ப அடைகாப்பான்கள்
- வெப்பக்காற்றுச் சூளை
- மின் எடைத் தராசு
- யோனி உள்நோக்கி
- மீயொலி அலகீட்டுக் கருவி
- பல்படியாக்கல் தொடர் வினைக் (பிசிஆர் ) கருவி
- ஆர் டி பிசிஆர் கருவி
3) அருங்காட்சியகம்
இளநிலை, முதுநிலைப் பட்ட மாணவர்களுக்கு, கல்வி பயிற்றுவிக்க உதவியாக இறைச்சிக் கூடம், தனித்துவமான மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த நோயுற்ற கால்நடைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட இயல்பான மற்றும் இயல்புக்கு மாறான இனப்பெருக்க உறுப்புகள், கருக்களின் மாதிரிகள், குறைபாடுள்ள இறந்த கன்றுகள் ஆகியவை உள்ளடக்கிய அருங்காட்சியகம் இடம்பெற்றுள்ளது.
சாதனைகள்
- பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக அறுவைச் சிகிச்சை இல்லாத கருமாற்றக் கன்று உருவாக்கப்பட்டது.
- கருப்பை வெளித்தள்ளிய எருமை மாடுகளுக்கு செர்வைக்கோ-ட்ரக்கிலியோராபி எனப்படும் புதிய சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- கன்றுகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் 174 மாற்றத்தக்க கருக்கள் சராசரியாக ஒரு சேகரிப்பிற்கு 5.2 கருக்கள் வீதம் சேகரிக்கப்பட்டன.
- தமிழ்நாட்டில் கறவை மாடுகள் மற்றும் எருமை மாடுகளின் மரபணு மேம்படுத்துதல் - இனப்பெருக்க மற்றும் உற்பத்தியினைப் பெருக்குவதற்கான சினைத்தருணம் ஒருங்கிணைப்புத் திட்டத்தில் 60 விழுக்காடு சினைப்பிடிப்பு விகிதம் எட்டப்பட்டது.
வல்லுநர்கள்
- க. கிருஷ்ணகுமார், பேராசிரியர் மற்றும் தலைவர்
- சீ. ரங்கசாமி, உதவிப் பேராசிரியர்
- ரா. சுரேஷ்குமார், உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு:
பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை
சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை- 600 007
தொலைபேசி: 044-25382550 , விரிவு: 2071
மின்னஞ்சல்: hodogymvc@tanuvas.org.in