mvc

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி

விலங்கின ஊட்டச்சத்தியல் துறை


விலங்கின ஊட்டச்சத்தியல் துறை, பழமையான துறைகளில் ஒன்றாகும். இத்துறை 1950 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1958ஆம் ஆண்டு முதுநிலை கல்விக்கான பிராந்திய மையமாக அங்கீகரிக்கப்பட்டது. பிறகு 1960 ஆம் ஆண்டில் முனைவர் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது.

குறிக்கோள் :

  • இளநிலை பட்டதாரி மாணவர்களுக்கு விலங்கின ஊட்டச்சத்துக்கள் தொடர்பான கல்வி மற்றும் பயிற்சிகளை அளித்தல்.
  • மாணவர்களுக்கிடையே விலங்கின ஊட்டச்சத்தியல் பற்றிய ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல் மற்றும் செயல்படுத்துதல்.
  • விலங்கின ஊட்டச்சத்தியல் தொடர்பான தொழில் நுட்பங்களை கால்நடை வளர்ப்போரிடம் கொண்டு சேர்த்தல்.
  • அசையூன் வயிற்றுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை கண்டறிந்து, அதன் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் தாது உப்புக்களின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.

கல்வி :

  • இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு விலங்கின ஊட்டச்சத்தியல் பாடத்திட்டத்தை வழங்குதல்.
  • முதுநிலை மற்றும் முனைவர் மாணவர்களுக்கான விலங்கின ஊட்டச்சத்தியல் பாடத்திட்டத்தை வழங்குதல்.

ஆராய்ச்சி :

  • அசையூன் பிராணிகளுக்கு பதிலாக ஆய்வகத்திலே சோதனை செய்யும் வடிவில் உபகரணம் (TANUVAS - RUSITEC) கண்டறியப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
  • தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப தானுவாஸ் ஸ்மார்ட் தாது உப்புக்கலவை (TANUVAS-SMART Mineral Mixture) உருவாக்கப்பட்டது.
  • கறவை மாடுகளுக்கு மாவுச் சத்து மிக்க தீவனத்தில், சேர்த்து வழங்கக் கூடிய தானுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து கலவை (TANUVAS GRAND) தயாரிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
  • கால்நடைகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பசுமை இல்ல வாயுக்களின் (Green House Gases) அளவை குறைப்பதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • தாது உப்புக்களின் பயன்பாட்டை அதிகரிக்க நுண்தாது உப்புக்கள் (Nano - Minerals) தயாரிப்பு பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

பிற முக்கியச் செயல்பாடுகள்

  • தீவன மூலப்பொருட்கள் மற்றும் தீவனங்களில் ஊட்டச்சத்துக்களின் அளவை, தீவனத் தரக் கட்டுப்பாடு ஆய்வகம் மூலம் கண்டறிந்து அளித்தல். கட்டணம் ரூ. 531
  • தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் ஏற்ற, தாது உப்புக்கலவையை பண்ணையாளர்களுக்கு தயாரித்து வழங்குதல். விலை ரூ. 65 / கிலோ
  • விலங்குகள் மற்றும் பறவைகளுக்கான தீவனம் / உணவு அளித்தல் பற்றிய ஆலோசனைகளை வழங்குதல். கட்டணம் ரூ. 20 / ஆலோசனை

வல்லுநர்கள்

  • முனைவர் சி. பந்தேஸ்வரன், பேராசிரியர் மற்றும் தலைவர்
  • மரு. இரா. பாலமுருகன், உதவி பேராசிரியர்
  • மரு . ம. ப. விஜயகுமார், உதவி பேராசிரியர்

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்

விலங்கின ஊட்டச்சத்தியல் துறை

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி

வேப்பேரி, சென்னை - 600 007

தொலைபேசி : 044 - 25304000 - 2036

மின்னஞ்சல் : hodannmvc@tanuvas.org.in