mvc

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி

கால்நடை மருத்துவ சிகிச்சைத் துறை


இந்த துறையானது 1995 ஆம் ஆண்டில்; மேம்பட்ட ஆய்வுகளின் மையமாகவும், பின்னர் 2010 ஆம் ஆண்டு முதல் மேம்பட்;ட ஆசிரியப் பயிற்சி மையமாகவும் ICAR ஆல் அங்கீகரிக்கப்பட்டது.

நோக்கங்கள்:

  • முனைவர் பட்டம் மாணவர்கள் மற்றும் பிற டாக்டர்களுக்கு மருத்துவம் மற்றும் சிகிச்சை பற்றி தெரிவித்தல்.
  • களம் சார்ந்த ஆராய்ச்சிகளின் மூலம் அசையூன்களின் உற்பத்தியை மேம்படுத்துதல்
  • சிறப்பு பரிந்துரை சேவை சிகிச்சை மையம்
  • இளங்கலை கல்வி வழங்குதல்
  • மேம்பட்ட ஆராய்ச்சிக்கான வசதிகள் அளித்தல்
  • கள மருத்துவர்களுக்கு பயிற்ச்சி செய்தல்

கல்வி:

  • விலங்கு நல நெறிமுறைகள் மற்றும் சட்டங்கள்
  • வன விலங்குகள் இனபெருக்கம், ஊட்டச்சத்து மற்றும் சுகாதார மேலாண்மை
  • செல்லபிராணி இனப்பெருக்கம், ஊட்டச்சத்து மற்றும் சுகாதார மேலாண்மை
  • பொது மற்றும் அமைப்பு நோய்கள்
  • வளர்சிதை மாற்றம் மற்றும் குறைபாடு நோய்கள்
  • வன விலங்கு மருத்துவம்
  • வைரஸ் மற்றும் ஒட்டுண்ணி மருத்துவம்
  • நீதித்துறை நெறிமுறைகள் மற்றும் விலங்குகள் நலன்
  • மருத்துவ பயிற்சி மற்றும் சிறப்பு நோயறிதல் கருவி பயண்படுத்துதல் பயிற்சி
  • சிறிய விலங்கு அவசர மற்றும் பராமரிப்பு மருந்து.

பயிற்சி:

ICAR மையத்தின் பேராசிரியர்களுக்கான மேம்பட்ட பயிற்சியானது வேளாண்மை/ கால்நடை பல்கலைக்கழகங்களை சார்ந்த ஆசிரியர்களுக்கு கால்நடை சிகிச்சையியல் துறையில் வருடத்தில் இரண்டு முறை பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. தொடர் கல்வி திட்டங்கள் பின்வரும் பிரிவுகளில் வழங்கப்படுகின்றன:

  • பெரிய பிராணிகளுக்கான மருத்துவம்
  • செல்லப் பிராணிகளுக்கான இதயவியல்
  • செல்லப் பிராணிகளுக்கான இரையகக் குடலியவியல்
  • செல்லப் பிராணிகளுக்கான தோல் மருத்துவம்
  • செல்லப் பிராணிகளுக்கான அவசர சிகிச்சை

ஆராய்ச்சி

வெளி நிதி உதவியின் மூலம் நிதி அளிக்கப்பட்டு பின்வரும் எட்டு ஆய்வுகள் இத்துறையில் நடைபெறுகின்றன:

  • கால்நடை சிகிச்சையியல் துறையில் பேராசிரியர்களுக்கான மேம்படுத்தப்பட்ட பயிற்சி நிலையம்
  • தேசிய வேளாண் கழகத்தினால் நடத்தப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் கற்றல்திறன் மேம்பாட்டு பயிற்சி
  • நடமாடும் மருத்துவமனைகளில் செயல்திறன் கற்றல் மற்றும் ரத்த வங்கி மேம்பாடு, தேசிய வேளாண் கழகத்தினால் நிதி அளிக்கப்படுகிறது
  • நாய்களின் லிம்போமா வகை புற்றுநோய் கட்டிகளில் டி மற்றும் பி செல் ஆராய்ச்சிகள்
  • சிறுநீரக மாற்றியில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பகுப்பாய்வு குச்சிகளின் ஆய்வு - இந்திய அறிவியல் துறை நிதியளிப்பு
  • சாவா மருந்து கம்பெனி மூலம் இதய சிறுநீரக பாதிப்பில் பினாசிபிரில் மருந்தின் பயன்பாடு
  • சாவா மருந்து கம்பெனி மூலம் சிறுநீரக பாதிப்பில் நன் பாக்டீரியாக்கள் நுண் நொதிகள் குறித்த ஆராய்ச்சியில் ரெமோடைல் மருந்தின் பயன்பாடு
  • எர்லிசியா மற்றும் அனப்பலாஷ்மா ஒட்டுண்ணிகளின் நோய் தாக்கத்தினால் டாக்ஸிசைக்கிளின் மருந்துகளின் பயன்பாடு பற்றிய ஆய்வு

உள்கட்டமைப்பு வசதிகள்:

  • எண்டோஸ்கோபி (உள்நோக்கி) சிகிச்சையகம்
  • இதயவியல் சிகிச்சையகம்
  • இமேஜிங் சிகிச்சையகம்
  • பெரிய பிராணிகளுக்கான பரிந்துரை சிகிச்சையகம்
  • சிறிய பிராணிகள் தீவிர சிகிச்சைப்பிரிவு
  • மேலும் சிறுநீரகவியல் பரிந்துரை சிகிச்சையகமும் மற்றும் புற்றுநோயியல் பரிந்துரை சிகிச்சையகமும் உள்ளன.