mvc

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி

கால்நடை உற்பத்திப் பொருள்கள் தொழில் நுட்பத்துறை (இறைச்சி அறிவியல்)


  • 1958-59 ஆம் ஆண்டில், இந்தியாவிலேயே முதன் முறையாக, சுகாதாரமான இறைச்சி உற்பத்தியின் கொள்கைகளை மேம்படுத்துவதற்காக இறைச்சி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை உருவாக்கப்ட்டது.
  • இத்துறை, 1962 ஆம் ஆண்டு முதுகலைத் துறையாக அங்கீகரிக்கப்பட்டது.
  • 1972 ஆம் ஆண்டில் நவீன இறைச்சி ஆய்வகம் நிறுவப்பட்டது.

இத்துறை இறைச்சி சுகாதாரம், புதிய இறைச்சித் தொழில்நுட்பம், பதப்படுத்தப்பட்ட இறைச்சிச் தொழில்நுட்பம், பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட புதுமையான இறைச்சிப் பொருள்களின் மேம்பாடு, கால்நடைகளின் உபப்பொருள்களின் பயன்பாடு மற்றும் கால்நடைகளின் பொது சுகாதாரம் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை மாணவர்களுக்குக் கற்பிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டது.

குறிக்கோள்கள்

  • இறைச்சி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையில் இளநிலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்குத் தரமான கல்வி அளித்தல்.
  • இறைச்சி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றின் பயன்கள் தொழில்முனைவோர்கள் மற்றும் இறைச்சி பதப்படுத்துவோர்களைச் சென்றடையச் செய்தல், பண்ணையாளர்கள் மற்றும் இறைச்சிக்காகக் கால்நடைகளை அறுப்பவர்களுக்குத் தொழில்நுட்பத் திறன்களைப் பெறுவதற்கு பயிற்சியளித்தல்.
  • இறைச்சி உடலங்க உபப்பொருள்களில் அதிநவீனத் தொழில்நுட்பங்களை உருவாக்கல்.

கல்வி

இத்துறை பல்வேறு இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை வழங்குகிறது.

முதுநிலை பட்டப்படிப்பு

1962 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளிலிருந்து முறையே இறைச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தறையில் எம்.வி.எஸ்.ஸி மற்றும் பி.எச். டி., பாடத் திட்டங்களை வழங்கி வருகின்றது. மொத்தம் 158 முதுகலை பட்டதாரிகளையும், 28 பி. எச். டி., பட்டதாரிகளையும் உருவாக்கியுள்ளது. மேலும், “அறுவடைக்குப்பின் தொழில்நுட்பம் மற்றும் இறைச்சி மற்றும் இறைச்சிப்பொருள்களின் தர உத்திரவாதம்" என்ற தலைப்பில் ஒரு முதுகலை பட்டய படிப்பையும், 2014 ஆம் ஆண்டு முதல் வழங்குகிறது. இதுவரையில் நான்கு மாணவர்கள் இப்பட்டயத்தைப் பெற்றுள்ளனர்.

துறையின் பிரிவுகள்

இறைச்சி அறுவை அறை:

இறைச்சிக்காக கால்நடைகளை அறுவை செய்யும் அறையில் சுகாதாரமான முறையில் கால்நடைகளை இறைச்சிக்காக அறுத்தல் மற்றும் இறைச்சி உடலங்கமாக்குவதற்கான உபகரணங்கள் அனைத்தும் நன்கு பொருத்தப்பட்டுள்ளது .

இறைச்சிப் பொருள்கள் ஆய்வுக்கூடம்

இறைச்சிப் பொருள்கள் ஆய்வுக்கூடத்தில் இறைச்சிப்பொருள்களான கூழ்மம் சார்ந்த இறைச்சிப்பொருள்கள், பதனம் செய்த இறைச்சிப் பொருள்கள், மறுவடிவமைக்கப்பட்ட இறைச்சிப்பொருள்கள், மாவுப் பூசப்பட்ட இறைச்சிப் பொருள்கள், செயல்பாட்டு இறைச்சிப் பொருள்கள், உள்நாட்டுப் பாரம்பரிய இறைச்சிப் பொருள்கள் மற்றும் அறை தட்ப வெப்பத்தில் நிலைப்புத் தன்மை வாய்ந்த இறைச்சிப் பொருள்கள் போன்ற அனைத்தும் தயாரிப்பதற்குத் தேவையான வசதிகள் ஆய்வுக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இறைச்சித் தரக்காட்டுப்பாட்டு ஆய்வுக்கூடம்

இறைச்சித் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகமானது இறைச்சியின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளான, கார அமிலத்தன்மை, நீர்ச் செயல்பாடு, நீர்க் கொள் திறன், இறைச்சியிலிருந்து சாரம் பிரித்து எடுக்கப்பட்ட அளவு, டைரோஸின் அளவு, தையோ பார்பிசுரிக் அமில அளவு, தையோ பார்பிசுரிக் அமில எதிர்வினை பொருள்களின் எண், தசை சார்கோமியரின் நீளம், தசைநார் விட்டம், தசை நார்த் துண்டாக்கும் குறியீடு போன்றவைகளைக் கண்டறியும் ஆய்வுகளை மேற்கொள்வதற்குத் தேவையான உள்கட்டமைப்புகளுடன் உள்ளது.

இறைச்சி நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடம்

இறைச்சி நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடத்தில், இறைச்சி மற்றும் இறைச்சிப்பொருள்களில் உள்ள நுண்ணுயிரிகளின் தரத்தின் ஆய்வகத்திற்குத் தேவையான உட்கட்டமைப்புகள் உள்ளன.

இறைச்சியின் இனம் கண்டறிதல் ஆய்வுக்கூடம்

இந்த ஆய்வுக்கூடத்தில் இறைச்சியின் இனத்தோற்றத்தைக் கண்டறிவதற்குத் தகுந்த உபகரணங்களும் உள்ளன.

இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்களுக்கான உணவுச் சோதனை ஆய்வுக்கூடம்

இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்களுக்கான உணவுச் சோதனை ஆய்வுக்கூடம் அடிப்படை உணவுச்சத்து ஆய்விற்கான உபகரணங்கள் மற்றும் இறைச்சி தரத்தின் ஆய்வில் உள்ளடங்கிய பல்வேறு வகையான பூச்சிக்கொல்லி, காளான் நச்சு, நுண்மக்கொல்லி, இயக்குநீர் ஆகியவற்றின் எச்சங்களைக் கண்டறிய உதவும்.

ஆராய்ச்சி

இந்தத் துறையானது பதினான்கு வெளிப்புற நிதியுதவி பெற்ற ஆராய்ச்சித் திட்டங்களை நிறைவு செய்துள்ளது. துறையின் ஆராய்ச்சித் திட்டங்களுக்கான நிதியுதவி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில், உலக வங்கி, உணவுப் பதப்படுத்தும் தொழில் அமைச்சகம், இந்திய அரசு, தமிழ்நாடு அரசு ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்டது.

தொடரும் ஆய்வுத் திட்டங்கள்

  • இந்திய வேளாண் ஆய்வுத் திட்டம், புதுடில்லியின் நிதியுதவியுடன் கூடிய “அறுவடைக்குப் பின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆய்வுத் திட்டம்"
  • தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னையின் நிதியுதவியுடன் “சமையல் மற்றும் உண்ணத் தயாராக உள்ள இறைச்சிப்பொருள்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல்" குறித்த சுயநிதித் திட்டம்.
  • “இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்களுக்கான உணவுப் பரிசோதனை ஆய்வகம்" என்ற சுழல் நிதித்திட்டம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை.

குறிப்பிடத்தக்க சாதனைகள் / உருவாக்கப்பட்ட தொழில் நுட்பபங்கள் அல்லது வணிகமயமாக்கப்பட்டவை.

  • மின் உணர்விழக்கஞ்செய்யும் கருவி
  • நடமாடும் அசைவுறும் / கோழி இறைச்சி பதனிடும் கூடம்
  • செல்லப்பிராணி உணவு / செல்லப்பிராணி சுவைப்பான்
  • ரிடார்ட் பையகத்தில் செயலாக்கப்பட்ட கோழி இறைச்சிப் பொருள்கள்
  • புறந்துருத்தப்பட்ட இறைச்சிப்பொருள்கள்
  • பன்றிக் கட்டுப்படுத்தி

வ.எண் சோதனை ஒரு மாதிரிக்கான முன்மொழியப்பட்ட விலை (ரூ)
மாணவர்களுக்கு வணிகர்களுக்கு
1 இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்களின் நுண்ணுயிர்களின் தரம் 1000/- 3000/-
மொத்த வாழும் நுண்ம எண்ணிக்கை 250/- 500/-
குளிர் நிலையில் வளரும் நுண்ணுயிரிகள் மொத்த எண்ணிக்கை 250/- 1000/-
உயிர்வளி விரும்பா நுண்ணுயிரிகளின் மொத்த எண்ணிக்கை 250/- 1000/-
உணவில் உள்ள குறிப்பிடத்தக்க நோய் கிருமிகள் 250/- 1500/-
2 இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்களுக்கான நுகர் பண்புகள் சோதனை 1000/- 3000/-
சுவை ஆய்வுக்குழு கொண்ட நுகர் பண்புகள் சோதனை 500/- 1500/-
வார்னர் - பிராட்ஸ்லரின் வெட்டும் விசை மதிப்பு 150/- 500/-
இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்களின் தசை இழையமைப்பின் கூறுகள் 350/- 1000/-
3 இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்களில் உள்ள அடிப்படை உணவுச் சத்துப் பொருள்கள் (ஈரப்பதம், கொழுப்பு, புரதம் மற்றும் சாம்பல் சத்துக்கள்)
இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்களின் ஈரப்பதம் 80/- 100/-
இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்களின் கொழுப்புச் சத்து 100/- 500/-
இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்களின் புரதச்சத்து 100/- 500/-
இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்களின் சாம்பல் சத்து 100/- 200/-
4 இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்களின் இயற்வேதியியல் தரங்கள்
அமிலக் காரக் குறியீடு 50/- 100/-
நீர்க் கொள்திறன் 50/- 200/-
தையோ பார்பிசுரிக் அமில எண் 100/- 350/-
டைரோஸின் அளவு 100/- 350/-
வண்ணம் (கருவி பயன்படுத்துகிற) 100/- 250/-
5 இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்களின் நிலைப்புத் தன்மையின் ஆய்வு (ஏழு நாட்கள்) 2000/- 5000/-
6 பாலிமரேஸ் தொடர்வினை இயக்க முறை கொண்டு இறைச்சியின் தெரிந்த / சந்தேகத்திற்குறிய குறிப்பிட்ட இனத்தினை கண்டறிதல் 2000/- 6000/-
தெரியாத இனம் 3000/- 8000/-
7 தூண்டல் இணைக்கப்பட்ட பிளாஸ்மா – ஒளியியல் உமிழ்வு வண்ண அளவு புகைப்பட மாணி மூலம் கன உலோகம் / தாது உப்புக்கள் (ஒரு கனிமத்திற்கு) கண்டறிதல். 300/- 600/-
8 திரவ வண்ண வரைப்படம் நிறை நிறமாலையியல் – நிறை நிறமாலையியல் மூலம் பூச்சிக்கொல்லி / நுண்மக்கொல்லியினை கண்டறிதல் 2000/- 4000/-
9 வாயு வண்ணத் திரைப்படம் நிறை நிறமாலையியல் – நிறை நிறமாலையியல் மூலம் பூச்சிக்கொல்லியினைக் கண்டறிதல் 2000/- 4000/-
10 வைடெக் காம்பாக்ட் அமைப்பு கொண்டு நுண்மவியல் ஆய்வு 500/- 1000/-

இறைச்சிக் கூடத்தை நிறுவுவதிலும் இறைச்சியினை பதனப்படுத்தலிற்கான வசதிகளும் குளிர் சேமிப்பு மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் வடிவமைப்பு மற்றும் விரிவான திட்ட அறிக்கை போன்றவற்றை தற்போது உள்ள அல்லது வருங்காலத்தில் தொழில் முனைவோர்களுக்கு ஆலோசனைச் சேவைகளை ஏற்கனவே செய்து வருகிறது.

காப்புரிமை

இத்துறையில் வடிவமைக்கப்பட்ட நடமாடும் அசைவுறும் / கோழி இறைச்சி பதனிடும் கூடத்திற்கு ஏப்ரல் 8, 2011 லிருந்து 20 வருடங்களுக்கு காப்புரிமை (காப்புரிமை எண் - 342259, தேதி 23.07.2020) வழங்கப்பட்டுள்ளது.

வல்லுநர்கள்

  • இர. நரேந்திரபாபு, பேராசிரியர் மற்றும் தலைவர்
  • சு. எழில்வேலன், உதவிப் பேராசிரியர்
  • இரா. இரமணி, உதவிப் பேராசிரியர்
  • ச. வசந்தி, உதவிப் பேராசிரியர்