இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு கல்வி அளித்தல்
வேளாண் மக்களுக்கு கால்நடை உற்பத்தி மேலாண்மை தொழில்நுட்பம் வழங்குதல்
தமிழகத்தின் வடகிழக்கு வேளான் பருவ மண்டலங்களான சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் நிலவும் தட்பவெப்ப மற்றும் பருவ காலத்திற்கேற்ற கால்நடை மற்றும் வேளாண்மை சார்ந்த ஒருங்கிணைந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளுதல்
சுற்றுப்புற சூழலியல், பண்ணைக் கழிவுகள் மேலாண்மை சம்பந்தப்பட்ட பயன்பாட்டு அறிவியல் மற்றும் அவை சார்ந்த ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துதல்
சேவை
பூலோக அறிவியல் அமைச்சகத்தின் நிதியுதவியின் கீழ் இத்துறையில் வேளாண் வானிலை தகவல் சேவை மையம் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்றுவரை வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டின் வடகிழக்கு வேளாண் மண்டலமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மற்றும் கூடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து (புதுதில்லி) பெறப்பட்ட வானிலைத் தகவலை ஆராய்ந்து பதிவு செய்யப்பட்ட கால்நடை விவசாயிகளுக்கு தகவல் அனுப்பப்படுகிறது, மேலும் M.Kisan என்ற குறுஞ்செய்தி அனுப்பும் செயலி மூலமாகவும் வானிலை தகவல் அனுப்பப்படுகிறது, இச் செயலியில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.