கால்நடை விரிவாக்கக் கல்வித் துறை 1963ஆம் ஆண்டு இளநிலைப் பட்ட மாணவர்களுக்குச் சமூகவியல், கிராமப்புற வளர்ச்சி, உழவர்களுக்கான தொழில்நுட்பப் பரிமாற்றம் போன்றவற்றைக் கற்பிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டது. தகவல் தொடர்பு மற்றும் தொழில் முனைவோர் துறை 01.05.2003 அன்று இந்தத் துறையுடன் இணைக்கப்பட்டுக் கால்நடை விரிவாக்கம் மற்றும் தொழில்முனைவோர் துறை என மறு பெயரிடப்பட்டது.
இந்தியக் கால்நடை மருத்துவக் கழகத்தின் (VCI) புதிய பாடத் திட்டத்தின்படி கால்நடை விரிவாக்கக் கல்வித் துறை, கால்நடை விரிவாக்கக் கல்வியை, கால்நடைப் பொருளாதாரத் துறையுடன் இணைந்து நடத்துகிறது.
தொழில்நுட்பத் தேவைகள், திட்டத்தாக்கப் பகுப்பாய்வு, பயிற்சி முறைகள், பாலின ஆய்வுகள், கடைப்பிடிக்கப்பட்ட ஆய்வுகள், இடர்ப்பாடு ஆய்வு, உள்ளடக்கப் பகுப்பாய்வு, வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் பிற விரிவாக்க மைய ஆய்வுகள், வெகுசன ஊடகம், தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், தொலைநிலைக் கல்வி, மாணவர் மதிப்பீட்டு ஆய்வுகள், கால்நடைப் பண்ணையம், பொருளாதாரப் பகுப்பாய்வு, காலநிலை மாற்றம், மனித வள மேலாண்மை, மனித விலங்கு மோதல், சந்தைசார் விரிவாக்கம் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற பல்வேறு தலைப்புகளில் முதுநிலைப் பட்ட ஆராய்ச்சிகள் கால்நடை விரிவாக்கக் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படுகின்றன.
1) தொலைபேசி, தபால், இணைய வழி மற்றும் கல்லூரிக்கு நேரடியாக வருகை தரும் விவசாயிகளுக்கு இந்தத் துறை ஆலோசனைச் சேவைகளை வழங்குகிறது.
2) விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கக் கால்நடை வளர்ப்பு நடைமுறைகள் குறித்த குறும்படங்களைத் தயாரிக்க மாணவர்களுக்கு இத்துறை வழிகாட்டுகிறது.
3) இத்துறையில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களின் பட்டியல்
4) கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு குறித்து ஆடியோ பாடல் மற்றும் குறுந்தகடுகள் தயாரிக்கப் பட்டுள்ளன.
1. வேளாண் சமூகத்திற்குக் கால்நடைத் தொழில்நுட்பங்களைப் பரிமாற்றம் செய்வதற்கு ஏதுவாக ஒலிஒளி, ஒலிக் கருவிகளை உருவாக்க மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க இத்துறையில் கீழ்க்கண்ட நவீன ஆய்வகங்கள் மற்றும் அலகுகள் உள்ளன.
2. கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், கூட்டங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்காக இரு கருத்தரங்க அரங்குகள் மற்றும் காணொளிக் கருவிகள் வசதிகளுடன் கூடிய ஒரு மாநாட்டுக் கூடம் உள்ளது.