mvc

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி

கல்வி சிறப்புப் பிரிவு


கல்விப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 2002-2003ஆம் ஆண்டு முதல் கல்விச் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டது. கல்வி சிறப்புப் பிரிவின் நோக்கம் இளநிலை, முதுநிலைப் பட்ட மாணவர்களின் கல்வி செயல்திறனைக் கண்காணித்து மேம்படுத்துவதாகும்.

குறிக்கோள்கள்

  • இளநிலைப் பட்ட, முதுநிலைப் பட்டக் கல்வியுடன் தொடர்புடைய கல்வி அட்டவணைகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளைத் தயாரித்தல்
  • இளநிலைப் பட்ட, முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்துவதற்கு வசதிகள் செய்தல்

உள்கட்டமைப்பு

  • இணையதள வசதியுடன் துறையின் ஆவணங்கள் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ளன.
  • ஒலி ஒளிக் காட்சி வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள்
  • கேட்பொலி வசதிகளுடன் கூடிய தேர்வுக் கூடங்கள்
  • அதிவேக அச்சிடுதல் மற்றும் பதிவுகளைத் தயாரித்தல், வினாத்தாள்களை நகலெடுத்தல்

செயல்பாடுகள்

1) இளநிலைப் பட்டக் கல்வி

  • முதல் கல்வியாண்டில் நோக்குநிலைத் திட்டத்திற்கான ஏற்பாடு
  • கல்லூரி வளாகம் மற்றும் விடுதியில் வன்கொடுமை (Ragging) செய்வதைத் தடுக்கப் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
  • ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் பதிவு மேற்கொள்ளுதல்
  • பாட ஆசிரியர்களின் பட்டியலைத் தயாரித்தல் – கால அட்டவணையை இறுதி செய்தல்
  • கல்வி ஆண்டிற்கான கால அட்டவணை தயாரித்தல்
  • இளநிலைப் பட்ட மாணவர்களின் உள்மதிப்பெண்கள் உள்ளீடுகள் சரிபார்ப்பு
  • ஒவ்வொரு மாணவருக்கும் வழிகாட்டி / ஆலோசகர்கள் ஒதுக்கீடு
  • மாணவர்களுக்குப் பல்வேறு உதவித்தொகைகளைச் செயலாக்குதல் மற்றும் வழங்கல்
  • தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுகென சிறப்புத் தேர்வு நடத்துதல்
  • மாணவர்களுக்கான உறைவிடப் பயிற்சித் திட்டம், செயலாக்கம் மற்றும் உறைவிடப் பயிற்சி உதவித்தொகை வழங்கல் மற்றும் இறுதி நேர்காணல் தேர்வை ஏற்பாடு செய்தல்

2) முதுநிலைப் பட்டக் கல்வி

  • மாணவர்கள் மற்றும் துறைகளுக்குப்பருவத் தேர்வுத் தொடக்கம் மற்றும் நிறைவு தேதிகளை அறிவித்தல்
  • முதுநிலைப் பட்ட மாணவர்களுக்கான பதிவு மேற்கொள்ளல்
  • சரிபார்ப்பிற்குப் பிறகு ஒப்புதலுக்காகப் பல்கலைக்கழகத்திற்குப் பூர்த்தி செய்யப்பட்ட பதிவு அட்டவணை அனுப்புதல்
  • பொதுத் தேர்வுக் கூடத்தில் உள்மதிப்பீடு மற்றும் தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணை தயாரித்தல், பருவ முறை இறுதித் தேர்வு நடத்துதல்
  • ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட உள் மற்றும் நடைமுறை மதிப்பெண்கள் சரிபார்ப்பு
  • முதல்வர் ஒப்புதலுக்காகப் பாட வேலை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளைச் சரிபார்த்து அனுப்புதல்
  • விரிவான தகுதித் தேர்வு, முன்மொழிவுகளைச் செயலாக்குதல் மற்றும் கேள்வித்தாளை தயாரிப்பதற்காகப் பல்கலைக்கழகத்தால் அடையாளம் காணப்பட்ட புறநிலை வல்லுநரைத் தொடர்பு கொள்ளல்
  • பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுச் சுருக்கத்தை அனுப்புதல்

சேவைகள்

  • கல்வி உதவித்தொகை, கடன்கள் போன்றவற்றிற்காக மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்குதல்
  • அடையாள அட்டை மற்றும் நூலக அட்டை வழங்க ஏற்பாடு செய்தல்
  • படிப்புப் பயணங்களின் ஏற்பாடு
  • பேருந்து மற்றும் தொடர் வண்டிகளில் மாணவர் பயணச் சலுகைக்கு ஏற்பாடு
  • மாற்றுச் சான்றிதழ் மற்றும் நடத்தைச் சான்றிதழ் தயாரித்தல்
  • பல்கலைக்கழகப் பட்டமளிப்பு மற்றும் கல்லூரி நாளில் வழங்கப்பட வேண்டிய விருதுகள் / பதக்கப் பட்டியல்களை தயாரித்தல்
  • நடப்புக் கல்வி ஆண்டிற்கான நாட்காட்டி மற்றும் பாட அட்டவணை தயாரித்தல்
  • கேட்புக் காணொலி முறையைப் (audio visual system) பராமரித்தல் மற்றும் மாணவர் நாள் மையத்தில் இளநிலைப் பட்ட, முதுநிலைப் பட்ட வகுப்பு அறைகளின் தூய்மையைக் கண்காணித்தல்
  • முதல்வர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாணவர்கள் கோரும் வசதிகளை வழங்குதல்.

வல்லுநர்கள்

  • முனைவர் டி.ஏ.கண்ணன், பேராசிரியர் மற்றும் தலைவர்
  • முனைவர் பி. வீரமணி, இணைப் பேராசிரியர்

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்

கல்வி சிறப்புப் பிரிவு

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை-600 007

தொலைபேசி: +91-44-25304000- 2099

மின்னஞ்சல்: hodednmvc@tanuvas.org.in