நமது நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் பால்வளத் துறையின் முக்கியபங்கை கருத்தில் கொண்டு 1947 ஆம் ஆண்டு சென்னை கால்நடை மருத்துவக் கல்லுரியில் பால்வள அறிவியல் துறை தொடங்கப் பெற்றது. பிறகு ஜி.எம்.வி.சி பட்டப் படிப்பாக கால்நடை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர். சி.என்.ஸ்டார்க் என்பவர் பால்வள அறிவியல் துறையின் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த துறையில் தற்போது அனைத்து வசதிகளும் இயந்திரங்களும் கொண்ட பால் பதனிடும் நிலையம் மூலம் வருடம் முழுவதும் பால் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பூட்டிய பால்பொருட்கள் தயாரிப்பு நடைபெற்று வருகிறது.
கால்நடை மருத்துவ குறைந்தபட்ச பாடத்திட்டம் – 2016ன் படி இளங்கலை மாணவர்களுக்கு கீழ்கண்ட பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து கால்நடை மருத்துவக் கல்லுரிகளின் பயிற்சி மாணவர்களுக்கும் இங்குள்ள மாதிரி பால்பதனிடும் நிலையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
1958ஆம் ஆண்டு முதல் பால்வள அறிவியலில் முதுநிலை பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. 1985ஆம் ஆண்டில் பால்வள தொழில்நுட்பம், பால்வள நுண்ணுயிரியல் மற்றும் பால்வள வேதியியல் என மூன்று பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு அளிக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு முதல் முனைவர், பட்டப்படிபபு வழங்கப்பட்டு வருகிறது. பால்வள அறிவியல் என 2004ம் ஆண்டு முதலும் ஒருங்கிணைந்த கால்நடை உற்பத்திப்பொருட்கள் (பால்வள அறிவியல்) என 2010ம் ஆண்டு முதலும் முதுநிலை பட்டப்படிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்பிரிவில் கீழ்கண்ட பாடங்கள் பயிற்றுவிக்கப் படுகின்றன.
2019ஆம் ஆண்டு முதல் பால்வள நுண்ணுயிரியலில் முதுநிலை பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.
பால்பதப்படுத்துதல் மற்றும் தர அமைப்பில் முதுகலை பட்டயப்படிப்பு
ஒரு வருட முழுநேர முதுகலை பட்டயப்படிப்பில் இரண்டு செமஸ்டர் பாடப் படிப்பு மற்றும் வணிகரீதியான பால் பதனிடும் நிலையத்தில் 45 நாட்கள் பயிற்சி வகுப்பு ஆகியன அடங்கும்.
இந்தத் துறை இந்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநிலக் கவுன்சில் ஆகியவற்றால் நிதியளிக்கப்பட்ட பத்து ஆராய்ச்சித் திட்டங்களை நிறைவு செய்துள்ளது.
வ.எண் | நிதி நிறுவனம் | திட்டத்தின் தலைப்பு |
---|---|---|
1 | அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, புதுடில்லி | பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான நிதி |
2 | இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் | பூஞ்சை காளான் தயாரிப்பை உருவாக்க லாக்டிக் அமில பாக்டீரியாவின் உயிர்வேதியியல் மதிப்பீடு |
3 | அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, புதுடில்லி | வீட்டில் யோகர்ட் தயாரிக்கும் கருவிகளை வடிவமைத்தல் |
4 | இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் – தேசிய விவசாய கண்டுபிடிப்புத் திட்டம் | அமைப்பு சாரா துறைக்கான பால் மதிப்பு சங்கிலி. |
5 | தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநிலக் கவுன்சில் | ஸ்பைருலினா செறிவூட்டப்பட்ட யோகர்ட் தயாரித்தல் |
6 | தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநிலக் கவுன்சில் | சன்னாவிலிருந்து பெறப்பட்ட பால் ஊநீரை சவ்வு தொழில் நுட்பம் மூலம் பதப்படுத்துதல் |
7 | தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநிலக் கவுன்சில் | ஸ்மார்ட் தயிர் தயாரித்தல் |
8 | தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநிலக் கவுன்சில் | விலைகுறைந்த சத்தான பால்பானம் தயாரித்தல் |
9 | தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநிலக் கவுன்சில் | பால் ஊநீர் கலந்த அரிசி கூழ் தயாரித்தல் |
10 | தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநிலக் கவுன்சில் | பூஞ்சைகளுக்கு எதிரான பூண்டு சாற்றின் செயல்பாடுகள் |
வ.எண் | நிதி நிறுவனம் | திட்டத்தின் தலைப்பு |
---|---|---|
1 | தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் | மதிப்பூட்டிய பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை சுயநிதித் திட்டம் |
பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை உற்பத்திப் பொருட்கள் (பால்வள அறிவியல்) துறை,
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
வேப்பேரி, சென்னை – 600 007
தொலைபேசி : + 91 44 – 25304000 விரிவாக்கம் 2053
மின்னஞ்சல் முகவரி: hoddscmvc@tanuvas.org.in