mvc

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி

கால்நடை உடற்கூறியல் துறை


சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட 1903ஆம்ஆண்டிலேயே கால்நடை உடற்கூறியலைக் கற்பித்தலும் தொடங்கியது.

குறிக்கோள்கள்

  • இளநிலை மற்றும் முதுநிலைப் பட்ட மாணவர்களுக்குக் கால்நடைகளின் ஒப்பீட்டு உடற்கூறியல் கற்பித்தல்
  • களப் பணிக் கால்நடை மருத்துவர்களுக்கு, உடற்கூறியல் அறிவைப் புதுப்பித்தல், உடல் பரிசோதனை மற்றும் அறுவைச் சிகிச்சை முறைகளில் பயன்படுத்தக்கூடிய உடற்கூறியல் செய்முறைப் பயிற்சிகளை வழங்குதல்.
  • அடிப்படை மற்றும் பயனுள்ளஆராய்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தல்
  • மின்னணு ஊடாடும் ஒலி, ஒளிக்காட்சி மூலம் கற்பித்தல் மற்றும் கற்றல் உதவிகளை உருவாக்குதல்

உள்கட்டமைப்பு

  • நூறு ஆண்டுகள் பழமையான பாரம்பரியக் கட்டடத்தில் உள்ள நன்கு காற்றோட்டமான உடற்கூறியல் செய்முறை மற்றும் விரிவுரை அறையில் எல்சிடி வசதிகள்இளநிலைப் பட்டமாணவர்களுக்கு ஒப்பீட்டு அளவில் மொத்த உடற்கூறியல் ஆய்வுகளுக்கான மாதிரிகளைக் கற்றுக்கொள்ள மற்றும் கையாள வசதிகள்.
  • திசுவியல் மற்றும் கருவியல் வகுப்புகளுக்கான தனித்த செய்முறை அறையில் தன்விளக்கக் காட்சிப் பலகைகள் மற்றும் புகைப்பட நுண்ணோக்கியுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி திரை வசதி
  • முதுநிலைப் பட்ட ஆராய்ச்சி ஆய்வகமனது திசுவியல், திசு வேதியியல் மற்றும் நோய் எதிர்ப்புத் திசு வேதியியல் ஆய்வுகளுக்கு நன்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • நன்கு பராமரிக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் கால்நடை உடற்கூறியலின் அனைத்துக் கிளைகளையும் உள்ளடக்கிய பல பதப்படுத்தப்பட்ட தனித்துவமான மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், அருங்காட்சியகமானது நூறு ஆண்டுகள் பழமையான குதிரை, நாய் மற்றும் எருதுகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் கொண்டு அதன் பெருமையை எடுத்துரைக்கிறது.

கருவிகள்

  • எல்சிடி மற்றும் மின்னணுப்புகைப்படக்கருவியுடன் பல தலை நுண்ணோக்கி
  • மிதவை உபகரணத்துடன் கூடிய திசு உட் பொதிப்பான்
  • நுண்திசு வெட்டி
  • இமேஜ் கம்ப்யூட்டிங் நுண்ணோக்கி
  • செங்குத்து லேமினார் காற்றோட்டமுகடு
  • மின்னணுப்புகைப்படக்கருவியுடன்கூடியடிரினோகுலர் நுண்ணோக்கி
  • பைனாகுலர் நுண்ணோக்கிகள்
  • புகைப்பட இணைப்புடன் கூடியஆக்ஸியோபிளான் நுண்ணோக்கி

கல்வி

  • இளநிலைப்பட்டப்படிப்பு
  • முதுநிலைப் பட்டப் படிப்பு
  • முனைவர்பட்டப்படிப்பு

வல்லுநர்கள்

  • கீதா இரமேஷ், பேராசிரியர் மற்றும் தலைவர்
  • எஸ். உஷா குமாரி, பேராசிரியர்

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும்தலைவர்,

கால்நடை உடற்கூறியல் துறை,

சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி,

சென்னை -600 007.

தொலைபேசி: +91-44-25304000-2072