mvc

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி

உழவியல் துறை



தோற்றமும் வளர்ச்சியும்

உழவியல் துறை, சென்னை கால்நடை மருத்துவக் கல்லுரியில் பழமையான துறைகளில் ஒன்றாகும். இது 1940 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் துறையின் முக்கிய நோக்கம் மண், நீர், பயிர் மற்றும் காலநிலை போன்ற காரணிகளைப் பற்றி கற்பிப்பது மற்றும் குறிப்பாக தீவனப் பயிர் உற்பத்தியில் இந்தக் காரணிகளின் தொடர்பு பற்றி விரிவாகக் கற்பிப்பதாகும். உழவியல் துறையின் வாயிலாக உழவியல் கொள்கைகள், தீவனப் பயிர் உற்பத்தி, கலப்பு விவசாயம், பண்ணை மேலாண்மை, தீவன உற்பத்தி மற்றும் மேய்ச்சல் நில புல்வெளி மேலாண்மை ஆகிய பாடத்திட்டங்கள் வழங்கப்பட்டன. தற்போது இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிலின் படி, தீவன உற்பத்தி மற்றும் பாதுகாப்பு குறித்த பாடத்திட்டத்தை உழவியல் துறையின் மூலமாக முதலாம் ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வழங்குகின்றது.


குறிக்கோள்கள்

  • உழவியல், தீவன உற்பத்தி மற்றும் பாதுகாப்பு, மேய்ச்சல் நில புல்வெளி மேலாண்மை ஆகிய பாடத்திட்டங்கள் சார்ந்த கல்வியை இளங்கலை மாணவர்களுக்கு வழங்குதல்.
  • உழவியல் துறை சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வது மற்றும்
  • தீவனப் பயிர் சாகுபடி மற்றும் உற்பத்தி குறித்த புதிய தொழில்நுட்பங்களை விவசாய மக்களிடையே பரப்புதல்.

செயல்பாடுகள் மற்றும் சேவைகள்

சேவைகள்

  • தீவனப்பயிர்கள் பற்றிய வேளாண் உத்திகளை முன்களப்பணியாளர்கள் / கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் பிற பயனாளிகளுக்கு, தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றின் கீழ் பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மூலம் பரப்பப்படுகிறது.
  • பசுந்தீவன உற்பத்தி பண்ணையில் இயந்திரமாக்குதல், நுண்ணீர்ப்பாசனம் மற்றும் மேய்ச்சல் நில மேலாண்மை குறித்து 270 உதவி கால்நடை மருத்துவர்களுக்கு 5 நாள் பயிற்சி வழங்கப்பட்டது.
  • தீவனப்பயிர்களில் உற்பத்தி முறைகள் குறித்த தொழில்நுட்பங்கள், விவசாய மக்களுக்கு விரிவாக்க கல்வி இயக்ககம், வேளாண் அறிவியல் நிலையம், பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணை, தன்னார்வ நிறுவனங்கள் மூலமாக நடத்தப்படும் பயிற்சியில் உழவியல் துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கின்றனர் .
  • தீவனப்பயிர்கள் சம்பந்தமான விரிவாக்க நடவடிக்கைகள், ஆங்கில மற்றும் தமிழில் பிரபலமான கட்டுரைகள், துண்டு பிரசுரங்கள், சிறு புத்தகங்கள் வாயிலாக விவசாய சமூகம் பயன்பெறுமாறு வெளியிடப்படுகின்றன.
  • தீவனம் மற்றும் தீவன விதைகள் தொடர்பான கண்காட்சிகள், தானுவாஸ் ஏற்பாடு செய்த அறிவியல் நகர பிராந்திய கண்காட்சிகள் மற்றும் பொங்கல் விழா கொண்டாட்டங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

கல்வி

  • இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் (2018) மூலம் பரிந்துரைக்கப்பட்ட அகில இந்திய மாதிரி பாடத்திட்டம் வாயிலாக எல்.பி.எம். - யூனிட் 2 - தீவன உற்பத்தி மற்றும் பாதுகாப்பு என்ற பாடத்திட்டம் முதலாம் ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மாணவர்களுக்கு உழவியல் துறையின் மூலமாக வழங்கப்படுகிறது. இளங்கலை மாணவர்களுக்கான செயல்முறை வகுப்புகளை திறன்பட நடத்துவதற்கும் மற்றும் இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் பாடத்திட்டத்தின் கட்டாயத் தேவையை பூர்த்தி செய்வதற்கும், கல்லுரி வளாகத்தில் ஐ.சி.ஏ.ஆர் மேம்பாட்டு மானியத்தின் கீழ் பல்வேறு தீவனப்பயிர்கள் சிறிய பாத்திகளில் செயல்முறை விளக்கத் திடல்களாக வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
  • ஒவ்வொரு செயல்முறை பாடத்திட்டத்திற்கான செயல்முறை வகுப்புகளை முறையாக ஒருங்கிணைத்து ஒரு முழுமையான செயல்முறை பயிற்சிக் கையேடு தயாரிக்கப்ப்ட்டு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. இது மாணவர்களின் செயல்முறை அறிவை வளப்படுத்தும் பின்னணிப் பொருளாகவும் அமையும். இந்த உழவியல் துறையின் மூலம் இளங்கலை படிப்புகளுக்கு மொத்தம் 16 செயல்முறை கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • ஏஜிஆர் 111 - வேளாண் மற்றும் தீவனப்பயிர் உற்பத்தியின் கோட்பாடுகள் - 1
  • ஏஜிஆர் 121 - கலப்பு விவசாயம் மற்றும் பண்ணை மேலாண்மை - 1
  • எல்பிஎம் 112 - தீவன உற்பத்தி மற்றும் மேய்ச்சல் நில புல்வெளி மேலாண்மை - 8
  • எல்பிஎம் 121 - தீவன உற்பத்தி மற்றும் மேய்ச்சல் நில புல்வெளி மேலாண்மை - 3
  • எல்பிஎம் - யூனிட் 2 - தீவன உற்பத்தி மற்றும் பாதுகாப்பு - 3 (திருத்தப்பட்ட விசிஐ பாடத்திட்டம் 2018) தீவன உற்பத்தி மற்றும் மேய்ச்சல் நில புல்வெளி மேலாண்மை எல்பிஎம் 121 பாடத்திட்டத்திற்கான விரிவுரை குறிப்புகள் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு பின், மாணவர்களின் விரிவான புரிதலுக்காக தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
  • எல்பிஎம் - யூனிட் 2 - தீவன உற்பத்தி மற்றும் பாதுகாப்பு பாடத்திட்டத்திற்கான விரிவுரை குறிப்புகள் தயாரிக்கப்பட்டு, கால்நடை மற்றும் கோழி உற்பத்தி மேலாண்மை என்ற புத்தகத்தில் ஒரு பிரிவாக ஒருங்கிணைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

கற்பித்தல் முறைகள்

  • கல்லுரி வளாகத்தில் முதன் முறையாக தீவனப்பயிர்கள் சார்ந்த செயல்விளக்கப் பாத்திகள் அமைக்கப்பட்டு, செயல்முறை வகுப்புகள் நடத்தவும், மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் செயல்முறை பயிற்சிகளை செய்து காட்டவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
  • எல்பிஎம் 121 தீவன உற்பத்தி மற்றும் மேய்ச்சல் நில புல்வெளி மேலாண்மை குறித்த பாடத்திட்டத்திற்கான இ - உள்ளடக்கங்கள் மற்றும் இயங்குபடம் மற்றும் நிரல் தொடர் வகுப்புகள் ஒலிப்பதிவோடு சேர்த்து www.eleranvet.net இல் இ - முறையில் பதிவேற்றப்பட்டது.
  • மாணவர்களின் செயல்முறை பாட வகுப்புகளை, படங்கள் காண்பித்து விளக்கம் அளிப்பதற்கு ஏதுவாக தீவனப்பயிர் ஆல்பம் தயாரிக்கப்பட்டு, உபயோகப்படுத்தப்படுகிறது.

ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றங்கள்

நிறைவுற்ற ஆராய்ச்சித் திட்டங்கள் (புற நிதி)

வ. எண். திட்டத்தின் பெயர் காலம் நிதி ஆதரவு பட்ஜெட் (லட்சங்களில்)
1. சொட்டு நீர் பாசனத்தின் கீழ் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் வள பயன்பாட்டு செயல்திறனை மதிப்பீடு செய்தல் 3 ஆண்டுகள் (2013-17) தமிழ்நாடு அரசு மாநில திட்டக்குழு 10.13
2. கால்நடை வளர்ப்பிற்காக நீரை சேமிக்கும் முறையில் ஹைட்ரோபோனிக் பசுந்தீவன உற்பத்தி 1 ஆண்டு (2014-15) என்.ஏ.டி.பி. திட்டம் 28.85
3. விவசாயத்தில் பாலின அறிவு அமைப்பு 2 ஆண்டுகள் (2015-17) ஐ.சி-ஏ.ஆர் 5.00
4. பண்ணை இயந்திரமயமாக்கல், சொட்டு நீர்பாசனம், மேய்ச்சல் நிலத்தில் புல் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய தீவனப்பயிர் வளர்ப்பு தொழில் நுட்பங்கள் 1 ஆண்டு (2014-15) கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை, தமிழ்நாடு 16.53
5. மாட்டு இறைச்சி, கடை கழிவுகளில் இருந்து பெறப்பட்ட மாட்டு செரிமானக்கழிவுளை அங்கக உரமாகவும், பூச்சிக்கொல்லி மற்றும் தோல் தொழிற்சாலை கழிவு நீரால் மாசுபட்ட மண்ணின் உயிர்சீரமைப்பிற்கு பயன்படுத்தி மதிப்பீடு செய்தல் 2 ஆண்டுகள் (2016-18) தமிழ்நாடு அரசு மாநில திட்டக்குழு தமிழ்நாடு அரசு நிலப் பயன்பாடு ஆய்வு வாரியம் 10.80
6. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஒருங்கிணைத்து பயோடெக் கிசான் மையத்தை நிறுவுதல் 2 ஆண்டுகள் (2019-20) டிபிடி 11.20
7. தீவனப்பயிர்களில் கழிவுநீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குவிவதால் ஏற்படும் ஊட்டச்சத்துக்களின் விளைவு ஒன்பது மாதங்கள் (03.07.2019 முதல் 02.04.2020 வரை) தானுவாஸ் துணை திட்ட நிதி 0.25
8. தீவன மக்காச் சோளத்தில் வெவ்வேறு அங்கக உரங்களின் பயன்பாட்டினால் தீவன உற்பத்தியில் ஏற்படும் விளைவு ஒன்பது மாதங்கள் (01.09.2019 முதல் 31.05.2021 வரை) தானுவாஸ் துணை திட்ட நிதி 0.25

நடப்பிலுள்ள ஆராய்ச்சித் திட்டங்கள் (புற நிதி)

வ. எண். திட்டத்தின் பெயர் காலம் நிதி ஆதரவு பட்ஜெட் (லட்சங்களில்)
1. தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பை மேம்படுத்துதல் 5 வருடங்கள்
2017-2022
வேளாண் ஆராய்ச்சி கழகம் – விவசாயிகள் முதல் திட்டம் 95.34
2. கோவிட் சூழலுக்கு பிந்தைய காலத்தில் உணவு மற்றும் தீவன தன்னிறைவுக்கு வீட்டுத்தோட்டத்துடன் கூடிய பல அடுக்கு வேளாண் மாதிரியை மேம்படுத்துதல் 1 வருடம்
2022-2023
தமிழ்நாடு மாநில திட்டக்குழு 4.94
3. தமிழ்நாட்டில் பசுந்தீவனத்தை சேமித்து அதன் இருப்பினை மேம்படுத்துதல் 2 வருடம்
2022-2024
வேளாண்மை பட்ஜெட் -தமிழ்நாடு அரசு 150.00
4. தீவனப்பயிர்கள் மற்றும் பயன்பாடு பற்றிய அகிலஇந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம்-தன்னார்வ மையம் 2023 முதல் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் 0.50
5. மாடித்தோட்டத்தில் பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்தல் 5 வருடங்கள் பல்கலைக்கழகச் சூழல் நிதி 1.94

உள்கட்டமைப்பு வசதிகள்

  • உழவியல் துறை ஆய்வகத்தில் தீவனப்பயிர் சம்மந்தப்பட்ட விளக்கப்படங்கள், மாதிரி உழவு கருவிகள், புல்வெட்டும்கருவி, ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் பை, தீவனப்பயிர் விதைகள், எருக்கள் மற்றும் உரங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டு, செயல்முறை வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • இயந்திரமயமாக்கல் முறையில் தோட்டவேலைகளான புல்வெட்டி கொண்டு புல்வெளி பராமரிப்பு செயல்தல், இயந்திர முறையில் மரம் காவத்து செய்தல், புதர் வெட்டி கொண்டு செடி வடிவமைப்பு செய்தல், களை இயந்திரம் கொண்டு களையெடுத்தல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.
  • மரங்கள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
  • பசுமைக்குடில் - செயல்முறை விளக்கத்திடலாக கல்லுரியில் கட்டப்பட்டுள்ளது.
  • மாடித்தோட்டம் அமைக்கப்பட்டு பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது

ஆசிரியர்களின் விவரங்கள்

ஆசிரியர் பெயர் வகிக்கும் பதவி மின்னஞ்சல் கைபேசி#
முனைவர். வ.மீ. சங்கரன் பேராசிரியர் மற்றும் தலைவர் sankaran.v.m@tanuvas.ac.in | sankaranvmagr@gmail.com +91-9940338315
முனைவர்.வெ.செ. மைனாவதி உதவிப் பேராசிரியர் mynavathi.v.s@tanuvas.ac.in +91-9942965516

பேராசிரியர் மற்றும் தலைவர்,
உழவியல் துறை,
அடிப்படை அறிவியல் புலம், சென்னைகால்நடைமருத்துவ கல்லூரி,
வேப்பேரி, சென்னை - 600 007
தொலைபேசி: +91-44-25304000
மின்னஞ்சல்: hodagrmvc@tanuvas.org.in