கால்நடை நலக்கல்வி மைய இயக்ககம்

கால்நடை நலக்கல்வி மைய இயக்ககம்

ஆய்வக விலங்கின மருத்துவப் பிரிவு


பல்கலைக்கழகத்தின் ஆய்வக விலங்கின மருத்துவப் பிரிவு, மாதவரத்தில் செயல்படுறது. விலங்குகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மற்றும் மேற்பார்வையிடும் வாரியத்தின் (CPCSEA) வழிகாட்டுதலின்படி, தட்பவெப்ப நிலையைப் பராமரிக்கும் அமைப்பு (HVAC), நுண்ணுயிரி நீக்கக் கருவி (Autoclave), புதிய விலங்குகளைத் தனிமைப்படுத்தும் அறை (Quarantine room) மற்றும் ஆய்வகத்துடன் கூடிய வகையில், இப்பிரிவு வடிவமைக்கப் பட்டுள்ளது.


குறிக்கோள்

  • தரமான ஆய்வக விலங்குகளை உற்பத்தி செய்து வழங்குதல்
  • ஆய்வக விலங்குகள் பராமரிப்பு மற்றும் நலம் பேணுதல் தொடர்பான ஆலோசனைகள் வழங்குதல்
  • கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு, ஆய்வக விலங்கின அறிவியல் மற்றும் விலங்குகளைத் தாக்கும் நோய்கள் பற்றிக் கற்பித்தல்

விற்பனை செய்யப்படும் ஆய்வக விலங்குகள்

  • எலி - விஸ்டர் அல்பினோ (Wistar Albino Rat)
  • சுண்டெலி - [சுவிஸ் அல்பினோ (Swiss Albino) மற்றும் பால்ப்/சி (BALB/c)]
  • கினி பன்றி - டங்கின் ஹார்ட்லி (Dunkin Hartley)

ஆய்வக விலங்குகள் விற்பனை பற்றிய தகவல்கள்

  • விலங்குகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மற்றும் மேற்பார்வையிடும் வாரியத்தினால் (CPCSEA) அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களுக்கு மட்டுமே ஆய்வக விலங்குகள் விற்கப்படும்.
  • CPCSEA வழிகாட்டுதலின்படி, ஆய்வக விலங்குகள் நெறிமுறைக் குழுவின் (IAEC) அனுமதி பெற்ற ஆராய்ச்சித் திட்டங்களுக்கே ஆய்வக விலங்குகள் விற்கப்படும்.
  • ஆய்வக விலங்குகள் வாங்க விரும்புவோர், 60 நாள்களுக்கு முன்னரே தேவைப்படும் விலங்கின் விவரங்களான இனம், வயது, பாலினம், எடை, தேவைப்படும் எண்ணிக்கை, தேதி ஆகியவற்றினைத் தெரிவிக்க வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்

  • பூர்த்தி செய்யப்பட விலங்குகள் வேண்டுதல் படிவம்
  • நிறுவனத் தலைவர் / துறைத் தலைவர் / ஆராய்ச்சி வழிகாட்டி / முதன்மை ஆராய்ச்சியாளர் இவர்களிடமிருந்து பெறப்பட்ட, 'இயக்குநர், கால்நடை நலக் கல்வி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால் பண்ணை, சென்னை- 600051' முகவரியிட்ட வேண்டுதல் கடிதம்
  • விலங்குகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மற்றும் மேற்பார்வையிடும் வாரியத்தினால் (CPCSEA) அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழின் நகல்
  • ஆய்வக விலங்குகள் நெறிமுறைக் குழுவின் (IAEC) அனுமதி பெற்ற சான்றிதழின் நகல்
  • ஆய்வக விலங்குகளைக் கொண்டு செல்வதற்கான குளிரூட்டப்பட்ட ஊர்தி, விலங்குகளை வைப்பதற்கான கூண்டுகள் (Cages), தண்ணீர்க் குப்பிகள் (Water bottles), தீவனம், படுக்கைப் பொருட்கள் ஆகியவற்றினை வாங்குபவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
  • விலங்குகளுக்கான கட்டணம் பணமாகவோ அல்லது 'இயக்குநர், கால்நடை நலக் கல்வி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால் பண்ணை, சென்னை - 600051' என்ற பெயரில் எடுக்கப்பட்ட காசோலையாகவோ வரைவோலையாகவோ இருக்க வேண்டும்.
  • அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விலங்குகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஆய்வக விலங்கினங்களின் விலைப் பட்டியல்

வ.எண். ஆய்வக விலங்கின வகை அரசு / இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் (ரூ.) தனியார் / லாபம் ஈட்டும் நிறுவனங்கள் (ரூ.)
1 சுண்டெலி 125 150
2 எலி 250 300
3 கினி பன்றி 550 700

தொடர்புக்கு:

ஆய்வக விலங்கின மருத்துவப் பிரிவு,
கால்நடை நலக் கல்வி மையம்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
மாதவரம் பால் பண்ணை, சென்னை- 600051
தொலைபேசி: 044-25551572 / 044-25551586: விரிவு 261
மின்னஞ்சல் : lamdcahs@tanuvas.org.in