கால்நடை நலக்கல்வி மைய இயக்ககம்

கால்நடை நலக்கல்வி மைய இயக்ககம்

கோழியின நோய்ப் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு ஆய்வகம், நாமக்கல்


 • தேசியப் பொருளாதாரத்திற்கு வளம் சேர்க்கும் கோழிகளைப் பாதுகாக்கவும், கோழிப்பண்ணைத் தொழில் நிலைத்துநின்று சிறந்து விளங்கவும் 04.09.1979 அன்று நாமக்கல்லில் கோழியின ஆராய்ச்சி மற்றும் நோய் கண்டறிதல் மையம் ஆரம்பிக்கப்பட்டது.
 • இம்மையம் தரம் உயர்த்தப்பட்டு 01.12.2012இல் கோழியின நோய்ப் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு ஆய்வகமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுப் பணியாற்றி வருகிறது.

குறிக்கோள்கள்

 • பண்ணைகளில் கோழிகளுக்கு ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் அவற்றை வராமல் தடுப்பதிலும் பண்ணையாளர்களுக்கு மிகுந்த சேவையாற்றி வருதல்
 • இறந்த கோழிகளைப் பரிசோதனை செய்து, நோய் கண்டறிந்து கூறுதல் மற்றும் ஆய்வகப் பரிசோதனை மூலம் நோய் கண்டறிதல்
 • ஊநீர் சோதனை மூலம் வெள்ளைக் கழிச்சல் மற்றும் சிறுமூச்சுக்குழல் நோய்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கண்டறிந்து ஆலோசனை கூறுதல்
 • கோழிப் பண்ணைகளில் பொதுவாகக் காணப்படும் நோய்களைக் கண்காணித்தல்

சேவைகள்

 • பண்ணையில் இறக்கும் கோழிகளை ஆய்வுசெய்து எந்த வகை நோயினால் கோழிகள் இறந்தன எனக் கண்டறிந்து ஆலோசனை கூறுதல்
 • பண்ணையில் ஏற்படும் நோய்ப் பிரச்சனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தல், மாதிரிகள் சேகரித்து ஆய்வகச் சோதனைக்கு உட்படுத்தி, அவற்றிற்கு உரிய ஆலோசனை அளித்தல்
 • கோழிகளில் இரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தி அவற்றிற்கு வெள்ளைக் கழிச்சல் மற்றும் சிறு மூச்சுக்குழல் நோய்க்கு எதிராக எதிர்ப்புச் சக்தி உள்ளதா என்று கண்டறிந்து தடுப்பூசிகளைப் பரிந்தரை செய்தல்
 • கோழிகளின் நோய்க்கெதிராக நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை ஆய்வகச் சோதனை மூலம் கண்டறிந்து சரியான நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைப் பரிந்துரை செய்தல்
 • கோழிப்பண்ணைகளில் குடிநீரில் நோய்க்கிருமிகள் உள்ளனவா என ஆய்வகப் பரிசோதனை செய்து, நோய்க்கிருமிகளின் ஆதிக்கம் இருப்பின் கிருமிநாசினிகளைப் பரிந்துரை செய்தல்
 • கோழித்தீவனம், தீவனச் சேர்க்கைகள மற்றும் தீவன மூலப்பொருட்களில் நோய்க்கிருமிகளின் ஆதிக்கம் உள்ளதா என ஆய்வகச் சோதனைக்கு உட்படுத்தி நிவாரணம் கூறுதல்
 • கோழிப்பண்ணைகள் மற்றும் குஞ்சுப் பொரிப்பகங்களில் உள்ள கொட்டகைச் சுற்றுப்புறச்சூழலில் நோய்க்கிருமிகள் ஆதிக்கம் உள்ளனவா எனக் கண்டறிந்து ஆலோசனை கூறுதல்
 • கோழிகளுக்கு அளிக்கப்படும் வெள்ளைக் கழிச்சல் நோய்த் தடுப்பூசியின் திறன் கண்டறிந்து கூறுதல்
 • பண்ணைக்கு ஆய்வக அறிவியலாளர்கள் பயணம் செய்து பண்ணையாளர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தல்

ஆய்வகச் சோனைகள் மற்றும் கட்டண விவரம்

வ.எண். சோதனையின் பெயர் சோதனைக்குப் பயன்படுத்தும் மாதிரிகள் ஒரு மாதிரிக்குக் கட்டணம் (ரூபாய்)
1 இறந்த கோழிகள் பரிசோதனை ஒரு பண்ணைக்கு 10.00
2 வெள்ளைக் கழிச்சல் (RD) நோய் எதிர்ப்புச் சக்தி இரத்தம் - வடிதாள் (Filter Paper) (HI) 05.00
3 சிறுமூச்சுக்குழல் (IB) நோய் எதிர்ப்புச் சக்தி இரத்தம் - வடிதாள் (Filter Paper) (HI) 05.00
4 வெள்ளைக் கழிச்சல் (RD) நோய் எதிரிப்புச் சக்தி ஊனீர் (Serum) (HI) 10.00
5 சிறுமூச்சுக்குழல் (IB) நோய் எதிர்ப்புச் சக்தி ஊனீர் (Serum) (HI) 10.00
6 வெள்ளைக் கழிச்சல் (RD) நோய் எதிர்ப்புச் சக்தி முட்டை (HI) 10.00
7 சிறுமூச்சுக்குழல் (IB) நோய் எதிர்ப்புச் சக்தி முட்டை (HI) 10.00
8 வெள்ளைக் கழிச்சல் (RD) நோய் உறுப்புகள் (HA) 10.00
9 சிறுமூச்சுக்குழல் (IB) நோய் உறுப்புகள் (HA) 10.00
10 கம்போரோ (IBD) நோய் உறுப்புகள் (AGPT) 10.00
11 நோய்க்கிருமிகள் சோதனை (Culture Tests) தீவனம், தீவன மூலப் பொருட்கள், தீவனச்சேர்க்கைகள்
a) ஈகோலை 100.00
b)கிலாஸ்டிரிடியம் 100.00
c)ஸ்டெஃபைலோகாக்கஸ் 100.00
d)சால்மோனெல்லா 200.00
12 நோய்க்கிருமிகள் குடிநீர் 50.00
13 கொட்டகையில் நோய்க் கிருமிகள் தட்டு திறந்த நிலைச் சோதனை (Plate exposure) 50.00
14 மொத்த நோய்க்கிருமிகள் எண்ணிக்கை (Total microbial count) தீவனம், மற்றும் குடிநீர் 250.00
15 மொத்த கோலிபாஃம் நுண்கிருமிகள் எண்ணிக்கை (Total coliform count) தீவனம், குடிநீர் மற்றும் மதிப்பூட்டிய உணவுப்பொருட்கள் 250.00
16 சிறுமூச்சுக்குழல் ((IB) நோய் கண்டறியப் பயன்படுத்தும் டிரிப்சின் நொதி (2 மி,லி) தீவனம், குடிநீர் மற்றும் மதிப்பூட்டிய உணவுப்பொருட்கள் 50.00
17 தடுப்பூசி மருந்துகள் வீரியம் கண்டறியும் சோதனை (Vaccine potency test) 50.00
18 பண்ணைப் பயணம் (பண்ணைக்கு மருத்துவர்கள் வந்து ஆலோசனை கூறுவதற்கும், இரத்த மாதிரிகள் சேகரிக்கவும்) 100.00

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கோழியின நோய்ப் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு ஆய்வகம்,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம்,
நாமக்கல் -637 002
தொலைபேசி: 04286- 266226
மின்னஞ்சல்: adl-vcri@tanuvas.org.in