வேளாண் அறிவியல் நிலையம், (விழுப்புரம் II) கள்ளக்குறிச்சி, புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதியுதவியுடன், சென்னையிலுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அங்கமாக 18.02.2019 அன்று முதல் செயல்படுகிறது. கள்ளக்குறிச்சி வேளாண் அறிவியல் நிலையம் பல்வேறு ஆய்வகத் தொழில்நுட்பங்களை விவசாய சமூகம், சுய உதவிக் குழுக்கள், கிராமப்புற இளைஞர்கள், விரிவாக்கப் பணியாளர்கள் போன்ற பல்வேறு குழுக்களுக்கு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பு மூலம் கொண்டு சேர்க்கும் மையமாகும். கள்ளக்குறிச்சி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், பயிற்சி, பண்ணை பரிசோதனை, முன்கள செயல்விளக்கம், ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையத்தில் உழவியல், மண்ணியல், தோட்டக்கலை, பயிர் பாதுபாதுகாப்பு, கால்நடை அறிவியல், கால்நடை விரிவாக்கம், மீன் வளம் மற்றும் உணவியல் போன்ற துறைகளைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் துறைகள் சார்ந்த பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். மேலும் விவசாயிகள் தேவைகளுக்கேற்ப வெளியிட பயிற்சிகள் நடத்தப்படுகிறது.
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம் (விழுப்புரம் II), கலசமுத்திரம், வி.ஆலம்பலம் (அஞ்சல்), சின்னசேலம் (தாலுகா), களக்குறிச்சி மாவட்டம் - 606301 . தொலைபேசி: +91-4286 266345/650 மின்னஞ்சல்: kvk-villupuram-2@tanuvas.org.in