vcri

விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

வேளாண் அறிவியல் நிலையம், நாமக்கல்


தோற்றம்

வேளாண்மை அறிவியல் நிலையம், நாமக்கல் 13.10.2004 அன்று விவசாயம், தோட்டக்கலை, பயிர் பாதுகாப்பு, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மண்ணியல் மற்றும் மனையியல் துறைகளின் விரிவாக்க மையமாக ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையமானது சென்னையிலுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்து அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ் மற்றும் புதுதில்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், ஹைதராபாத்திலுள்ள மண்டல திட்ட இயக்கத்தின் தொழில்நுட்ப பரிமாற்ற திட்டத்தின் பொருளாதார உதவியுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையம் பயிற்சி, மாதிரி பண்ணை, முதல்நிலை செயல்விளக்கம், வயல்வெளிச்சோதனை மற்றும் ஆலோசனைகளின் மூலம் விவசாயிகள் இ பண்ணை மகளிர், கிராமபுற இளைஞர்கள் மற்றும் விரிவாக்க பணியாளர்களுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருகிறது. விவசாயிகள் ஆண்டுதோறும் தொடர்ச்சியாக வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகளை வலியுறுத்தும் வகையில் விவசாயம், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, பயிர் பாதுகாப்பு, மண்வளம், மீன்வளர்ப்பு மற்றும் மனையியல் ஆகியவற்றை இணைத்து நிலையத்திலுள்ள 50 ஏக்கர் நிலப்பரப்பில் பல்வேறு மாதிரி திடல்கள் மற்றும் பண்ணை முறையை செயல்படுத்தி வருகிறது.


குறிக்கோள்கள்

  • நிலையான நில பயன்பாட்டிற்கு வயல்வெளிச் சோதi மூலம் வட்டாரத்திற்கேற்ற தொழில்நுட்பங்களை கண்டறிதல்.
  • விவசாயம் மற்றும் சார்பு தொழில்களில் புதிய தொழில் நுட்பங்கள் “முதல்நிலை செயல்விளக்கம் மூலம் உற்பத்தி சார்ந்த தரவுகளை உருவாக்குதல்.
  • விவசாயம் மற்றும் சார்பு தொழிலில் பணியாற்றும் விரிவாக்க அலுவலர்களுக்கு பயிற்சிகள் மூலம் ஆராய்ச்சியின் முன்னேற்றங்களை பகிர்தல்.
  • விவசாயிகள், கிராமபுற இளைஞர்கள் மற்றும் மகளிர்களுக்கு செயல்முறை கல்விச்சார்ந்த பயிற்சிகளை அளித்து, உற்பத்தியை பெருக்குதல் மற்றும் சுயவேலைவாய்ப்பை உருவாக்குதல்.
  • மாவட்டத்தின் விவசாயம் மற்றும் சார்பு துறைகளின் அறிவுசார் மையமாக விளங்குதல்.
  • உயர்தர விதைகள் மற்றும் இடுபொருட்கள் உற்பத்தி செய்து வினியோகம் செய்தல்.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் சேவைகள்

  • நாமக்கல் மாவட்டத்திற்கு விவசாயம், தோட்டக்கலை, கால்நடை, உணவியல் மற்றும் மீன்வளத்துறைச் சார்ந்த தொழில்நுட்பங்களை பரவலாக்கம் செய்ய வயல்வெளி பரிசோதனை மற்றும் முதல்நிலை செயல்விளக்கம் மேற்கொள்ளுதல்.
  • மாவட்டத்திற்கேற்ற புதிய தொழில்நுட்பங்களை முதல்நிலை செயல்விளக்கம் மூலம் பரவலாக்குதல்.
  • விவசாயிகள், பண்ணை மகளிர், ஊரக இளைஞர் மற்றும் விவசாய ஆர்வலர்களுக்கு நீண்ட மற்றும் குறுகிய கால பயிற்சி அளித்ததல் - உள்ளிட பயிற்சி, வெளியிட பயிற்சி, செயல்திறன் பயிற்சி, கட்டணப் பயிற்சி.
  • விரிவாக்க அலுவலர்களுக்கான நவீன தொழில்நுட்ப பயிற்சி அளித்தல்.
  • மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயம் மற்றும் சார்பு தொழில்கள் சார்ந்த அறிவுவள மையமாக செயல்படுதல்.
  • விவசாய இடுபொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செயல்தல்.
  • தொழில்நுட்ப ஆலோசனை வழங்குதல்.
  • விவசாயம்; மற்றும் சார்பு தொழிலை மேம்படுத்த ஆலோசனை; பூச்சி மற்றும் நோய்த்தாக்கப்பட்ட பயிர் மாதிரி பரிசோதனை மற்றும் ஆலோசனை; மாதிரி & செயல்விளக்க பண்ணை பார்வையிடல் மற்றும்; அறிந்து கொள்ளுதல்; புதிய கால்நடை பண்ணை தொடங்குவதற்கான ஆலோசனைகள்.
  • பண்ணை பார்வையிடல் மற்றும் ஆலோசனைகள்: இந்த நிலையத்தைச் சார்ந்த பண்ணையில் பயிர்கள், பண்ணை மாதிரிகள் மற்றும் தொழில்நுட்ப மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளது. .

இந்த நிலையத்தில் உழவியல், மண்ணியல், தோட்டக்கலை, பயிர் பாதுபாதுகாப்பு, கால்நடை அறிவியல், கால்நடை விரிவாக்கம், மீன் வளம் மற்றும் உணவியல் போன்ற துறைகளைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் துறைகள் சார்ந்த பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். இந்த நிலையத்தில் மாதந்தோறும் ஆறு உள்ளிட பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும் விவசாயிகள் வேண்டுகோள் தேவைகளுக்கேற்ப வெளியிட பயிற்சிகள் நடத்தப்படுகிறது.

பொதுமக்களுக்கு இந்நிலையத்தில் விற்பனைக்குறியவை:

  • அனைத்து வகையான தீவனப் பயிர் விதைகள்.
  • பழச்செடிகள் (காய்கறி விதைகள்).
  • கால்நடைகளுக்கான தாது உப்பு மற்றும் புத்தகம்.
  • கோழிக்குஞ்சுகள் மற்றும் மீன் குஞ்சுகள்.
  • உயிரி இடுபொருட்கள்.
  • பயிர்களுக்கான நுண்ணூட்ட சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள்.
  • மதிப்புக்கூட்டிய பண்டங்கள்.

வல்லுநர்கள்

வல்லுநர் பெயர் வகிக்கும் பதவி கைபேசி# மின்னஞ்சல்
முனைவர்.க.வேல்முருகன் பேராசிரியர் மற்றும் தலைவர் 9443441098 | 7904466319 rkaruvel@gmail.com
முனைவர் பெ.க.தேன்மொழி பேராசிரியர் 9443470198 drpgtm@gmail.com
முனைவர் செ.அழகுதுரை பேராசிரியர் 9786679700 jaialagu@gmail.com
முனைவர் சி.சங்கர் உதவிப் பேராசிரியர் 9943008802 csankaraento@gmail.com
முனைவர் ந.முத்துசாமி உதவிப் பேராசிரியர் 9626414346 muthu.ann@gmail.com
முனைவர் சு.சத்யா உதவிப் பேராசிரியர் 9787788005 sathyasivanandham@gmail.com
முனைவர் சி.பால்பாண்டி உதவிப் பேராசிரியர் 7358594841 paulpandi_s@yahoo.co.in
முனைவர் மா.டெய்சி பண்ணை மேலாளர் 9626553777 mdaisy.nkl@gmail.com

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் நிலையம்,
கால்நடை மருத்துவக் கல்லூரி & ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637 002,,
தொலைபேசி: +91-4286 266345/650
மின்னஞ்சல்: kvk-namakkal@tanuvas.org.in | Kvk.namakkal2004@gmail.com