தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (தானுவாஸ்) கீழ் கடந்த 1996 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு செயல்படும் வேளாண் அறிவியல் நிலையம் - குன்றக்குடி, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் மாவட்டத்தின் மொத்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இந்த வேளாண் அறிவியல் நிலையத்திற்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் 17.35 ஹெக்டர் பரப்பளவை அரக்கட்டளை மூலம் 99 வருட குத்தகைக்கு வழங்கியள்ளார். இந்த வேளாண் அறிவியல் நிலையமானது விவசாயம் மற்றம் விவசாயம் சார்ந்த துறைகளில் விவசாயிகளுக்கு அடிப்படை பயிற்சிகள் முதல் அலுவலர்களுக்கான மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் வரை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த முன்னோடி மையம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பண்ணை மகளிர், கிராமப்புற இளைஞர்கள்; மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, மண்ணியல், மீன்வளம், மனையியல் போன்ற பல்வேறு துறைகளில் பயிற்சி அளித்து அவர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகின்றது.
வேளாண் அறிவியல் நிலையங்கள் தங்கள் பகுதிகளுக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை வயல்வெளி பரிசோதனைகள், செயல்விளக்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்குத் தெரியப்படுத்துதல், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்களுக்கு தகவல்; வள மையமாக செயல்படுதல் போன்ற குறிக்கோள்களை செயல்படுத்த கீழ்கண்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட முக்கிய குறிக்கோள்களை அடைய வேளாண்மை மற்றும் அதனைச் சார்;ந்த துறைகளான, கால்நடை, தோட்டக்கலை, உழவியல், மண்ணியல், மீன்வளம்,வேளாண் பொறியியல் மற்றும் மனையியல் போன்ற துறைகளின் மூலம் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குத் தெரியப்படுத்தப்படுகின்றது. மேலும் முதல்நிலை செயல்விளக்கம் மற்றும் வயல்வெளிப் பரிசோதனை மூலம் விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களின் அனுகூலத்தைக் கண்டு நம்பிக்கை பெறுகின்றனர்.
வயல்வெளி ஆய்வு மூலம் விஞ்ஞானிகள் விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாகச் சென்று அவர்களின் வேளாண் பிரச்சினைகளை ஆய்வு செய்து தக்க தீர்வுகளை தருகின்றனர். இதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்கி கிராமப்புற பொருளாதார மேம்பாடு அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை,மண்ணியல், மீன்வளம், மனையியல் போன்ற பல்வேறு துறைகளில் விவசாயிகள், பண்ணை மகளிர், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வேளாண் அறிவியல் நிலைய வளாகத்திலும் மற்றம் வளாகத்திற்கு வெளியேயும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம் - 630 206 தொலைபேசி: +91-4577-264288 மின்னஞ்சல்: kvk-kundrakudi@tanuvas.org.in | kvk.sivaganga@icar.gov.in