vcri

விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

உழவர் பயிற்சி மையம், தேனி


குறிக்கோள்கள்

  • கால்நடை மற்றும் கோழி தொடர்பான தொழில் நுட்பங்களை இயற்கை வள மேலாண்மை உள்ளிட்ட முன்னணி நீட்டிப்பு / மாற்ற முகவர்கள் மூலம் மாற்றுவது.
  • கால்நடை மற்றும் கோழி ஆராய்ச்சியை வலுப்படுத்துதல் – தேவைப்படும் குறிப்பிட்ட தொழில் நுட்பங்களை வளர்ப்பதற்கான நீட்டிப்பு இணைப்பு.
  • கால்நடை அடிப்படையிலான வாழ்வாதாரத்தை நிலை நிறுத்துவதற்காக தனுவாஸ் / தொழில் முனைவோர் மூலம் கால்நடை உற்பத்தி சுழல் அமைப்பை மேம்படுத்துதல்.

சேவைகள்

உள்வளாகப் பயிற்சி

கால்நடைகள் மற்றும் கோழி பண்ணையாளர்களின் தேவைக்கேற்ப ஒவ்வொரு மாதமும் 2 நாட்கள் பயிற்சியாக கறவைமாடு வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, வெண்பன்றி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, நாட்டுக்கோழி மற்றும் காடை வளர்ப்பு பயிற்சிகள் சுழற்சி முறையில் நடத்தப்படுகிறது.

உள்வளாக பயிற்சி

வெளிவளாகப் பயிற்சி

தொலைவில் உள்ள பண்ணையாளர்கள் மையத்திற்கு வருவது கடினம் என்ற கருத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 2 வெளிவளாக பயிற்சிகள் சுமார் 20-30 பண்ணையாளர்கள் அனுமதிக்கப்பட்டு அளிக்கப்படுகிறது.

வெளிவளாகப் பயிற்சி

தொழில்சார்ந்த/ சுயவேலைவாய்ப்பு /திறன் மேம்பாடுப் பயிற்சிகள்

ஆண்டு முழுவதும் விருப்பமுள்ள பண்ணையாளர்களுக்கு கால்நடை பண்ணையம், மதிப்புகூட்டிய பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை வாய்ப்புகள் போன்ற பயிற்சிகள் நடத்தப்படுகிறது.

பண்ணைகளை பார்வையிட மற்றும் ஆலோசனைகள் வழங்குதல்

பண்ணையாளர்களின் தேவைக்கேற்ப கால்நடைப் பண்ணையை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

விவசாயிகள் மாதிரிப் பண்ணைகளைப் பார்வையிடுதல்
இறப்பறி (Post-mortem) பரிசோதனை

பண்ணையாளர்களின் தேவைக்கேற்ப கோழிகளின் இறப்பிற்கான காரணம் கண்டறிய பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்குதல்.

நோய் புலனாய்வு மற்றும் நோய்களின் மாதிரிப்பொருட்கள் சேகரித்தல்

கால்நடைகள் மற்றும் கோழிகளில் நோய் கிளார்ச்சி ஏற்படும் போது நோய் மாதிரிப் பொருட்கள் சேகரிப்பதுடன் நோய் புலனாய்வும் செய்யப்படுகிறது.

வங்கி கடன் உதவி பெற பண்ணை திட்ட அறிக்கை வழங்குதல்

கால்நடைகள் மற்றும் கோழி பண்ணையாளர்களின் தேவைக்கேற்ப வங்கி கடன் பெற பண்ணை திட்ட அறிக்கையை தயாரித்து பண்ணையாளர்களுக்கு வழங்குதல்.

பல்கலைக்கழகப் பொருட்கள் விற்பனை

பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிடப்பட்ட புத்தகங்கள், தீவன பயிர்களின் விதைகள், பல்கலைக்கழக தாது உப்புக்கலவை, பல்கலைக்கழக தாது உப்புக்கட்டி போன்றவைகள் கால்நடைகள் மற்றும் கோழி பண்ணையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

செயல்முறை விளக்கம்
செயல்முறை விளக்க பிரிவு
கிராம தத்தெடுப்புத் திட்டம்

வல்லுநர்கள்

வல்லுநர் பெயர் வகிக்கும் பதவி மின்னஞ்சல் கைபேசி#
முனைவர் என். விமல் ராஜ்குமார் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் vviimmaall@gmail.com +91-9865016174

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
உழவர் பயிற்சி மையம், தேனி,
சார் நிலை கருவூலகம் எதிரில், ரயில்வே கேட் அருகில்,
மதுரை ரோடு, தேனி – 625 531.
தொலைபேசி: +91- 4546 - 260047
மின்னஞ்சல்: ftctheni@tanuvas