தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் 05.06.1996 அன்று தனிப்பிரிவாக தொடங்கப்பட்டு பல்கலைக்கழக கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. 23.08.2021 முதல் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அரங்க கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
வ.எண் | பட்டப்படிப்பு | காலம் | மொத்தஇடங்கள் | கல்லூரி | |
---|---|---|---|---|---|
1 | கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு - BVSc&AH | 5½ ஆண்டுகள் (4½ ஆண்டுகள் + 1 வருட உள்ளிருப்பு பயிற்சி) –MSVE 2016 விதிகளின்படி | 540** | 120* | சென்னை கால்நடைமருத்துவக் கல்லூரி, சென்னை– 600 007 |
100 | கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்– 637 002 | ||||
100 | கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி– 627 358 | ||||
100 | கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு - 614 625, தஞ்சாவூர் மாவட்டம் | ||||
40 | கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தலை வாசல் கூட்ரோடு, சேலம் - 636 112 | ||||
40 | கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி–625 602 | ||||
40 | கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பண்ணைக் கிணறு, உடுமலைப்பேட்டை– 642 126 |
* தமிழக அரசு மற்றும் இந்திய கால்நடை மருத்துவ குழுமத்தின் ஆணைக்கேற்ப மாற்றத்திற்கு உட்பட்டது
** இந்திய கால்நடை மருத்துவக் குழுமத்தின் ஆணைக்கேற்ப மாற்றத்திற்கு உட்பட்டது
குறிப்பு: BVSc & AH-ல் 15 சதவீத இடங்கள், இந்திய கால்நடை மருத்துவக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
வ.எண் | பட்டப்படிப்புகள் | காலம் | மொத்தஇடங்கள் | கல்லூரி |
---|---|---|---|---|
1 | உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு- BTech-Food Technology | 4 ஆண்டுகள் | 40• | உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, கொடுவள்ளி, சென்னை– 600 052 |
2 | கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு- BTech–Poultry Technology | 4 ஆண்டுகள் | 40 | கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி, மத்திகிரி, ஓசூர் – 635 110 |
3 | பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு - BTech – Dairy Technology | 4 ஆண்டுகள் | 20 | உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, கொடுவள்ளி, சென்னை– 600 052 |
குறிப்பு: BTech (Food Technology)-ல் 15 சதவீத இடங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது
கீழ்க்கண்ட இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் (Online application) வரவேற்கப்படும். தகவல் தொகுப்பேடு, சேர்க்கைத் தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதரவிவரங்கள www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளங்களில் காணலாம். விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பம் மற்றும் தகுந்த சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் (Upload) செய்து, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பிற்கு தனி விண்ணப்பமும் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கு (BTech – FT / PT / DT) ஒரே விண்ணப்பமே போதுமானது.
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம்
புரட்சி தலைவி அம்மா அரங்க கட்டிடம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
மாதவரம் பால்பண்ணை, சென்னை– 600 051
தொலைபேசி எண்: 044 – 2999 7348 / 2999 7349
மின்னஞ்சல்: ce@tanuvas.org.in