மையத் தீவனத் தொழில்நுட்பப் பிரிவு

வரலாறு

பல்வேறு கோழி இனங்களுக்கு, தீவனம் அளிப்பதற்காக 2009இல் மையத் தீவனத் தொழில்நுட்பப் பிரிவு துவக்கப்பட்டது.

குறிக்கோள்

  • பல்கலைக்கழகப் பண்ணைகள், தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறையின் மாவட்டக் கால்நடைப் பண்ணைகள், பிற நிறுவனங்கள் மற்றும் கால்நடை வளர்க்கும் பண்ணையாளர் களுக்குப் பல்வேறு வகையான கால்நடை மற்றும் கோழித் தீவனங்கள் மற்றும் தனுவாஸ் தாது உப்புக் கலவைகளைத் தயாரித்து விற்பனை செய்தல்
  • பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் ஆராய்ச்சிகளுக்குத் தேவையான தீவனங்களைத் தயாரித்தல்
  • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் உற்பத்தித் திறனை அதிகரிக்கத் தேவையான கால்நடை ஊட்டச்சத்தியல் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்
CFTU Buliding

சேவைகள்

  • இந்த ஆலையில் தயாரிக்கப்படும் பல்வேறு வகையான கால்நடை மற்றும் கோழித் தீவனங்கள், தனுவாஸ் தாது உப்புக் கலவை, தனுவாஸ் ஸ்மார்ட் தாது உப்புக் கலவை ஆகியவை பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறையின் மாவட்டக் கால்நடைப் பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், தனியார் ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கால்நடை வளர்க்கும் பண்ணையாளர்களுக்கும் வழங்கல்
  • பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் ஆராய்ச்சிகளுக்குத் தேவையான தீவனங்கள் தயாரித்து வழங்கல்
  • கால்நடை விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக, பல்வேறு வகையான கால்நடை மற்றும் கோழித் தீவனங்கள், அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 முதல் பிற்பகல் 13.00 மணி வரை விற்றல்
  • கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு, கறவைப் பசு மற்றும் நாட்டுக்கோழிகளுக்குத் தீவனம் அளிப்பதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு, ஆலோசனைகள் வழங்கல்
கறவை மாட்டுத் தீவனம் முட்டைக்கோழிக் குஞ்சுத் தீவனம்
கன்றுத் தீவனம் முட்டைக்கோழி வளர் தீவனம்
வெள்ளாடு / செம்மறியாட்டுத் தீவனம் முட்டையிடும் கோழித் தீவனம்
வெள்ளாடு / செம்மறியாட்டுக் குட்டித் தீவனம் காடைக்குஞ்சுத் தீவனம்
இளம்பன்றித் தீவனம் முட்டையிடும் காடைத்தீவனம்
வளர்பன்றித் தீவனம் முட்டையிடும் வாத்துத்தீவனம்
பன்றித் தீவனம் தனுவாஸ் தாது உப்புக் கலவை

வல்லுநர்கள்

  • முனைவர் லி. இராதாகிருஷ்ணன், பேராசிரியர்
  • மருத்துவர் அ. ரூபா நந்தினி, உதவிப் பேராசிரியர்

முகவரி:

மையத் தீவனத் தொழில்நுட்பப் பிரிவு,

காட்டுப்பாக்கம் – 603 203, செங்கல்பட்டு மாவட்டம்.

தொலைபேசி: 044 - 27453029

மின்னஞ்சல்: cftu@tanuvas.org.in