இந்த நிறுவனம், மாணவர் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக, அணைத்து வசதிகளையும் கொண்ட அற்புதமான விடுதி வசதிகளை வழங்குகிறது. அனைத்து அறைகளும் போதுமான இட வசதி மற்றும் காற்றோட்டம் உள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விடுதி | வசதிகள் |
---|---|
பழைய விடுதி |
20 அறைகள் (ஒவ்வொரு அறையிலும் 3 மாணவர்கள்) 1 NRI அறை உணவு விடுதி தொலைக்காட்சி அறை சமையலறை விடுதி அலுவலகம் |
புதிய விடுதி | 14 அறைகள் (ஒவ்வொரு அறையிலும் 2 மாணவர்கள்) தொலைக்காட்சி அறை |
ஆண்கள் விடுதிக்கு தனி உணவு கூடம் உள்ளது. விடுதி காப்பாளர் மற்றும் துணை விடுதி காப்பாளர் ஆகியோரின் சிறந்த வழிகாட்டுதலுடன், மாணவர்களால் உணவு விடுதி நிர்வகிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு சுகாதாரமான மற்றும் சத்தான சைவ/அசைவ உணவு வழங்கப்படுகிறது.
விடுதி | வசதிகள் |
---|---|
பழைய விடுதி |
37 அறைகள் (ஒவ்வொரு அறையிலும் 3 மாணவர்கள்) 1 NRI அறை உணவு விடுதி தொலைக்காட்சி அறை விடுதி அலுவலகம் |
பெண்கள் விடுதிக்கு தனி உணவு கூடம் உள்ளது. விடுதி காப்பாளர் மற்றும் துணை விடுதி காப்பாளர் ஆகியோரின் சிறந்த வழிகாட்டுதலுடன், மாணவர்களால் உணவு விடுதி நிர்வகிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு சுகாதாரமான மற்றும் சத்தான சைவ/அசைவ உணவுகள் வழங்கப்படுகின்றன.
இக்கல்லூரி முதல்வர், கல்லூரி விடுதியின் ஒட்டுமொத்தப் பொறுப்பாளர். விடுதிகளில் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகள் விடுதி காப்பாளர் தலைமையில் ஒரு குழுவால் திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு மேற்பார்வை செய்யப்படுகிறது மற்றும் ஒரு ஆண்கள் துணை விடுதி காப்பாளர் மற்றும் ஒரு பெண் துணை விடுதி காப்பாளர் ஆகியோரால் உதவி செய்யப்படுகிறது. வழக்கமான அலுவலக வேலைகளைக் கவனிப்பதற்காக அலுவலக ஊழியர்கள் குழு உள்ளது.
விடுதி காப்பாளர் , துணை விடுதி காப்பாளர்கள், கல்விப் பிரிவுத் தலைவர், மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர், விளையாட்டுச் செயலர், உதவி நிர்வாகப் பொறியாளர்கள், நிர்வாக அலுவலர், மற்றும் மாணவர் பிரதிநிதிகள் என ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர்களாகக் கொண்ட விடுதி வசதிக் குழு, இக்கல்லூரி முதல்வர் தலைமையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பின்வரும் பணிகளை மேற்கொள்ள கூடுகிறது:
ஒவ்வொரு மாணவரும் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் ரூ. 230/- விடுதி காப்பாளர் அலுவலகத்திற்குத் தேவையான வைப்புத் தொகையை முறையாகச் செலுத்தி விடுதியில் சேர்க்க வேண்டும். 5000/- (ரூபாய் ஐயாயிரம் மட்டும்), உணவு கட்டண முன்பணம் ரூ. 3000/- (ரூபா மூவாயிரம் மட்டும்) மற்றும் இதர கட்டணங்கள் அவ்வப்போது விதிக்கப்படும்.