DCAPS

கால்நடை உற்பத்திக் கல்வி மையம்

ஆலம்பாடி கால்நடை இன ஆராய்ச்சி மையம், காரிமங்கலம்



ஆலம்பாடி மாட்டினம் என்பது தமிழ்நாட்டின் ஐந்து நாட்டு மாடுகளில் ஒன்றாகும். இந்த இனம் பொதுவாக காவிரி ஆற்றங்கரையில் உள்ளது. தமிழ்நாட்டின் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி, பிக்கிலி, பெரியூர், ஹாமனூர், கோட்டூர், பண்ணப்பட்டி, பூச்சரம்பட்டி, ஜம்புட், புதிநத்தம், உரிகம், அஞ்செட்டி, தொட்டமஞ்சி, பெட்டமுகிலாயம் ஆகிய கிராமங்களில் இந்த இனத்தின் எண்ணிக்கைகள் கணிசமாகக் குறைந்துள்ளது.

ஆலம்பாடி மாட்டினங்கள் பொதுவாக நடுத்தர அளவிலானவை. தோல் நிறம் சாம்பல், அடர் சாம்பல் அல்லது இரும்பு சாம்பல் நிறத்தில் இருந்து நெற்றி, வால் மற்றும் மூட்டுகளில் வெள்ளை அடையாளங்களுடன் மாறுபடும். பின்னோக்கி மற்றும் மேல்நோக்கி வளரும் நீண்ட கொம்புகளுடன் கூடிய நீண்ட குறுகிய தலை, நன்கு வளைந்த விலா எலும்புகள் மற்றும் நன்கு வளர்ந்த கூம்புகளுடன் கூடிய ஆழமான உடல். காளைகள் முதிர்ச்சி அடையும் போது சராசரி 350 கிலோ உடல் எடையும், மாடுகள் 300 கிலோ எடையும் இருக்கும். ஒரு ஆலம்பாடி மாட்டினங்கள் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 1-3 லிட்ட ஆகும்.

ஆலம்பாடி மாடுகளைப் பாதுகாக்கவும், இன மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வதற்காகவும், 2018-19 ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் ஆலம்பாடி கால்நடை இன ஆராய்ச்சி மையத்தை நிறுவ தமிழ்நாடு அரசு ரூ.400 லட்சம் அனுமதித்துள்ளது.

குறிக்கோள்கள்

  • ஆலம்பாடி மாட்டினங்ககளின் தூய இனக்கரு மந்தையை நிறுவி பராமரித்தல்
  • ஆலம்பாடி மாட்டினங்ககளின் கன்றுகளை இனப்பெருக்கம் செய்து விவசாயிகளுக்கு வழங்குதல்
  • இனத்தை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி ஆய்வுகளுக்கு உதவுதல்

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
ஆலம்பாடி கால்நடை இன ஆராய்ச்சி மையம்,
12/123, கோடலம்மன் கோயில் தெரு, (அகரம் சாலை)
காரிமங்கலம், தருமபுரி மாவட்டம் - 635 111
மின்னஞ்சல்: acbrc@tanuvas.org.in