கால்நடை நலக்கல்வி மைய இயக்ககம்

கால்நடை நலக்கல்வி மைய இயக்ககம்

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் நோயறிதல் மையம், மதுரை


03.09.1980 - ல் கோழியின ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக துவக்கப்பட்டு 01.04.1999 - ல் கால்நடை மருத்துவ பல்கலைகழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக பெயர் மாற்றப்பட்டு, தற்போது 04.02.2016 முதல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் நோயறிதல் மையமாக செயல்பட்டு வருகிறது.

குறிக்கோள்

 • விவசாயிகளுக்கும் தொழில்முனைவோருக்கும் கால்நடை வளர்ப்பில் பயிற்சி வழங்குதல்.
 • கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கான பிரச்சனைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்தல்.
 • கால்நடைகளில் உண்டாகும் நோய்களை கண்காணித்தல்.
 • சுயவேலை வாய்ப்பினை உண்டாக்க, விவசாயிகளுக்கு கால்நடை மற்றும் கோழிப்பண்ணைகளை அமைக்க உதவுதல்.


வழங்கப்படும் சேவைகள்

 • கால்நடை மேலாண்மை அறிவியல் அணுகுமுறையில் பல்வேறு கால்நடை வளர்ப்பு பற்றிய பயிற்சிகள் ஒலி-ஒளி காட்சியின் உதவியுடன் மகளிர் சுயஉதவிக்குழு, வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள். கீழ்கண்ட கால்நடை வளர்ப்பு பற்றிய கீழ்கண்ட பயிற்சிகள் இந்த மையத்தின் உயர் தகுதி வாய்ந்த, அனுபவம் வாய்ந்த, தொழில்நுட்ப பணியாளர்களால் வழங்கப்படுகின்றன.

வழங்கப்படும் பல்வேறு பயிற்சி திட்டங்கள்:

 • o கறவை மாடு வளர்ப்பு
 • செம்மறி ஆடு வளர்ப்பு
 • நாட்டுக்கோழி கோழி வளர்ப்பு
 • கொல்லைப்புற கோழி வளர்ப்பு
 • வான் கோழி வளர்ப்புப் பயிற்சி
 • கறிக் கோழி வளர்ப்புப் பயிற்சி
 • ஜப்பானிய காடை வளர்ப்பு
 • முயல் வளர்ப்பு
 • பன்றி வளர்ப்பு
 • மதிப்பூட்டிய பால் பொருட்கள் தயாரிப்பு
 • பசுந்தீவன உற்பத்தி
 • கால்நடை வளர்ப்பில் நோய் மேலாண்மை

நோய் கண்டறிதல் நடவடிக்கைகள்

 • நோய் அதிகமாக பரவும்போதும் பண்ணை உரிமையாளர்கள் கோரும் போதும் நோய் புலணாய்வு மேற்கொள்ளப்படும்.
 • கால்நடை மற்றும் கோழிகளில் நோய்களைக் கண்காணித்தல் மற்றும் கண்டறிதல்.
 • பிரேத பரிசோதனை நடத்துதல், நோயை உறுதி செய்வதற்கான மாதிரிகளை ஆய்வு செய்தல் மற்றும் தடுப்பு நடவரிக்கைகள் மற்றும் சிகிச்சையை பரிந்துரைத்தல்.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் நோயறிதல் மையம்,
கால்நடை சுகாதார ஆய்வு மையம்,
தியாகராஜர் பொறியியல் கல்லூரி சாலை,
திருப்பரங்குன்றம், மதுரை-625 005
தொலைபேசி: +91-452-2483903
மின்னஞ்சல்: maduraivutdc@tanuvas.org.in