கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம் - 636 112

வரலாறு

இக்கல்லூரி சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் (NH79), சேலத்தில் இருந்து 80கி.மீ தொலைவிலும், தலைவாசலில் இருந்து 5கி.மீ தொலைவிலும் உள்ள தலைவாசல் கூட்ரோடு என்னுமிடத்தில் 01.11.2019 அன்று முதல் செயல்பட்டுவருகிறது..

குறிக்கோள்

  • மாணவர்களுக்கு தரமான கால்நடை மருத்துவக் கல்வியை வழங்குதல்
  • கால்நடைகள், மக்கள் மற்றும் சமூகத்திற்கான ஒருங்கிணைந்த சுகாதாரக் கல்விகளை வழங்குதல்.

கல்வி

கால்நடை மருத்துவ அறிவியலில் 2020-21 முதல் இளநிலைப் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு 40 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

துறைகள்

  • கால்நடை உடற்கூறியல்
  • கால்நடை உடற்செயலியல்
  • கால்நடை உற்பத்தி மேலாண்மை
  • விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தி
  • கால்நடை உணவியல் துறை
  • கால்நடை மருத்துவ நோய் குறியியல் துறை
  • கால்நடை உயிர்வேதியியல்துறை
  • கால்நடை நுண்ணுயிரியல் துறை
  • கால்நடை பண்ணை வளாகம்
  • கால்நடை சிகிச்சை வளாகம்

முதல்வர்

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சேலம் - 636 112

தொலைபேசி எண்: +91-4282 - 290998, 290988

மின்னஞ்சல் முகவரி: deanvcrislm@tanuvas.org.in