விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், விழுப்புரம்


தோற்றம்

இந்த நிலயமானது மருதூரில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில், 29.10.2012 அன்று தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் அரசாணையின் படி வாடகைக் கட்டிடத்தில் நிறுவப்பட்டது. பின்னர் ஏப்ரல் 2015 முதல் இந்த மையம் டி.மேட்டுப்பாளையம், விழுப்புரம் - 605 601 இல் அமைந்துள்ள அதன் சொந்த கட்டிடத்தில் (4386 சதுர அடி) செயல்படத் தொடங்கியது. இந்த மையம் புதிய பேருந்து நிலையம் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம் - செஞ்சி - திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ளது.

குறிக்கோள்கள்

  • முன்கள விரிவாக்கப் பணியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லுதல்.
  • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க இணைப்பை வலுப்படுத்துதல்.
  • கால்நடைகளை அடிப்படையாகக் கொண்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்துவதற்காக கால்நடை உற்பத்திக்கான சூழலை மேம்படுத்துதல்.

வழங்கப்படும் செயல்பாடுகள் மற்றும் சேவைகள்

  • பல்வேறு கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு, தீவனப்பயிர் வளர்ப்பு மற்றும் இறைச்சி, பால் மற்றும் முட்டையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்தல் மற்றும் அவற்றை தேவைப்படும் விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதல் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துதல்.
  • விழுப்புரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து பிற அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பயனாளிகளுக்கு நிதியுதவியுடன் கூடிய பயிற்சிகளை ஏற்பாடு செய்தல்.
  • கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு பற்றிய கண்காட்சிகளை நடத்துதல்.
  • கால்நடை வளர்ப்பு மற்றும் பல்கலைக்கழக நிகழ்வுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நேரடியாக மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் நடத்துதல்.
  • பல்கலைக்கழகத்தின் பல்வேறு ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளில் தேவை அடிப்படையிலான நோய் ஆய்வுகள் மற்றும் கள சோதனைகளை நடத்துதல்.
  • கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து மக்கள் தொடர்புத் திட்டம் மற்றும் சிறப்பு மலடு நீக்க சிகிச்சை முகாம்களை நடத்துதல்.
  • பட்டதாரிகள் மற்றும் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கான திறன் மேம்பாடு / சுயதொழில் பயிற்சித் திட்டங்களை நடத்துதல்.

வழங்கப்படும் சேவைகள் மற்றும் விற்பனைக்கு உள்ள தயாரிப்புகள்

வ. எண் வழங்கப்படும் சேவைகள் / உள்ளீடுகளின் விற்பனை கட்டணங்கள் (ரூபாயில்)
1 சுயவேலைவாய்ப்பு/திறன் மேம்பாடு ஒரு மாத படிப்புகள் பால் பண்ணை -ரூ. 1000 , வெள்ளாடு வளர்ப்பு -ரூ. 1000 , செம்மறியாடு வளர்ப்பு - ரூ.500, பன்றி வளர்ப்பு - ரூ.2000
2 பண்ணையை காண வரும் பார்வையாளர்கள் ரூ.100/பார்வை
3 தனுவாஸ் தாது உப்பு கலவை ரூ. 75/கிலோ
4 தனுவாஸ் சிறப்பு தாது உப்பு கலவை ரூ. 65/கிலோ
5 தனுவாஸ் தாது உப்பு கட்டி ரூ. 60/உப்பு கட்டி
6 வேலிமசால் விதை 600/கிலோ
7 கோ-எஃப்எஸ் 31 - விதை ரூ. 450/கிலோ
8 நீர் மாதிரி பகுப்பாய்வு ரூ. 200
9 பிரேத பரிசோதனை ரூ. 20
10 பல்கலைக்கழக அச்சு வெளியீடுகள் (புத்தகங்கள்) பால் பண்ணை மற்றும் நாட்டு கோழி வளர்ப்பு (ரூ 50), ஆடு வளர்ப்பு (ரூ 40), பசுந்தீவன உற்பத்தி (ரூ 30) மற்றும் பிற வெளியீடுகள்
11 பல்கலைக்கழக கால்நடை கதிர் (தமிழ் மாத இதழ்) சந்தா ஆண்டு சந்தா - ரூ 200 ஆயுள் சந்தா - ரூ. 2000
12 வங்கித் திட்டங்கள் மொத்த செலவில் 0.25%

உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
டி.மேட்டுப்பாளையம் (அஞ்சல்), அயனம்பாளையம், விழுப்புரம் - 605 601.
தொலைபேசி: +91-4146 - 225244
மின்னஞ்சல்: vutrcvpm@tanuvas.org.in