விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், திருவண்ணாமலை


தோற்றம்

திருவண்ணாமலையில் கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் 12.02.2013 துவக்கப்பட்டது. இம்மையத்தில் 40 இருக்கை வசதியுடன், கூடிய பயிற்சி அரங்கத்தில் தொலைக்காட்சி, புரஜெக்டர் கருவி மற்றும் ஒலிப்பெருக்கி வசதிகளும் அமைந்துள்ளன.


குறிக்கோள்கள்

  • முன்கள விரிவாக்கப் பணியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லுதல்.
  • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க இணைப்பை வலுப்படுத்துதல்.
  • கால்நடைகளை அடிப்படையாகக் கொண்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்துவதற்காக கால்நடை உற்பத்திக்கான சூழலை மேம்படுத்துதல்.

செயல்பாடுகள் மற்றும் சேவைகள்

சேவைகள்

  • கால்நடைகள் மற்றும் கோழிகள் வளர்ப்பிற்கான உள் மற்றும் வெளி வளாகப் பயிற்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. கால்நடை பண்ணையாளர்கள், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கால்நடை தொடர்புடைய அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
  • கால்நடைகள் மற்றும் கோழிப் பண்ணைகளில் ஏற்படும் அன்றாட பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு விவசாயிகளுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையே இருவழிப் பாலமாக இம்மையம் செயல்படுகின்றது.
  • கால்நடைகளில் நோய் கிளர்ச்சி ஏற்படும் சமயங்களில், கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து, நோய் கிளர்ச்சிக்கான காரணங்களைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தல் மற்றும் தகுந்த தடுப்புமுறைகளை பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்துதல்.
  • கால்நடை வளர்ப்புத் தொழில் மூலம், சுய தொழில் துவங்க, விவசாயிகள் மற்றும் இளைஞர்களை ஊக்குவித்தல்.
  • மத்திய மற்றும் மாநில மேம்பாட்டுத் திட்டங்களில் ஒருங்கிணைந்து செயல்படுதல் மற்றும் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.
  • பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை விவசாயிகளின் பண்ணைகளில் சோதனை செய்தல்.
  • கால்நடைகள் மற்றும் கோழிகள் வளர்ப்பிற்கான வங்கி திட்ட அறிக்கைகள் கட்டண அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது.
  • கால்நடை மற்றும் கோழிப் பண்ணைகள் தொடர்பான பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்புகள், தீவன விதைகள், தாது உப்புக்கள், குறுந்தகடுகள் மற்றும் புத்தகங்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
  • திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கான குறுகிய கால மற்றும் தேவை அடிப்படையிலான இடம் சாரந்த திட்டங்களை செயல்படுத்துதல்.
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு பற்றிய தரவு தளத்தை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல்.
வ. எண் பல்கலைக்கழகத்தின் வெளியீடுகள் விலை (ரூபாயில்)
1 கறவைமாடு வளர்ப்பு புத்தகம் 50
2 வெள்ளாடு வளர்ப்பு புத்தகம் 50
3 நாட்டுக்கோழி வளர்ப்பு புத்தகம் 50
4 முயல் வளர்ப்பு புத்தகம் 30
5 வெண்பன்றி வளர்ப்பு புத்தகம் 40
6 நவீன முறையில் வான்கோழி வளர்ப்பு புத்தகம் 35
7 கால்நடைகளுக்கேற்ற பசுந்தீவனப் பயிர்கள் புத்தகம் 30
8 கால்நடை பண்ணைப் பொருளாதாரம் புத்தகம் 20
9 ஜப்பானியக் காடை வளர்ப்பு புத்தகம் 40
10 மரபுசார் மூலிகை மருத்துவம் புத்தகம் 25
11 இறைச்சிக்கோழி வளர்ப்பு புத்தகம் 25

வ.எண் பசுந்தீவன விதைகள் விலை (ரூபாயில்) கிலோவுக்கு
1 கோ.எஃப்.எஸ் 29 மற்றும் கோ.எஃப்.எஸ் 31 410
2 ஆப்பிரிக்கன் நெட்டை மக்காசோளம் 90
3 வேலிமசால் 550
4 குதிரைமசால் 850
5 முயல் மசால் 450
6 அகத்தி 1100
7 சவுண்டல் 300

வ.எண் இதர சேவைகள் விலை (ரூபாயில்)
1 தாணுவாஸ் தாதுப்பு கலவை/ கிலோ 75
2 தாணுவாஸ் சுமார்ட் தாதுப்பு கலவை/ கிலோ 65
3 தாணுவாஸ் தாதுப்பு கட்டி/ கிலோ 60
4 கால்நடைக் கதிர் - ஆண்டு சந்தா 200
5 கால்நடைக் கதிர் - ஆயுள் சந்தா 2000
6 கால்நடை தொடர்பான திட்ட அறிக்கைகள் (மொத்த மதிப்பீட்டில்) 0.25 %
7 கோழி இறப்பறி சோதனை (ஒரு கோழிக்கு) 100
8 பண்ணை பார்வையிடல் 200

கல்வி

  • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு, கால்நடைப் பொருட்களின் மதிப்பு கூட்டல் போன்ற சான்றிதலுடன் கூடிய ஒரு மாத சுயவேலைவாய்ப்பு படிப்புகள் கால்நடை தொழிலில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு நடத்தப்படுகின்றன.
  • ஒரு மாத சுயவேலைவாய்ப்பு படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆண்டு முழுவதும் பெறப்பட்டு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகம் (DDE), சென்னை மூலம் நடத்தப்படுகின்றன.

சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகள்

வ. எண் பயிற்சியின் பெயர் கல்வித்தகுதி பயிற்சிக் கட்டணம் பயிற்சிக் காலம்
1 கறவைமாட்டுப் பண்ணையம் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 3000 ரூபாய் 1 மாதம்
2 செம்மறியாடு வளர்ப்பு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 1000 ரூபாய் 1 மாதம்
3 வெள்ளாடு வளர்ப்பு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 3000 ரூபாய் 1 மாதம்
4 பசுந்தீவனம் மற்றும் விதை உற்பத்தி தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 1000 ரூபாய் 1 மாதம்
5 முயல் வளர்ப்புதமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 1000 ரூபாய் 1 மாதம்
6 வெண்பன்றி வளர்ப்பு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 3000 ரூபாய் 1 மாதம்
7 ஜப்பானியக் காடை வளர்ப்பு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 3000 ரூபாய் 1 மாதம்
8 நாட்டுக்கோழி வளர்ப்பு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 3000 ரூபாய் 1 மாதம்

வல்லுநர்கள்

ஆசிரியர் பெயர் வகிக்கும் பதவி மின்னஞ்சல் கைபேசி#
மருத்துவர் பா. பாலமுருகன் உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் vetbala2011@gmail.com +91-9962075873

உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
பை பாஸ் ரோடு, வட ஆண்டாப்பட்டு,
திருவண்ணாமலை – 606 604.
தொலைபேசி: +91-4175-295258
மின்னஞ்சல்: vutrctvm@tanuva.org.in