விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், நாகர்கோயில் @ பறக்கை


தோற்றம்

இம்மையமானது 18-5-1981 அன்று, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு கீழ் கால்நடை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் என்ற பெயரில், 151, சகோதரர் தெரு நாகர்கோவில்- 629001 என்ற முகவரியில் வாடகை கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டு, செயல்பட்டு வந்தது. 1989 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் இம்மையம் 28-07-2000 முதல் நாகர்கோயில் @ பறக்கை- 629601 என்ற முகவரியில் புதிய நிரந்தர கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

28-07-2000 அன்று புதிய கட்டிட திறப்பு விழாவின் போது

குறிக்கோள்கள்

  • முன்கள விரிவாக்க பணியாளர்கள் பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான அறிவியல் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லுதல்.
  • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க இணைப்பை வலுப்படுத்துதல்.
  • கால்நடைகளை அடிப்படையாகக் கொண்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்துவதற்காக கால்நடை உற்பத்திக்கான சூழலை மேம்படுத்துதல்.

சேவைகள்

  • பயிற்சி - வளாகத்தில் மற்றும் வளாகத்திற்கு வெளியே
    • கறவை மாடு வளர்ப்பு
    • செம்மறி ஆடு வளர்ப்பு
    • வெள்ளாடு வளர்ப்பு
    • பசுந்தீவனம் உற்பத்தி
    • பால் பொருட்கள் தயாரித்தல்
    • முயல் வளர்ப்பு
    • வெண்பன்றி வளர்ப்பு
    • ஜப்பானிய காடை வளர்ப்பு
    • நாட்டுக்கோழி வளர்ப்பு
  • கால்நடை பண்ணை பார்வையிட்டு ஆலோசனை வழங்குதல் (கட்டணம் ரூ: 100/-)
  • கோழி இறப்பரிசோதனை மேற்கொண்டு அதற்கு ஏற்ப ஆலோசனை வழங்குதல் (கட்டணம் ரூ: 20/-)
  • கால்நடை நோய் புலனாய்வு மற்றும் நோய்க்கேற்ப ஆலோசனை வழங்குதல்
  • புதிய கால்நடை பண்ணை தொடங்குவதற்கு ஆலோசனை வழங்குதல்
  • கால்நடை மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறைகளோடு சேர்ந்து அரசு திட்டங்களை செயல் ஆக்குதல்
  • கால்நடை பண்ணை அமைக்க வங்கி கடன் பெற திட்ட அறிக்கை தயார் செய்தல். (கட்டணம் 0.25 %)

கல்வி

கால்நடை பண்ணைத் தொழில்கள் மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருகிறது. இத்தொழில்களை அறிவியல் தொழில்நுட்பப்படி செய்தால் உற்பத்தியை பெருக்கி தனிநபர் லாபத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்தலாம். இந்த கருத்தை மையமாகக் கொண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை வளர்ப்புத் தொழிலில் எதிர்கால மனித வள தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு சுய வேலைவாய்ப்பு பயிற்சிகளை இம்மையத்தின் மூலமும் வழங்கி வருகிறது.

சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள்

வ. எண் பயிற்சியின் பெயர் கட்டணம் (ரூ)
1 கறவை மாட்டுப் பண்ணையம் 1000
2 செம்மறி ஆடு வளர்ப்பு 500
3 வெள்ளாடு வளர்ப்பு 1000
4 பசுந்தீவனம் மற்றும் விதை உற்பத்தி 500
5 உரைநோர் மூலம் பால் பொருட்கள் தயாரித்தல் 1000
6 கால்நடை பண்ணை கழிவுகளை பயன்படுத்துதல் 500
7 முயல் வளர்ப்பு 500
8 வெண்பன்றி வளர்ப்பு 2000
9 ஜப்பானிய காடை வளர்ப்பு 1000
10 நாட்டுக்கோழி வளர்ப்பு 1000

தொழில்நுட்ப பரிமாற்றங்கள்

வ எண் பொருள் கட்டணம் (ரூ)
1 தனுவாஸ் தாது உப்பு கலவை ரூ. 45/ Kg
2 வேலி மசால் தீவன விதை ரூ. 550/ kg
3 தீவனச் சோளம் விதை (COFS 29) ரூ. 410/ kg

விற்பனை

பல்கலைக்கழக வெளியீடுகள்

வ. எண் புத்தகத்தின் பெயர் கட்டணம் (ரூ)
1 கறவை மாடு வளர்ப்பு 50
2 வெள்ளாடு வளர்ப்பு 40
3 வெண்பன்றி வளர்ப்பு 40
4 முயல் வளர்ப்பு 30
5 நாட்டுக்கோழி வளர்ப்பு 50
6 இறைச்சி கோழி வளர்ப்பு 30
7 நவீன முறையில் வான்கோழி வளர்ப்பு 35
8 ஜப்பானிய காடை வளர்ப்பு 40
9 கால்நடைகளுக்கு ஏற்ற தீவனப் பயிர்கள் 30
10 பாலும் பால் பொருள்களும் 30
11 இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்கள் 40
12 கால்நடை பண்ணை பொருளாதாரம் 20
13 நாய் வளர்ப்பு 30
14 மரபு சார் மூலிகை மருத்துவம் 25
15 நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு 40
16 மதிப்பூட்டிய மீன் பொருட்கள் 40

உதவி பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
பறக்கை, நாகர்கோவில் - 629 601.
தொலைபேசி: +91–4652286843
மின்னஞ்சல் : nagercoilvutrc@tanuvas.org.in