விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கிருஷ்ணகிரி


தோற்றம்

கிருஷ்ணகிரியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், 20.02.2013 அன்று தொடங்கப்பட்டது இந்த மையம், ஆய்வகத்திலிருந்து விவசாய சமூகத்திற்கு சாத்தியமான தொழில்நுட்பங்களை மாற்றுவதற்கான சேவைகளை வழங்குகிறது மற்றும் பண்ணையாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பரிந்துரைக்கிறது.

குறிக்கோள்கள்

  • முன்கள விரிவாக்க பணியாளர்கள் / பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லுதல்.
  • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க இணைப்பை வலுப்படுத்துதல்.
  • கால்நடைகளை அடிப்படையாகக் கொண்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்காக கால்நடை உற்பத்திக்கான சூழலை மேம்படுத்துதல்

சேவைகள்

  • பயிற்சி - வளாகத்தில் மற்றும் வளாகத்திற்கு வெளியே
  • கறவை மாடுகளில் சினை பிடிக்காமைக்கான சிகிச்சை முகாம்
  • கால்நடைப் பண்ணைகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்குதல்
  • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொழில்நுட்ப வகுப்புகள்
  • கால்நடைக் கண்காட்சி நடத்துதல்
  • விவசாயிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம்
  • புதிய கால்நடை பண்ணை தொடங்குவதற்கு ஆலோசனை வழங்குதல்
  • கால்நடை நோய் புலனாய்வு மற்றும் நோய்க்கேற்ப ஆலோசனை வழங்குதல்

பண்ணையாளர்களுக்கான சான்றிதழ் படிப்புகள் - ஒரு மாதக்கால பயிற்சிகள்

வ.எண் பயிற்சியின் பெயர் கல்வித்தகுதி பயிற்சிக் கட்டணம் பயிற்சிக் காலம்
1 கறவைமாட்டுப் பண்ணையம் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 1000 1 மாதம்
2 செம்மறியாடு வளர்ப்பு 500
3 வெள்ளாடு வளர்ப்ப 1000
4 பசுந்தீவனம் மற்றும் விதை உற்பத்தி 500
5 முயல் வளர்ப்பு 500
6 வெண்பன்றி வளர்ப்பு 2000
7 ஜப்பானியக் காடை வளர்ப்பு 1000
8 நாட்டுக்கோழி வளர்ப்பு 1000

விற்பனை

வ.எண் பல்கலைக்கழகத்தின் புத்தகங்கள் விலை (ரூபாயில்)
1 கறவைமாடு வளர்ப்பு 50
2 வெள்ளாடு வளர்ப்பு 40
3 நாட்டுக்கோழி வளர்ப்பு 50
4 முயல் வளர்ப்பு 30
5 வெண்பன்றி வளர்ப்பு 40
6 நவீன முறையில் வான்கோழி வளர்ப்பு 35
7 கால்நடைகளுக்கேற்ற பசுந்தீவனப் பயிர்கள் 30
8 பாலும் பால் பொருட்களும் 30
9 ஜப்பானியக் காடை வளர்ப்பு 40
10 மரபுசார் மூலிகை மருத்துவம் 25
11 இறைச்சிக்கோழி வளர்ப்பு 25

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம், RTO அலுவலகம் அருகில் , சாமந்தமாலை போஸ்ட்,
ராமாபுரம் , கிருஷ்ணகிரி - 635 115
தொலைபேசி: +91–4343 - 292 307
மின்னஞ்சல் : vutrckgi@tanuvas.org.in