விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர்


தோற்றம்

இம்மையம் 08.04.1999 அன்று முதல் கோயம்புத்தூர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் என இப்பல்கலைக்கழகத்தில் பெயரிடப்பட்டது.

குறிக்கோள்கள்

  • கால்நடை மற்றும் கோழியின வளர்ப்பு, இயற்கை வள மேம்பாடு குறித்த தொழில்நுட்பங்களை முன்கள விரிவாக்கச் செயல்முறைகள் மூலம் பரப்புதல்
  • வளர்ந்துவரும் தேவைகளுக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை உருவாக்கத் தேவையான கால்நடை மற்றும் கோழியின ஆராய்ச்சி, விரிவாக்கம் ஆகிய துறைகளை வலுவாக்குதல்
  • கால்நடை வளர்ப்பினை ஆதாரமாகக் கொண்டவர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு, கால்நடை வளர்ப்புக்கு ஏற்ற சூழலை உருவாக்குதல்

சேவைகள்

  • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு குறித்த உள்நிலைய மற்றும் புறநிலையப் பயிற்சிகள் நடத்துதல்
  • கால்நடை மற்றும் கோழியின வளர்ப்பு குறித்த ஆலோசனைகள் நேரிலும் அஞ்சல், தொலைபேசி, தொடுதிரை, மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் ஆப் செயலி மூலமாகவும் வழங்கல்
  • கால்நடைப் பண்ணைகள் புதிதாகத் தொடங்கப்படும்போதும், நோய்க் கிளர்ச்சியின் போதும் பார்வையிட்டு தகுந்த ஆலோசனை வழங்கல்
  • கோழிகளில் நோய் ஆய்விற்காக இறப்பறி பரிசோதனை நடத்துதல் மற்றும் மாதிரிகள் சேகரிப்பு
  • ப்ரூஸ்ஸெல்லா மற்றும் புள்ளோரம் நோய்களுக்கான இரத்த மாதிரிகளைச் சேகரித்துப் பரிசோதனை செய்தல் மற்றும் விரிவான பரிசோதனைக்காகப் பல்கலைக்கழக மைய ஆய்வகத்திற்கு அனுப்புதல்
  • பயிற்சிகள், நோய் முன்னறிவிப்பு மற்றும் பண்ணை வேளாண்மைத் தகவல் குறிப்புகளைக் கோயம்புத்தூர் வானொலி நிலையத்திற்கு அனுப்புதல்
  • கால்நடை மற்றும் கோழியின வளர்ப்பு குறித்த நவீன தொழில்நுட்பங்களைப் பண்ணையாளர்களுக்கு கொண்டுசேர்த்தல்
  • பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு மையமாகச் செயல்பட்டு மாதிரிச் சேகரிப்பு, பயிற்சி, உள்ளீடு வழங்குதல் மற்றும் தகவல் சேகரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளுதல்
  • கால்நடைப் பண்ணையாளர்கள், புதிய பண்ணைகளை ஆரம்பிப்பதற்கான வங்கிக் கடன் பெறத் திட்ட அறிக்கை வழங்குதல்
  • பல்கலைக்கழகத் தொழில்நுட்பங்கள் குறித்த முன்கள விளக்கம் மற்றும் பண்ணை ஆய்வுகளை மேற்கொள்ளுதல்
  • தரம் உயர்த்தப்பட்ட கோழி இனங்களான வனராஜா, கிராமபிரியா, தானுவாஸ் அசீல் போன்றவற்றை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கோழியின வித்துத் திட்டம் மூலமாக வழங்குதல்

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
63, காளப்பட்டிப் பிரிவு, சரவணம்பட்டி,
கோயம்புத்தூர் – 641035.
தொலைபேசி: +91–422-2669965
மின்னஞ்சல்: coimbatorevutrc@tanuvas.org.in