VCRI, Tirunelveli

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி

கால்நடை மருத்துவ நோய்க்குறியியல் துறை


கால்நடை நோய;க்குறியியல் துறையானது மாணவர் கல்வி, நோய் கண்டறிதல், கால்நடை ஆராய்ச்சிகள், ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள் மற்றும் விலங்கு உரிமையாளர்களுக்கு பயிற்சிகள் போன்ற நோக்கத்துடன் முழு கட்டமைப்பு வசதிகளுடன் 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் வழங்கும் பரிந்துரைக்கப்பட்ட படிப்புகளை கற்பிப்பதன் மூலம் இளங்கலை மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க இந்த துறை மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. மாணவர்களுக்கான பாடநெறிகள், கலந்துரை கொண்ட விரிவுரைகள், செயல்முறைகள் மற்றும் கால்நடை நோயிக்குறியியல் அறிவின் முன்னேற்றத்திற்கான நடைமுறை செயலாக்கத்தின் மூலமாக கற்பிக்கப்படுகின்றன. நோய் பகுப்பாய்தல் சேவையில் வீட்டு விலங்குகள், பண்ணை விலங்குகள், கோழி மற்றும் காட்டு விலங்குகளின் மேற்புறம் மற்றும் திசு நுண்ணோக்கி பரிசோதனைகள் அடங்கும். கால்நடை மருத்துவர்கள், விவசாயிகள், விலங்கு உறிமையாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மருத்துவமனையிலிருந்து அறுவை சிகிச்சை உயிர் திசுக்களின் மாதிரிகள் பெறப்பட்டு நுண்திசுப்பிணி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.


குறிக்கோள்கள்

  • நல்ல தரமான கால்நடை மருத்துவ இளங்கலை கல்வியை வழங்குதல்.
  • கால்நடைகள், கோழிகள், காட்டு விலங்குகள் மற்றும் மீன்களில் ஏற்படும் நோய்களை பிரேத பரிசோதனை, நோய்க்கண்டறிதல் மற்றும் நுண்திசுப்பிணி மூலமாக ஆராயப்படுதல்.
  • முறையான நோய் கண்டறிதல் மற்றும் நோய் நோய்க்கிளர்ச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது.
  • கால்நடை மருத்துவர்களுக்கு உடற்கூறு கண்டறியும் நுட்பங்கள், உயிர் திசுக்களின் மாதிரிகள், மற்ற மாதிரிகள் சேகரிப்பு போன்றவை குறித்து பயிற்சித் திட்டங்களை வழங்குதல்.
  • புற்றுநோயியல், நச்சு நோய்க்குறியியல் மற்றும் விலங்குகளில் நோய்களை உறுதிப்படுத்துவதற்கான மூலக்கூறு கண்டறிதல் ஆகியவற்றில் இடைவிடாமல் வேலை செய்தல்.
  • கள ஆராய்ச்சி சார்ந்த பணிகளை மேற்கொள்ளுதல்.

கல்வி

பொது கால்நடை மருத்துவ நோய்க்குறியியல், உடல் பகுதி சார்ந்த கால்நடை மருத்துவ நோய்க்குறியியல், சிறப்பு கால்நடை மருத்துவ நோய்க்குறியியல், பறவை மருத்துவ நோய்க்குறியியல், நீர்வாழ் விலங்கு நோய்கள், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, கால்நடை மருத்துவ உயிர்வேதியியல் மற்றும் ஆய்வக நோய் கண்டறிதல், கால்நடை மருத்துவ உயிர்வேதியியல் மற்றும் ஆய்வக நோயறிதல் - II ஆகியன கற்பிக்கப்படுகிறது.

சேவைகள்

1. விலங்கு நோய்க்குறியியல் அருங்காட்சியகம்

  • நவீன எல். ஈ .டி ஒளியுடன் அனைவரையும் கவரக்கூடிய கூடிய விலங்கு நோய்க்குறியியல் அருங்காட்சியகம் இத்துறையின் சிறப்பாகும்.
  • இந்த அருங்காட்சியகம் சுமார் 300 வெவ்வேறான மாதிரிகளை வைத்திருக்கிறது. இவை அனைத்தும் நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் மாற்றங்களை விவரிக்கக்கூடியவை.
  • அருங்காட்சியக ஆய்வகத்தில் மீன் நோயியல் மாதிரிகள் காண்பிக்க தனி பிரிவு கொண்டுள்ளது.

2. விலங்கு உடற்க்கூறு அறை

  • இறந்த கால்நடைகளை பிரேத பரிசோதனை செய்வதற்காக நன்கு நிறுவப்பட்ட தனித்தனி விலங்கு பிரேத அறை தனியாக உள்ளது.
  • பெரிய விலங்கு, சிறிய விலங்கு மற்றும் நாய்கள் ஆகியவற்றைப் பிரித்து பிரேதப் பரிசோதனைகளை தனித்தனியாக மேற்கொள்வதற்கு அறையில் பல்வேறு பிரிவுகள் மற்றும் வசதிகள் கொண்டுள்ளது.
  • ரேபிஸ் எனப்படும் வெறிநோய்க்கு தனிப்பிரிவு செயல்படுகிறது.
  • பிரேதப் பரிசோதனைகளுக்குத் தேவையான ஏற்பாடுகள் தயாராக வைக்கப்பட்டு, மொத்த மாதிரிகளைத் தயாரிப்பதற்கான வசதிகளும் உள்ளன.
  • பிரேதப் பரிசோதனை அறையின் பின் பக்கத்தில் முறையான கழிவுகளை அகற்றும் அமைப்புகள் உள்ளது.

3. திசு செய்முறை மற்றும் மூலக்கூறு புற்றுநோயியல் ஆய்வகம்

  • திசுத் தொகுதிகள், நுண்ணிய கண்ணாடி தட்டுக்கள், பல்வேறு சிறப்பு கண்ணாடி சாயமேற்றும் முறை நுட்பங்கள், ஒளிச்சேர்க்கை, போன்ற பொதுவான நோய் கண்டறியும் சேவைகளை மேற்கொள்ள தானியங்கி திசு செயலாக்கம், மற்றும் தானியங்கி சாயமேற்றும் முறை போன்ற நுண்ணிய வசதிகளுடன் நன்கு நிறுவப்பட்ட திசு செய்முறை ஆய்வகம் உள்ளது.
  • சமீபத்தில், நோய் எதிர்ப்பு நுண் திசுவேதியியல் மற்றும் நோய் எதிர்ப்பு உடல் அணு திசுவேதியியல் போன்ற மூலக்கூறு புற்றுவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஒரு தனி பகுப்பாய்வு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு விலங்குகளின் புற்றுக்கட்டிகளின் இயல்பு, நடத்தை, ஆக்கிரமிப்பு மற்றும் முன்கணிப்பு நோயின் முக்கியத்துவத்தை மதிப்பிடுவதற்கு நோய்எதிர்புரதம் கொண்டு ஆய்வகத்தில் கண்டறியும் முறைகள் உள்ளன.

4. நோய் காண ஆய்வகம்

  • இரத்தம் சம்மந்தமான ஆய்வு வேலைகள் மற்றும் இரத்த மாதிரிகளின் உயிர்வேதியியல் பகுப்பாய்வுகளை நடத்துவதற்கான முழுமையான வசதிகளுடன் கூடிய ஆய்வகம் சமீபத்தில் இளங்கலை மாணவர்களுக்கு அறிவை வழங்குவதற்காகவும், விவசாயிகள் மற்றும் விலங்கு உரிமையாளர்களின் நலனுக்காகவும் உருவாக்கப்பட்டது.
  • தானியங்கி இரத்தவியல் ஆய்வுகள் மற்றும் தானியங்கி உயிர்வேதியியல் பகுப்பாய்வுகள் போன்ற விலை உயர்ந்த கருவிகள் வாங்கப்பட்டு ஆய்வகத்தில் வைக்கப்பட்டன.
  • கல்லூரியின் ஆராய்ச்சி அறிஞர்கள், விவசாயிகள் மற்றும் வனத்துறையின் கால்நடை மருத்துவர்கள் இவ்வசதிகளைப் பயன்படுத்தி பயனடைகிறார்கள்.

5. இளங்கலை செய்முறை வகுப்பு அறைகள்

  • நோய்க்குறியியல் படிப்புகள் பயிலும் மாணவர்களின் நலனுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய இளங்கலை வகுப்பு அறைகள் தனியாக நிறுவப்பப்பட்டுள்ளது.
  • 11/2 x 1’ அளவுள்ள காட்சி விளக்கப்படங்கள், மேற்புற திசுமாற்றம் மற்றும் நுண்திசுப்பிணி மாற்றங்களை சித்தரித்து, கால்நடை நோய்க்குறியியலை எளிதில் மாணவர்கள் புரிந்துகொள்ள வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ளன.
  • இதேபோல், கால்நடை நோய்க்குறியியல் ஒவ்வொரு படிப்புக்கும் 1 x 3/4 அளவுள்ள சுமார் 250 லேமினேட் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு மாணவர்களின் மேம்பாட்டிற்காக வகுப்பறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
  • அறையில் எல். சி .டி ப்ரொஜெக்டர் அமைப்புகள் மற்றும் தொடர்ச்சியான கற்பித்தல் மற்றும் கற்றலுக்கான தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவ நோய்க்குறியியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 358.
தொலைபேசி: +91-462 - 2336345
மின்னஞ்சல்: vppvcritni@tanuvas.org.in