VCRI, Tirunelveli

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி

கால்நடை நுண்ணுயிரியல் துறை


கால்நடை நுண்ணுயிரியல் துறை 22/06/2012 அன்று தரமான கல்வி, பயனுள்ள தொடர் ஆராய்ச்சிகள் மற்றும் முடிவு சார்ந்த விரிவாக்க நடவடிக்கைகள் மூலம் கால்நடைகளில் நுண்ணுயிரிகள் ஏற்படுத்தும் தொற்று நோய்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.



குறிக்கோள்கள்

  • கால்நடை மருத்துவம் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு நவீன கல்வி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கால்நடை நுண்ணுயிரியலில் தரமான கல்வியை வழங்குதல்
  • கால்நடை நுண்ணுயிரியலில் ஆராய்ச்சிக்கான ஆய்வக வசதிகளை வழங்குதல்
  • கால்நடைகளை பாதிக்கும் பல்வேறு நோய்களின் பால், சாணம், இரத்தம் போன்ற பல்வேறு மாதிரிகளை ஆய்வு செய்து, நோய்களைக் கண்டறிந்து, அவற்றை கட்டுப்படுத்தும் மற்றும் தடுக்கும் முறைகள் பற்றிய ஆலோசனைகளை வழங்குதல்
  • களப்ணியாளர்களாய் பணிபுரியும் கால்நடை மருத்துவர்களுக்கு நுண்ணுயிரியல் துறை சார்ந்த தொழில் நுட்பங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்த தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயிற்சிகள் வழங்குதல்.

கல்வி

கால்நடை நுண்ணுயிரியல் துறையானது இளங்கலை கால்நடை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு பின்வரும் படிப்புகளை வழங்குகிறது.

  • அலகு I – பொது மற்றும் முறையான கால்நடை நுண்மவியல்
  • அலகு II – கால்நடைப் பூஞ்சையியல்
  • அலகு III – நுண்ணுயிரி உயிர்தொழில்நுட்பவியல்
  • அலகு IV – கால்நடை நோய் எதிர்ப்பு திறனியல் மற்றும் ஊநீரியல்
  • அலகு V – பொது மற்றும் முறையான கால்நடை நச்சுயிரியல்

ஆராய்ச்சி

நீண்ட கால இலக்கு

  • தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள கால்நடைகளில் தொற்று நோய்கள் பரவலை ஆராய்தல்.
  • சிறு அசையூண் பிராணிகளைத் தாக்கும் நச்சுயிரி நோய்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்த நச்சுயிரி மூலக்கூறு ஆய்வகத்தை நிறுவுதல்
  • சிறு அசையூண் பிராணிகளைத் தாக்கும் நச்சுயிரிகளின் மரபணு தரவுகளை ஆவணப்படுத்துதல்.

குறுகிய கால இலக்கு

  • நாட்டுக்கோழிகளில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சயிரிகளைக் கண்டறிதல் மற்றும் வேறுபடுத்துதல்
  • சிறு அசையூண் பிராணிகளில் பல்வேறு நுண்ணுயிரி மருந்துகள் செயலிழப்புடன் கூடிய நுண்ணுயிரி வகைகள் பற்றி ஆராய்தல்
  • சிறு அசையூண் பிராணிகளில் க்ளோஸ்ட்ரிடியம் பெர்ஃப்ரிஜென்ஸ் நுண்ணுயிரி உருவாக்கும் நச்சுப் பொருட்களை வகைப்படுத்துதல்
  • கோழிகளில் ஏவிபாக்டீரியம் பாராகாலினேரம் நுண்ணுயிரி உண்டாக்கும் கொரைசா தொற்றுநோய் பற்றி ஆராய்தல்
  • தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காணப்படும் ஆட்டுக் கொல்லி நோய் (பி.பி.ஆர்) நச்சுயிரியின் மூலக்கூறு வகைபடுத்துதல் மற்றும் நோய் நிகழ்வியல்

குறிப்பிடத்தக்க சாதனைகள்

  • மொத்தமாக 78 ஆராய்ச்சி கட்டுரைகள், 114 ஆராய்ச்சி சுருக்கங்கள், 5 புத்தகங்கள், 21 புத்தக அத்தியாயங்கள், 71 பிரபலமான கட்டுரைகள், 7 துண்டு பிரசுரங்கள் மற்றும் 2 சிறு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
  • இதுவரை, 6 தொலைக்காட்சி மற்றும் 13 வானொலி நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
  • பல்வேறு பயிற்சி நிகழ்ச்சிகளில் 65 தொழில்நுட்ப விரிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து, கால்நடை மற்றும் கோழிகளின் தொற்று நோய்களைக் கண்டறிய 52 நோய்ப் புலனாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • 32 வெகுஜன தொடர்பு மற்றும் கால்நடை சிகிச்சை முகாம்களில் பங்கேற்றது.
  • 31 விவசாயிகள் கலந்துரையாடல் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றது.
  • “விலங்கின நோய் கண்டறிதலில் நவீன மாற்றம்: நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் துல்லியமான பாதை" குறித்த இணையவழி பன்னாட்டு கருத்தரங்கு 07.10.2020 முதல் 09.10.2020 வரை நடத்தப்பட்டது.
  • மாணவர்கள் பயன்பெறும் வகையில் கால்நடைகளுக்கு பயன்படுத்தும் பல்வேறு தடுப்பூசிகள், நோய் கண்டறியும் உதவும் பொருட்கள் தயாரிக்கும் வர்த்தக தயாரிப்புகளை அறிந்து கொள்ள பயாலாஜிக்கல்ஸ் உற்பத்தியாளர்கள் - மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்டது
  • ஆடுகளில் ஊனீர் மற்றும் மூலக்கூறு அடிப்படையில் புரிசெல்லோஸிஸ் நுண்ணுயிரியின் தாக்கம் கண்டறியப்பட்டது
  • ஆடுகளை பாதிக்கும் ஆட்டம்மை நச்சியுரியானது மூலக்கூறு அடிப்படையில் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டது.
  • தமிழ்நாட்டில் மாடுகளில் பாதிப்பினை ஏற்படுத்திய தோல் கழலை நோய் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டது.

விரிவாக்கப் பணிகள்

  • கால்நடைகளை பாதிக்கும் பல்வேறு தொற்று நோய்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்தவும் தடுக்கவும் பால், சாணம், இரத்தம் போன்ற பல்வேறு மாதிரிகள் தொடர்ந்து ஆராயப்படுகின்றன.
  • கால்நடைகளை பாதிக்கும் நோய்களை கட்டுப்படுத்த மற்றும் தடுப்பதற்கு தேவையான உயிர் பாதுகாப்பு முறைகள், தடுப்பூசி அட்டவணை, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கால்நடை பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
  • கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து கால்நடைகளைத் தாக்கும் தொற்று நோய்களைக் கண்டறிவதற்கான நோய்ப் புலனாய்வு பணிகளில் பங்கேற்பது.
  • விவசாயிகள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நலனுக்காக தொழில்நுட்ப விரிவுரைகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.
  • விவசாயிகளுக்கு பயனளிக்கும் தொழில்நுட்ப செய்திகள் அகில இந்திய வானொலி மூலம் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை நுண்ணுயிரியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 358.
தொலைபேசி: +91-462-2336345
மின்னஞ்சல்: vmcvcritni@tanuvas.org.in