கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி
கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை
கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மைபாடத்தில் இளங்கலைபட்டதாரிமாணவர்களுக்கு கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்காகபாடத்திட்டங்கள் ஆகிய ஆகியகால்நடைகள் மற்றும் கோழிகளைக் கையாளும் விஞ்ஞான முறைகள், இனப்பெருக்கம், கால்நடைகளுக்கு உணவளித்தல், கால்நடைகளுக்கானகொட்டகை அமைப்புமற்றும் கால்நடைகளின்பொது மேலாண்மைபோன்றவற்றில்அறிவை வளர்க்கும் நோக்கத்துடன்கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மைதுறையானது 2012 ஆம் ஆண்டுதொடங்கப்பட்டது. இப்பொழுது இந்தத் துறை, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு ஆகிய இரண்டிற்கும் பாடங்களைபயிற்றுவிக்கிறது.
நோக்கங்கள்
கல்வி:
கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்பு மாணவர்களுக்கு இளங்கலை படிப்புகள் மற்றும் கால்நடை உற்பத்தி மேலாண்மையில் முதுகலை கால்நடை அறிவியல் மாணவர்களுக்கு முதுகலை படிப்புகளை வழங்குகிறது.
ஆராய்ச்சி:
கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு மேலாண்மை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றின் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல்.
விரிவாக்கம்:
கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு அறிவியல் முறைகளை விவசாயிகளிடையே பிரபலப்படுத்துதல்.
கல்வி
பொது கால்நடைகள்மற்றும் கோழி மேலாண்மை, தீவன உற்பத்தி மற்றும் பாதுகாத்தல், மிருகக்காட்சிசாலை விலங்குகள் உற்பத்தி மேலாண்மை, விலங்குகள் நலன், கொட்டகை மேலாண்மை, ஆய்வக விலங்குகள் மற்றும் செல்லப்பிராணி உற்பத்தி மேலாண்மை, சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை, காலநிலை மற்றும் கால்நடை உற்பத்தி, பண்ணை விலங்கு நடத்தை, ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்பு அமைப்பு, கால்நடை வணிக மேலாண்மை போன்ற படிப்புகள் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரி மாணவர்களுக்கு இத்துறை மூலம் கற்றுவிக்கப்படுகிறது. மேலும், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரி மாணவர்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்கப் பயன்படுத்தக்கூடிய பல்வேறு அணுகுமுறைகளை அறிந்து கொள்வதற்கு ஏற்பகால்நடைப் பண்ணைகள், விலங்கியல் பூங்காக்கள் மற்றும் குதிரை பண்ணைகளை பார்வையிடுவதற்காக அடிக்கடி களப்பயணங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஆராய்ச்சி
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கன்னி மற்றும் கோடி ஆடு பிரிவுகளை நிறுவி தரமான ஆடுகளை உற்பத்தி செய்து கால்நடை வளர்ப்போருக்கு விநியோகித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்
தமிழகத்தின் தெற்கு வேளாண் காலநிலை மண்டலங்களில் செம்மறியாடு வளர்ப்பில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு முறைகளால் செம்மறியாடுகளின் உடலில் காணப்படும் தாது உப்புகளின் நிலை குறித்த ஆய்வு
தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் காணப்படும் கால்நடை சந்தைகள் குறித்த இலக்கமுறை தரவுத்தளம் நிறுவுதல்
விரிவாக்கம்
கால்நடைகள் மற்றும் கோழி உற்பத்தியை பெருக்க பங்குதாரர்களுக்கு பண்ணை ஆலோசனை சேவைகள் வழங்கப்படுகின்றன.
கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொழில்முனைவோருக்கு தேவையின் அடிப்படையில் பயிற்சி மற்றும் செயல்விளக்கம் நடத்தப்படுகிறது.
உள்கட்டமைப்பு
கால்நடைகள் மற்றும் கோழி இனங்களை கையாள்வதற்கும் நிர்வகிப்பதற்கும் தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் ஆய்வகத்தில் உள்ளன.
நவீன அருங்காட்சியகத்தில் கால்நடைகளுக்கான கொட்டகை மாதிரிகளுடன் பல்வேறு கால்நடைகள் மற்றும் கோழி இனபடங்களும்உள்ளன.
நடைமுறை செயல்விளக்கம் மற்றும் விலங்குகளைக் கையாளுவதற்கும், கட்டுப்படுத்துவதற்கான பகுதிகளும் உள்ளன.
குறிப்பிடத்தக்க சாதனைகள்
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு பயிற்சிகளின் மூலம் அறிவியல் குறிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டது.
தமிழகத்தின் தெற்கு வேளாண் காலநிலை மண்டலங்களில் செம்மறியாடு வளர்ப்பில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு முறைகளால் செம்மறியாடுகளின் உடலில் காணப்படும் தாது உப்புகளின் நிலை குறித்த ஆய்வின் மூலம் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வின்படி தாமிரம், துத்தநாகம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளின் அளவு மண், தாவரங்கள் மற்றும் செம்மறியாட்டின் ரத்த ஊனீர் ஆகியவற்றில் குறைவாக காணப்பட்டது. இந்த தாது உப்புகளின் குறைபாட்டினை நிவர்த்தி செய்வதற்கேற்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் காணப்படும் கால்நடை சந்தைகள் குறித்த இலக்கமுறை தரவுத்தளம் நிறுவப்பட்டது. புதன் கிழமையை தவிர்த்து வாரத்தின் அனைத்து நாட்களும் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை வாரச் சந்தை செயல்படுகிறது. அனைத்து சந்தைகளிலும் கால்நடை வியாபாரிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றனர். பெரும்பான்மையான விற்பனை இடைத்தரகர்களுக்கு கால்நடை வளர்ப்போர் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் காணப்படும் கால்நடை சந்தைகள் குறித்த ஊடாடும் குறுந்தகடு தயாரிக்கப்பட்டது.
தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் காணப்படும் கால்நடை சந்தைகள் குறித்த தகவல் கையேடு வெளியிடப்பட்டது.
தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் காணப்படும் செம்மறியாடுகளின் உடலிலுள்ள தாது உப்புகளின் நிலை குறித்த தகவல் கையேடு வெளியிடப்பட்டது.
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 358.
தொலைபேசி: +91-462-2336345
மின்னஞ்சல்: vpyvcritni@tanuvas.org.in