திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள பயிற்றுவிக்கும் கால்நடை பண்ணை வளாகம் (ILFC) ஆனது இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி 15.05.2012 அன்று நிறுவப்பட்டது, அதன்பின் இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிலின் புதிய விதிமுறைகளின்படி 2017 இல் கால்நடை பண்ணை வளாகம் என பெயர் மாற்றப்பட்டது. கால்நடை பண்ணை வளாகம், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றின் நோக்கத்திற்காக பல்வேறு கால்நடை இனங்கள் மற்றும் கோழிகளின் இனங்களை பராமரிக்க பல பிரிவுகளைக் கொண்டுள்ளது. பல்வேறு பிரிவுகளைப் பராமரிப்பது மட்டுமின்றி, 15 ஏக்கர் நிலத்தில், ஹைப்ரிட் நேப்பியர் புல், கினியா புல், தீவன சோளம் (CoFS29), மற்றும் மரத் தீவனங்கள் பண்ணை விலங்குகளுக்கு உணவளிக்க பயிரிடப்படுகிறது. இந்த பண்ணையில் இனப்பெருக்கம் செய்யும் விலங்குகள், ஒரு நாள் வயதுடைய நாட்டுக்கோழி மற்றும் ஜப்பானிய காடை குஞ்சுகள், விதைகள், மற்றும் தொழு உரம் ஆகியவற்றை பண்ணையாளர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டுவருகின்றது.
வழக்கமான பண்ணை மேலாண்மை நடவடிக்கைகள் தவிர, இந்த பண்ணை வளாகம் இளங்கலை கால்நடை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் கால்நடை பண்ணை நடைமுறைகள் (0+2) பற்றிய பாடத்திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த பாடத்திட்டத்தில், கால்நடை இனங்கள், விலங்குகளை அடையாளம் காணும் முறைகள், பற்கள் மற்றும் வயதை நிர்ணயித்தல், விலங்குகளின் வீட்டுவசதி, உணவு முறைகள், கோழிப்பண்ணை மற்றும் குஞ்சு பொரிப்பக மேலாண்மை மற்றும் பண்ணை விலங்குகளின் வழக்கமான சுகாதார மேலாண்மை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் நிதியுதவி மற்றும் தமிழ் நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக் கழகத்தின் நிதியுதவியோடு கீழ்க்கண்ட ஆராய்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை பண்ணை வளாகம்,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருநெல்வேலி - 627 358.
தொலைபேசி: +91-462-2337309 | +91-94432 08264
மின்னஞ்சல்: ilfcvcritni@tanuvas.org.in