தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள நூலகமானது 2020 – ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் மற்றும் இதழ்கள், இணைய வழி புத்தகங்கள் மூலமாக மாணவர்களுக்கு நல்ல வாசிப்பு தன்மைக்கான சூழலினை வழங்கப்படுகிறது. கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அமர்ந்து படிக்க போதுமான இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நூலகம் வார நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை (திங்கள் முதல் வெள்ளி வரை) சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் 5.00 மணி வரை இயங்குகிறது.
நூலகக் குழுவில் கல்லூரி முதல்வர், பேராசியர்கள் மற்றும் பிற துறை தலைவர்கள் உள்ளனர். இக்கல்லூரியின் முதல்வர் நூலகக் குழுவின் தலைவராகவும், ஒரு பேராசிரியர் மற்றும் தலைவர் இந்நூலகத்தின் பொறுப்பதிகாரி மற்றும் இக்குழுவின் அழைப்பாளராகவும் ( கன்வீனியர்) உள்ளார்.
நூலக பொறுப்பதிகாரி,
நூலகம்,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வீரபாண்டி,
தேனி – 625 534
தொலைபேசி எண்: +91-4546-235401
மின்னஞ்சல்: lib-vcri-thn@tanuvas.org.in