vcri, salem

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம்

கால்நடை ஊட்டச்சத்தியல் துறை

கால்நடை ஊட்டச்சத்தியல் துறை 2020 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி 8995 சதுர அடி பரப்பளவில் இத்துறைக்கான கட்டிடம் கட்டப்பட்டது.


குறிக்கோள்கள்

  • மாணவர்களுக்கு இளங்கலை கல்வியை வழங்குவது.
  • உள்நாட்டில் கிடைக்கும் தீவனங்களில் ஊட்டச்சத்து ஆராய்ச்சியை மேற்கொள்வது.
  • இலாபகரமான கால்நடை வளர்ப்பிற்கு விவசாயிகளுக்கு உதவும் நவீன தீவன தொழில்நுட்பங்களை பின்பற்றுவது.

ஆய்வகங்கள்

இத்துறையில் இரண்டு ஆய்வகங்கள் உள்ளன.

  • a)தீவனம் மற்றும் தீவன பகுப்பாய்வு, மற்றும்
  • b)செயல்முறை வகுப்புகளை நடத்துவதற்கான ஆற்றல் வளர்சிதை மாற்ற ஆய்வகம்

இந்த ஆய்வகங்களில் தீவனம் மற்றும் தீவன மாதிரிகளின் பகுப்பாய்வுக்கான அனைத்து உபகரணங்களும் உள்ளன.

தீவன பதப்படுத்துதல் மற்றும் கலவை ஆலை

செயல்விளக்க நோக்கத்திற்காக ஒரு மணி நேரத்திற்கு 0.5 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு சிறிய தீவன பதப்படுத்தும் ஆலை இத்துறையில் நிறுவப்பட்டுள்ளது. இது இளங்கலை மாணவர்களுக்கு, பல்வேறு கால்நடை மற்றும் கோழி தீவனங்களைத் தயாரிப்பது குறித்த பயிற்சிக்கு உதவுவதோடு கல்லூரியின் கால்நடை பண்ணை வளாகத்தில் பராமரிக்கப்படும் கால்நடைகளுக்கு தீவனமளிக்கப் பயன்படுகிறது.

கல்வி

இத்துறை, இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு இரண்டாம் ஆண்டில் கால்நடை ஊட்டச்சத்து தொடர்பான பாடப்பிரிவுகளை வழங்குகிறது.

ஆராய்ச்சி

இத்துறை, இந்த மாவட்டத்தில் உள்ள கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு உள்ளூரில் கிடைக்கும் தீவனப் பொருட்களைக் கண்டறிந்து, குறைந்த விலையில் கலப்புத்தீவனம் தயாரிக்க விவசாயிகளை ஊக்குவிக்கிறது. மேலும், தீவனம்/உணவுப் பொருட்களில் கலப்படம் மற்றும் மைக்கோடாக்சின்கள் பற்றிய பகுப்பாய்வு விவசாயிகளின் நலனுக்காக மேற்கொள்ளப்படுகிறது.

விரிவாக்கச் சேவைகள்

கால்நடை விவசாயிகளுக்கு, சமச்சீர் தீவன உருவாக்கம், ஊட்டச்சத்து, பண்ணை மாடுகளில் கருவள மேலாண்மை மற்றும் கோழித் தீவனம் குறித்த காலமுறை பயிற்சி அளிக்கப்படுகிறத.

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை ஊட்டச்சத்தியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தலைவாசல் கூட்டுச் சாலை, நத்தக்கரை சுங்கச்சாவடி அருகில்,
சேலம் - 636 112, தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: +91-4282-290998
மின்னஞ்சல்: ann-vcri-slm@tanuvas.org.in