DCAPS

கால்நடை உற்பத்திக் கல்வி மையம்

கோழியின ஆராய்ச்சி நிலையம், மாதவரம் பால் பண்ணைவளாகம், சென்னை


வரலாறு

முதன் முதலில் கோழியின ஆராய்ச்சிநிலையம் 1941ஆம் ஆண்டு நந்தனம், சென்னை-35ல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் நிறுவப்பட்டு, கோழியினம் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுவந்தது. அதனை தொடர்ந்து 2011 ஆண்டு இந்நிலையம் மாதவரம் பால்பண்ணைவளாகத்திற்கு மாற்றப்பட்டு, 3.2 ஹெக்டேர் நிலப்பரப்பில் இயங்கிக்கொண்டிருக்கின்றது.

குறிக்கோள்

  • இளங்கலை மற்றும் முதுகலை ஆராய்ச்சி மாணவர்களுக்கான பறவை இனங்களை கற்பிக்கும் பண்ணையாகவும், மேம்படுத்தப்பட்ட உயரிய கோழியினங்கள் குறிப்பாக பலவண்ண நிறமுடைய இறைச்சிக்கோழிகள், புறக்கடை வளர்ப்பிற்கு உகந்த முட்டை கோழியினங்கள், அலங்கார கோழியினங்கள், ஜப்பானியகாடைகள், வான்கோழி மற்றும் கினிக்கோழி யினங்களை வழங்குதல்.
  • கோழியின உற்பத்தியை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிதிட்டங்களை மேற்கோள்ளுதல்.
  • புதிய வகை கோழியினங்கள், காடைவகைகள், வான்கோழிகள் மற்றும் கினிக்கோழிகளை மேம்படுத்தப்பட்ட அறிவியல் இனப்பெருக்கம் மூலம் உருவாக்குதல்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்க மூலம் நாட்டுவகை கோழியினங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் இந்நிலையத்தின் மிகமுக்கிய நோக்கமாகும்.

சேவைகள்

  • இந்த ஆராய்ச்சி நிலையம், கோழி, ஜப்பானியக் காடை, வான்கோழி மற்றும் கினிக்கோழி ஆகியவற்றில் தேவையின் அடிப்படையிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது.
  • ஆராய்ச்சி திட்டங்களின் முக்கிய கண்டுபிடிப்புகளை பல்கலைக்கழக மையங்கள் மூலம் பயனாளிக்கு மாற்றுதல்.
  • புதிய இனப்பெருக்க திட்டமான செயற்கை முறை கருவூட்டல் மூலம் நோய்எதிர்ப்பு சக்திபெறும் இந்தியாவின் தட்ப வெப்ப சூழ்நிலைக்கு உகந்த புதிய இனங்களை கலப்பின இனப் பெருக்கதின் மூலம் உருவாக்குதல்..
  • இதை தவிர புதியவகை தனுவாஸ் முட்டைகாடைகள், தாய் இறைச்சி காடைவகைகள், வணிகரீதிக்கு தேவைக்காக கலப்பின இறைச்சிகான காடைவகைகளை உருவாக்குதல்.
  • வான்கோழிகளில் 16வது வார உடல் எடையை அதிகரிக்க தேவையான ஆராய்ச்சிதிட்டங்களை மேற்கொள்வது.
  • வெள்ளை இரக கினிக்கோழிகளை உருவாக்கி அவற்றை அறிமுகப்படுத்துவது.
  • கருவுறுத்தல் மற்றும் குஞ்சுபொரிப்பு திறனை அதிகரிக்க மேம்படுத்தப்பட்ட இனவிருத்தி ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொள்வது.

கல்வி

இளங்கலை

இளங்கலை மாணவர்களுக்காக, குறிப்பாக சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, கால்நடைமருத்துவக் கல்லூரிமற்றும் ஆராய்ச்சிநிலையம், நாமக்கல், திருநெல்வேலிமற்றும் ஒரத்தநாடு பயிற்சி மருத்துவமாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

முதுகலை

கால்நடைதுறையில் குறிப்பாக கோழியின அறிவியல் சம்மந்தப்பட்ட முதுகலை மாணவர்களுக்கு தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்நிறுவனம் பெரும் பங்கு வகிக்கின்றது. இந்தஆராய்ச்சி நிலையமானது சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள கல்வி நிறுவனங்களின் பல்கலைக்கழக உயிரியல் ஆராய்ச்சிக்கு தேவையான கருமுட்டை, அடைகாத்தமுட்டை மற்றும் ஆராய்ச்சிக்கு தேவையான கோழியினங்களை கொடுத்து உதவுகிறது. இந்த ஆராய்ச்சிநிலையத்தின் மூலம் 36 முனைவர் பட்டம் மற்றும் 124 முதுகலை ஆராய்ச்சிக்கான ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

சாதனைகள் / வெளியிடப்பட்டதொழில்நுட்பங்கள்

அதிக உற்பத்தித் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு வகைகளை கொண்ட கோழிகள், ஜப்பானியக் காடை, வான்கோழி மற்றும் கினிக்கோழிகளை இவ்வாராய்ச்சி நிலையம் உருவாக்கியுள்ளது. அவை நந்தனம் கோழி 1, நந்தனம் இறைச்சிக்கோழி 2, நந்தனம் இறைச்சிக்கோழி 3, நந்தனம் கோழி 4, தனுவாஸ் அசீல், நந்தனம் காடை 1, நந்தனம் காடை 2, நந்தனம் காடை 3, நந்தனம் வான்கோழி 1, நந்தனம் வான்கோழி 2 மற்றும் நந்தனம் கினிக்கோழி 1.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கோழியின ஆராய்ச்சி நிலையம்,
மாதவரம் பால் பண்ணை வளாகம், சென்னை- 600 051
தொலைபேசி எண்: +91-44-25552650
மின்னஞ்சல்: ippm@tanuvas.org.in