கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் புறநகர் மருத்துவமனை

மாதவரம் பால் பண்ணை, பல்கலைக்கழகத் தலைமையகத்தில் 01.04.1995அன்று பல்கலைக்கழகத்தின் முதல் புறநகர் கால்நடை மருத்துவமனையாகக் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் புறநகர் மருத்துவமனை நிறுவப்பட்டது. இது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிகிச்சை இயக்குநரகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

நோக்கங்கள்

  • வட சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள பண்ணை மற்றும் செல்லப்பிராணிகளுக்குத் தரமான கால்நடைச் சிகிச்சை மற்றும் சுகாதாரச் சேவைகளை வழங்குவதே இம் மருத்துவமனையின் முதன்மையான பணியாகும்.
  • கூடுதலாக, இந்த மருத்துவமனை பல்கலைக்கழகப் பண்ணைகள், மாதவரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிறிய அளவிலான பால் உற்பத்தியாளர்களுக்குத் தரமான கால்நடைச் சிகிச்சை மற்றும் சுகாதாரச் சேவைகளை வழங்குகிறது

மருத்துவமனையின் பணி விவரம்

  • மருத்துவச் சேவைகள்
  • மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சி
  • மருத்துவ மனித வள மேம்பாடு
  • மருத்துவ ஆராய்ச்சி
  • விரிவாக்கம்

மருத்துவச் சேவைகள்

  • மாடு, எருமை, ஆடு, செம்மறியாடு, குதிரை போன்ற பண்ணை விலங்குகளுக்கான மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை சேவைகள்
  • செயற்கை முறைக் கருவூட்டல் மற்றும் இனப்பெருக்கச் சுகாதாரச் சேவைகள்
  • நாய், பூனை மற்றும் பிற சிறிய செல்லப்பிராணிகளுக்கான மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை சேவைகள்
  • நாய், பூனை மற்றும் பிற சிறிய செல்லப்பிராணிகளுக்கான பிறப்புக் கட்டுப்பாடு
  • சிறப்பு நோயறிதல் மற்றும் பரிந்துரைச் சேவைகள்
  • பர்வோ-டிஸ்டெம்பர்-லெப்டோஸ்பிரோசிஸ் தடுப்பூசிகள், ரேபிஸ் எதிர்ப்புத் தடுப்பூசிகள், நாய் கடித்தல் பராமரிப்பு
  • கால்நடைச் சுகாதாரச் சேவைகளான குடற்புழு நீக்குதல், கால்நடைகள் ஒட்டுண்ணிகளிலிருந்து விடுபடச் சிகிச்சை, காதுப் பராமரிப்பு, தோல் பராமரிப்பு போன்றவை.

மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சி

சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரியின் இளநிலைப் பட்ட மாணவர்களின் ஆம்புலேட்டரி கால்நடை மருத்துவத் திட்டத்திற்கான பயிற்சி மையமாகச் செயல்படுகிறது

இளநிலைப் பட்டதாரிகளுக்கான மருத்துவப் பயிற்சி

  • நாமக்கல், திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாடு, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இளநிலைப் பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சி
  • வெளிநாட்டு மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சி.

மருத்துவ ஆராய்ச்சி

பண்ணை மற்றும் செல்லப்பிராணிகளின் பல்வேறு நோய்கள் பற்றிய மருத்துவ ஆராய்ச்சி இந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது. அரிய மற்றும் குறிப்பிடத்தக்க மருத்துவ நோய்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி விலங்குகளுக்கும் மருத்துவச் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன

விரிவாக்கம்

  • விரிவாக்கச் சேவைகள் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் புற மருத்துவமனையின் அன்றாட நடவடிக்கைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பண்ணை ஆலோசனைச் சேவைகள் நாள்தோறும் மேற்கொள்ளப்படுகின்றன.
  • மற்ற குறிப்பிடத்தக்க திட்டங்கள்: வெறிநோய் -ரேபிஸ் விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசித் திட்டம்.

மருத்துவ வசதிகள் மற்றும் சேவைகள்

  • மருத்துவப் பிரிவு
  • இதயவியல் சிறப்புச் சேவைகள்.
  • அல்ட்ராசோனோகிராபி மற்றும் கலர் டாப்ளர் ஸ்கேன்
  • அவசர மருத்துவச் சிகிச்சை

அறுவைச் சிகிச்சை வசதிகள் மற்றும் சேவைகள்

  • அறுவைச் சிகிச்சைப் பிரிவு
  • செல்லப்பிராணிகள் அறுவைச் சிகிச்சைஅரங்கம்
  • பெரிய பிராணிகள் அறுவைச் சிகிச்சைஅரங்கம்
  • கதிரியக்கப் பிரிவு
  • உடற்பயிற்சி சிகிச்சை வசதிகள்

இனப்பெருக்கச் சேவைகள் மற்றும் வசதிகள்

  • இனப்பெருக்கச் சிகிச்சைப் பிரிவு
  • செயற்கை முறைக் கருவூட்டல் பிரிவு
  • பிறப்புக் கட்டுப்பாட்டுப் பிரிவு

ஆய்வக ஆதரவு

மாதவரத்தில் உள்ள பல்கலைக்கழக மைய ஆய்வகம், மனித மற்றும் விலங்கினத்திற்கிடையே பரவும் நோய்கள் ஆராய்ச்சிக்கூடம், சென்னை வேப்பேரியில் உள்ள மைய ஆய்வுக் கருவிக்கூடம் ஆகியவற்றிலிருந்து இந்த மருத்துவமனை ஆய்வக வசதிகளைப் பெறுகிறது.

கட்டணம்

மருத்துவமனையில் நடைமுறையில் உள்ள கட்டணம் கீழே வருமாறு;

சேவைகள் ரூபாய்
பதிவுக் கட்டணம் (1 வாரத்திற்குச் செல்லுபடியாகும்) 50.00
முக்கிய அறுவைச் சிகிச்சை- (நாய்கள், பூனைகள்) 500 .00
சிறு அறுவைச் சிகிச்சை - (நாய்கள், பூனைகள்) 200 .00
பெரிய விலங்குகளுக்கான அறுவைச் சிகிச்சை 50.00
எக்ஸ்-ரே 50.00
எக்ஸ்-ரே- பேதம் காட்டு 200.00
செயற்கை முறைக் கருவூட்டல் ஒரு டோஸ் (மாடு மற்றும் எருமை) 15.00

மருத்துவமனையின் வேலை நேரம்

  • வேலை / வார நாட்களில் காலை 8.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை
  • அரசு விடுமுறை நாட்களில் காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை

அலுவலக நேரம்:

  • வேலை / வார நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

வல்லுநர்கள்

  • முனைவர் கோ. விஜயகுமார், பேராசிரியர் மற்றும் தலைவர்
  • முனைவர் பி.கௌரி, பேராசிரியர்
  • முனைவர் ஏ. மேதை, உதவிப் பேராசிரியர்
  • முனைவர் எம். ஷிஜு சைமன், உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு:

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் புறநகர் மருத்துவமனை,

மாதவரம் பால் பண்ணை, சென்னை - 600 051.

மின்னஞ்சல்: vuph_madhavaram@tanuvas.org.in