குறிக்கோள்:
கால்நடை மருத்துவத்தில் இளங்கலை மற்றும் முதுகலை கல்வி கற்பிப்பது
- கால்நடைகள் மற்றும் கோழி நோய்களை மருத்துவ ரீதியாக நிரூபிப்பது
- கால்நடை மருத்துவம் தொடர்பான களம் சார்ந்த ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொள்வது
- ஆய்வக தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு சென்றடையும் விதத்தில் செயல்படுதல்
சேவைகள்:
மருத்துவ பரிந்துரை சேவைகள்
- தோல் நோய் மருத்துவ உயர்சிகிச்சை பிரிவு
- தீவிர மற்றும் அவசர உயர்சிகிச்சை பிரிவு
- இதய மின்னலை மற்றும் மீயொலி ஆய்வு பிரிவு
- உள்நோக்கி மருத்துவ உயர்சிகிச்சை பிரிவு
- சிறிய விலங்கு மருத்துவம் பரிந்துரை மருத்துவமனை
- நரம்பியல் மருத்துவ உயர்சிகிச்சை பிரிவு
- பெரிய விலங்கு அவசர மற்றும் தீவிர பராமரிப்பு பிரிவு
- எழமுடியா படுகிடை நோய்க்கான சிகிச்சை பிரிவு
மருத்துவ வசதிகள்
- மடிவீக்கம் கண்டறிதல் மற்றும் மருத்துவ சேவை
- வளர்சிதை மாற்ற நோய்களை கண்டறிதல்
- பன்றிகளுக்கான மருத்துவ சேவை வசதிகள்
- கோழிகளுக்கான மருத்துவ வசதிகள்
- பாலூட்டும் பசுக்களுக்கான Nநுகுயு மதிப்பீடு
- குதிரைகளுக்கான விரைவு மருத்துவ சேவைகள்
- இடமாற்றம் செய்யக்கூடிய படுக்கிடை மாடுகளுக்கான ஸ்லிங்ஸ்
- எலக்ட்ரோ கார்டியோகிராபி
- எக்கோ கார்டியோகிராபி
- அல்ட்ராசோனோகிராபி
- எண்டோஸ்கோபி
துறையின் உள்கட்டமைப்பு
இந்தத் துறையானது நோய் கண்டறிதல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளைச் செய்வதற்கான அடிப்படை மற்றும் மேம்பட்ட உபகரணங்களுடன் கூடிய நோய் ஆய்வு ஆய்வகத்தையும் நன்கு நிறுவியுள்ளது.
உபகரணங்கள்
- உயர்தரப்பட்ட நுண்ணோக்கி
- அரை தானியங்கி பகுப்பாய்வி
- இரட்டை பீம் ஸ்பெக்ட்ரோஃபோட்டோமீட்டர்
- மின்பகுபொருள் பகுப்பாய்வு கருவி
- அவசர மற்றும் முக்கியமான பராமரிப்பு உபகரணங்கள்
- பெருவயிறு திரவம் பிரித்தெடுக்கும் அளவீடும் கருவி
- தோல்நோய் அறியும் விளக்கு
- பாலுக்கான மின் கடத்துத்திறன் மீட்டர்
- கற்பித்தல் ஸ்டெதாஸ்கோப்
- ஃபெரோஸ்கோப் (மெட்டல் டிடெக்டர்)
- காட்டு விலங்குகளை கட்டுப்படுத்தும் கருவிகள்
கல்வி:
இந்திய கால்நடை மருத்துவ குழுமம் ஒழுங்குமுறையின்படி பின்வரும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை கால்நடை மருத்துவத் துறை வழங்குகிறது:
இளங்கலை படிப்பு
கால்நடை மருத்துவ கல்வியில் குறைந்தபட்சம் தரம் குறித்த 2016 விதிமுறைகளின்படி கால்நடை மருத்துவத் துறை இளங்கலை மாணவர்களுக்கு பின்வரும் படிப்புகளை வழங்குகிறது. ஆய்வகப் பணிகளை மேற்கொள்வதற்கான உள்கட்டமைப்பும் இத்துறையில் உள்ளது.
கால்நடை மருத்துவம் (4+1)
- அலகு - 1 – கால்நடை பொது மருத்துவம்
- அலகு - 2 – உடல் அமைப்பு சார்ந்த நோய்கள்
- அலகு - 3 - வளர்சிதை மாற்றம் மற்றும் குறைபாடு நோய்கள்
- அலகு - 4 - மிருகக்காட்சிசாலை மற்றும் காட்டு விலங்கு மருத்துவம்
- அலகு - 5 - பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ரிக்கெட்சியல் நோய்கள்
- அலகு - 6 - வைரஸ் மற்றும் ஒட்டுண்ணி நோய்கள்
- அலகு - 7 - நீதித்துறை, நெறிமுறைகள் மற்றும் விலங்குகள் நலன்
செயல்விளக்க வகுப்புகள்
- அலகு -1 - கால்நடை பொது மருத்துவம்
- அலகு -2 - உடல் அமைப்பு சார்ந்த நோய்கள்
- அலகு -3 - மிருகக்காட்சிசாலை மற்றும் காட்டு விலங்கு மருத்துவம்
- அலகு -4 - பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ரிக்கெட்சியல் நோய்கள்
- அலகு -5 - வைரஸ் மற்றும் ஒட்டுண்ணி நோய்கள்
முதுகலை படிப்பு
கால்நடை மருத்துவத் துறை 2020 முதல் முதுகலை படிப்புகளை வழங்குகிறது. ஆய்வகப் பணிகளை மேற்கொள்வதற்கான உள்கட்டமைப்பும் இந்தத் துறையில் உள்ளது. இதுவரை 2 முதுகலைப் பட்டதாரிகள் முதுகலைப் பட்டம் முடித்துள்ளனர்
ஆராய்ச்சி
நடந்த முடிந்த ஆராய்ச்சி திட்டங்கள்
வ.எண் |
தலைப்பு |
நிதி |
முகமையின் பெயர் |
1 |
மோப்ப நாய்களில் அறிவாற்றல் பற்றாக்குறை,; மோப்பம் கண்டறிதலின் தாக்கம் மற்றும் மோப்ப நாய்களின் தேர்வு முறை |
ரூ. 45.78 லட்சம் |
இந்திய உயிர்நுட்பவியல் துறை |
2 |
பால்சார்ந்த உயிர்குறியீடுகளுக்காக காசநோய் உள்ள பாலில் புரட்டியோமிக் மதிப்பீடு |
ரூ. 50.81 லட்சம் |
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை |
சாதனைகள்/ காப்புரிமைகள்/ தொழில்நுட்ப பரிமாற்றங்கள்:
- கறவை மாடுகளில் கால்சியம் சத்து குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிய உதவும் இ,சி.ஜி உயிர்குறியீடு உருவாக்கப்பட்டது
- டெல்டா பகுதியில் நீல நாக்கு தொற்று மற்றும் அதன் பரவலாக்கம் பற்றிய கண்காணிப்பு ஆய்வு செய்யப்பட்டது
- காவிரி டெல்டா பகுதியில் கறவை மாடுகளில் குறட்டை நோய் பரவுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
- டெல்டா பகுதியில் டெர்மடோபிலோசிஸ் தொற்றுநோயின் ஆபத்து காரணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
- காவேரி டெல்டா பகுதியில் செம்மறி ஆடுகளில் நீல நாக்கு மற்றும் வீரியம் மிக்க கண்புரை காய்ச்சல் வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
வல்லுநர்கள்
- முனைவர். நா.பிரேமலதா, பேராசிரியர் மற்றும் தலைவர்
- முனைவர். மு.வீரசெல்வம், உதவிப் பேராசிரியர்
- மருத்துவர் சோ. யோகேஷ்பிரியா, உதவிப் பேராசிரியர்
- மருத்துவர் கோ. ஜெயலட்சுமி, உதவிப் பேராசிரியர்
- மருத்துவர் மா. வெங்கடேசன், உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு:
பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை மருத்துவத் துறை
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
ஒரத்தநாடு, தஞ்சாவூர்- 614 625.
தமிழ்நாடு.
தொலைபேசி : 04372 234012/ 234013/ 234016 Ext : 4234
மின்னஞ்சல்: vmdvcriond@tanuvas.org.in