mvc

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு

கால்நடை விரிவாக்கக் கல்வித் துறை


கால்நடை விரிவாக்கக் கல்வித் துறையானது, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு விரிவாக்கக் கல்வி கற்பிக்கும் நோக்கத்துடன் ஏப்ரல் மாதம் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

குறிக்கோள்கள்

  • கால்நடை விரிவாக்கக் கல்வியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு கற்பித்தல்
  • கால்நடை வளர்ப்பின் பல்வேறு அம்சங்களில் விரிவாக்கக் கல்வி ஆராய்ச்சி மேற்கொள்வது
  • கால்நடை மற்றும் கோழி உற்பத்தியில் பல்வேறு விரிவாக்க சேவைகள் அளித்தல் மற்றும் விவசாய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தி அறிவியல் தொழில்நுட்பங்களைப் பரப்புதல்

செயல்பாடுகள்: கல்வி

இளநிலை பட்டப்படிப்பு

  • கால்நடை மற்றும் கால்நடை வளர்ப்பு விரிவாக்கக் கல்வி: 3 +1
  • தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாடு

முதுநிலை பட்டப்படிப்பு:

  • 12 வகையான படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

வ.எண் திட்டத்தின் பெயர் திட்ட மதிப்பீடு (இலட்சம்) நிதிமுகமையின் பெயர்கள் காலம் முதன்மை மற்றும் இணை ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள்
1. விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான கறவை மாடு வளர்ப்பு பயிற்சி 0.58 தமிழ்நாடு மாநில அறிவியல மன்றம் 22.08.2017-24.08.2017 வெ.சசிகலா, கொ.ப.சரவணன்
2. தமிழ்நாட்டின் காவிரி டெல்டா மண்டலத்தில் விவசாயிகளின் நிலையான வாழ்வாதாரத்திற்கான ஒரு கருவியாக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை முறை 2.01 தமிழ்நாடு மாநில கொள்கைக் குழு 2020-21 முனைவர்.வெ.சசிகலா,

இணை ஆராய்ச்சியாளர்கள்:

அ. மணிவண்ணன்,
எம். இராமச்சந்திரன்,
கொ.ப.சரவணன்,
திரு. து. செந்தில்குமார்

விரிவாக்கம்

  • பண்ணை ஆலோசனை மற்றும் ஆலோசனை சேவைகள்- நேரில்/தொலைபேசி
  • பண்ணை வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு
  • பண்ணை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு
  • தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் செயல்பாடுகள்
  • திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்பு படிப்புகள்
  • தொழில்முனைவோர் மேம்பாட்டு நடவடிக்கைகள்
  • கண்காட்சிகள்
  • பயிற்சிகள் / பிரச்சாரங்கள்
  • பல்கலைக்கழக இதழ் (கல்நடை கதிர்) சந்தா
  • பண்ணையாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பண்ணை பார்வையிட ஏற்பாடு செயதல்
  • விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான கால்நடை பண்ணை திட்டம் தயாரித்தல்
  • விவசாயிகள் பயிற்சி/ வலைப்பதிவுகள்/ உழவர் கருத்தரங்கு/ மாநாடு போன்றவை.
  • விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை செயல்பாடுகள்
  • விவசாயிகள் தொடர்பான மற்ற அனைத்து நடவடிக்கைகளும்

உள்கட்டமைப்பு வசதிகள்

  • ஒலி - ஒளி ஆய்வகம்
  • திட்ட ஆய்வகம்
  • கண்காட்சி மற்றும் பண்ணை ஆலோசனை மையம்
  • கருத்தரங்கு மையம்
  • பண்ணையாளர்கள் சிறப்பு பிரிவு

வல்லுநர்கள்

  • முனைவர் அ மணிவண்ணன், பேராசிரியர் மற்றும் தலைவர் │ manivannan.a@tanuvas.ac.in │ 094439 67560
  • முனைவர் வ செந்தில்குமார், இணை பேராசிரியர் │ senthilahe@gmail.com │ 094436 88842
  • மரு. கொ. ப. சரவணன், உதவி பேராசிரியர் │ k.p.saravananvet@gmail.com │ 96555 20544
  • முனைவர் வெ. சசிகலா, உதவி பேராசிரியர் │ sasivetext@gmail.com │ 099528 45780

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்

கால்நடை விரிவாக்கக் கல்வித் துறை

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

ஒரத்தநாடு - 614 625, தஞ்சாவூர் மாவட்டம்

தொலைபேசி : 04372 – 234012 (4218)

மின்னஞ்சல்: extvcriond@tanuvas.org.in