mvc

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி

வனவிலங்கின அறிவியல் துறை


தோற்றம்

  • வனவிலங்கின அறிவியல் துறை, இந்தியாவில் முதன் முறையாக 01.10.1994 அன்று துவங்கப்பட்டது.
  • இத்துறையில் முனைவர் பட்டப் படிப்பு 2011இல் தொடங்கப்பட்டது.


குறிக்கோள்கள்

  • இத்துறையின் முக்கிய நோக்கம், இளங்கலை மாணவர்களுக்கு வனவிலங்குகள் பற்றிய கல்வி மற்றும் பயிற்சி, மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு முதுகலை ஆராய்ச்சி பற்றிய வழிகாட்டுதல்.
  • வனவிலங்குகளைப் பாதிக்கும் நோய்களை, நோயறிதலுக்கான மூலக்கூறு மற்றும் நோயெதிர்ப்பு கண்டறியும் நுட்பங்கள் மற்றும் கருவிகளை உருவாக்குதல் மூலம் கண்டறிதல்.
  • அடைப்பிடம் வாழ் வனவிலங்குகளைப் பாதிக்கும் நோய்களுக்கு தகுந்த சிகிச்சை மற்றும் நோய்க்கட்டுப்பாட்டு வழிமுறைகளை உருவாக்குதல்.
  • பறவையினங்கள் உட்பட வனவிலங்குகளைப் பாதிக்கும் நோய்கள் பற்றிய ஆய்வுகளை நடத்துதல்.
  • அடைப்பிடம் வாழ் வனவிலங்குகளில் இனப்பெருக்கம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை நடத்துதல்.
  • வனவிலங்குகளில் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் விளைவுகளை ஆய்வு செய்தல்.

கல்வி

  • மாறிவரும் சமூகத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டங்கள் மற்றும் சிறப்பு பயிற்சிகள் இத்துறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பயிற்சிகள் மூலம் வனவாழ் மற்றும் அடைப்பிடம் வாழ் வனவிலங்குளின் சுகாதார பராமரிப்பு, மேலாண்மை, மீட்பு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றைக் கையாள குறிப்பிட்ட, தேர்ந்த திறன்களை மாணவர்கள் பெறுகின்றனர்.
  • வகுப்பறை விரிவுரைகள் மற்றும் நடைமுறை பயிற்சிகள் தவிர, மாணவர்கள் வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா (AAZP), மற்றும் கிண்டியில் உள்ள சென்னை பாம்பு பூங்கா அறக்கட்டளை (CSPT) ஆகியவற்றில் களப் பயிற்சித் திட்டத்தையும் மேற்கொள்கின்றனர்.

விரிவாக்கச் சேவைகள்

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் வனவிலங்கு சங்கம் 1990 இல் தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தின் பங்கேற்பு நடவடிக்கைகள் பின்வருமாறு:

  • வனவாழ் மற்றும் அடைப்பிடம் வாழ் விலங்குகள் மற்றும் பறவைகளின் நடைமுறை பழக்கவழக்கங்கள் பற்றிய அறிவைப் புகுத்துதல்.
  • விலங்கியல் பூங்கா கால்நடை மருத்துவர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுடன் அடைப்பிடம் வாழ் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு மேற்கொள்ளப்படும் மேலாண்மை, பராமரிப்பு, இனப்பெருக்கம், நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடல் மற்றும் விரிவுரைகளை நடத்துதல்.
  • வனவிலங்கு முகாம்கள், பறவைகளை பார்க்கும் நிகழ்ச்சிகள் மற்றும் இயற்கை நடை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல்
  • சர்வதேச புலிகள் தினம், வனவிலங்கு வாரம் மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பைக் குறிக்கும் பிற நாட்களில், வன விலங்குகளைப் பாதுகாப்பதற்கான கருத்தில் வினாடி-வினா போட்டி, ஆங்கிலம் மற்றும் தமிழில் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, சுவரொட்டி வடிவமைப்புப் போட்டி, ரங்கோலி போட்டி போன்ற பல்வேறு போட்டிகளை நடத்துதல்.
  • கள கால்நடை மருத்துவர்கள் மற்றும் பிற இலக்கு பார்வையாளர்களுக்கு வனவிலங்கு தொடர்பான தலைப்புகளில் தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள், பயிற்சி மற்றும் பட்டறைகளை நடத்துதல்

நோய் ஆய்வுகள் மற்றும் வனவிலங்கு நல ஆலோசனைகள்

விலங்கியல் பூங்கா கால்நடை மருத்துவர்கள், வனக்கால்நடை மருத்துவர்கள் மற்றும் அரசு சாரா வனவிலங்கு நிறுவனங்களுக்கு வனவிலங்குகளிடையே ஏற்படும் நோய்க் கிளர்ச்சிகளை கண்டறிதல் மற்றும் நிர்வகிப்பதில் உதவுவதற்காக துறையின் பணியாளர்கள் பங்கேற்கின்றனர். சிங்கங்களுக்கு COVID-19 நோய்த்தொற்று கண்டறிதல் மற்றும் சிகிச்சை செய்தல் ஆகியவை சில இந்தத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் பங்கு வகித்த நிகழ்வுகள்.

வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு

காயமடைந்த மற்றும் மீட்கப்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகள் தன்னார்வலர்களால் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக இந்தத் துறைக்கு கொண்டு வரப்படுகின்றன. கரும்பருந்துகள், கூகைகள், ஆசிய குயில்கள், இந்திய பிட்டா போன்றவை சிகிச்சையளிக்கப்பட்டு, வெற்றிகரமாக மறுவாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டன அல்லது வண்டலூர் உயிரியல் பூங்காவிற்க்கு அனுப்பப்பட்டன. குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் பாம்புகளை பாதுகாப்பாக மீட்டு வேறு இடத்திற்கு மாற்றவும் பணியாளர்கள் உதவுகின்றனர்.

பறவை மற்றும் அயல்நாட்டு செல்லப் பிராணிகள் பிரிவு (AEPU)

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி கல்வி கற்பித்தல் மருத்துவமனையின் மருத்துவப் பிரிவில் பிரத்தியேகமான பறவை மற்றும் அயல்நாட்டு செல்லப்பிராணிகள் பிரிவு (AEPU) 28.12.2015 அன்று நிறுவப்பட்டது. வெளிநாட்டு செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் இந்த சிறப்பு பிரிவு துறையால் இயக்கப்படுகிறது. இந்த பிரிவு அனைத்து நாட்களிலும் காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை செயல்படும், அங்கு அவசர மற்றும் வழக்கமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பறவைகளின் மூலக்கூறு பாலினம் அறிதல்

ஒரு பறவைக்கு ரூ. 350 + 18 % GST கட்டணத்தில், இறகுகளைப் பயன்படுத்தி கிளியினங்கள் மற்றும் புறாவினங்களில் டிஎன்ஏ பாலினம் அறிதல் சேவையை இத்துறை வழங்குகிறது.


ஆசிரியர்களின் விவரங்கள்

  • முனைவர் சி. ஸ்ரீகுமார், பேராசிரியர் மற்றும் தலைவர்
  • முனைவர் அ. செந்தில்குமார், பேராசிரியர்
  • முனைவர் மு. பழனிவேல்ராஜன், உதவிப் பேராசிரியர்
  • மருத்துவர் அ. பிரதீபா, உதவிப் பேராசிரியர்

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வனவிலங்கின அறிவியல் துறை,
அடிப்படை அறிவியல் புலம், சென்னைகால்நடைமருத்துவ கல்லூரி,
வேப்பேரி, சென்னை - 600 007
தொலைபேசி: +91-44-25304000
மின்னஞ்சல்: hodwlsmvc@tanuvas