குறிக்கோள்கள்
- இளநிலை மற்றும் முதுநிலைப் பட்ட மாணவர்களுக்கு கால்நடை ஒட்டுண்ணியியல் பாடப் படிப்புகளை வழங்குதல் மற்றும் கற்பித்தல், மேலும் புதுமையான கல்வித் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல்
- விரைவாக நோயறிதல் மற்றும் கட்டுப்பாட்டிற்காக ஒட்டுண்ணி நோய்கள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளுதல்
- ஒட்டுண்ணி நோய்களைக் கண்டறிதல் மற்றும் நவீன கட்டுப்படுத்தும் முறைகள், பயிற்சித் திட்டங்களைக் கால்நடை மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் பரவச்செய்தல்
- கால்நடை மற்றும் செல்லப்பிராணிகளில் ஒட்டுண்ணி நோய்த் தொற்றுகள் பற்றித் தொழில்முனைவோர், உழவர்கள் மற்றும் செல்லப்பிராணி உரிமையாளர்களுக்குத் தொலைக்காட்சி, அகில இந்திய வானொலி, பிரபலமான கட்டுரைகள், துண்டுபிரசுரங்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் எடுத்துரைத்து, அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
உள்கட்டமைப்பு
எல்சிடி வசதியுடன் கூடிய இளநிலைப் பட்ட மாணவர்களுக்கான ஆய்வகம், அருங்காட்சியகம் மற்றும் இணைய இணைப்பு, முதுநிலைப் பட்ட ஆராய்ச்சிக்கான ஆய்வக வசதி ஆகியவை ஒட்டுண்ணி நோய்களை மூலக்கூறு அடிப்படையில் கண்டறிய ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கருவிகள்
- உறைவிப்பான்- 200C மற்றும் 800C
- பி.ஓ.டி. இன்குபேட்டர்
- நிகழ்நேர பி.சி.ஆர் உபகரணம்
- கிரேடியன்ட் பி.சி.ஆர்
- ஜெல் ஆவண அமைப்பு
- லேமினார் ப்ளோ
- கார்பன்-டை- ஆக்ஸைடு இன்குபேட்டர்
- குலுக்கும் இன்குபேட்டர்
- கேமராவுடன் இணைக்கப்பட்ட ஒளி நுண்ணோக்கி
- மைக்ரோ ஒவன்
- எலக்ட்ரோபோரோசிஸ் கருவி
- எலிசா ரீடர்
- கூட்டு, பிரித்தல் மற்றும் தலைகீழ் நுண்ணோக்கி
- பெரிதுபடுத்தும் நுண்ணோக்கி
- உறைவிப்பான் சுழல் படிம விசைக் கருவி
- பயோ ஸ்பேக்ட்ரோமீட்டர்
- இரத்தச் செல்களை அளவிடும் கருவி
- நுண்சுழல் படிம விசைக் கருவி
- மின்னணு எடை சாதனம்
தொடர்புக்கு:
பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை ஒட்டுண்ணியியல் துறை
சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை- 600 007
தொலைபேசி: 044-25304000 , விரிவு: 2042
மின்னஞ்சல்: hodagbmvc@tanuvas.org.in